பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 36 | Job 36
Elihu Describes God’s Power
1 பின்னும் எலிகூ:
1 And Elihu continued:
1 எலிகூ தொடர்ந்து பேசலானான்:
2 நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
2 “Bear with me a little longer, and I will show you that there is more to be said on God’s behalf.
2 சற்றுப் பொறும்; காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய் நான் கூற வேண்டியவற்றை.
3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.
3 I get my knowledge from afar, and I will ascribe justice to my Maker.
3 தொலையிலிருந்து என் அறிவைக் கொணர்வேன்; எனை உண்டாக்கியவர்க்கு நேர்மையை உரித்தாக்குவேன்.
4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
4 For truly my words are free of falsehood; one perfect in knowledge is with you.
4 ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்; அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.
5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
5 Indeed, God is mighty, but He despises no one; He is mighty in strength of understanding.
5 இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.
6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
6 He does not keep the wicked alive, but He grants justice to the afflicted.
6 கொடியவரை அவர் வாழவிடார்; ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;
7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.
7 He does not take His eyes off the righteous, but He enthrones them with kings and exalts them forever.
7 நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்; அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்; என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.
8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
8 And if men are bound with chains, caught in cords of affliction,
8 ஆனால் அவர்கள் சங்கிலியால் கட்டுண்டாரெனில், வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,
9 அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
9 then He tells them their deeds and how arrogantly they have transgressed.
9 அவர்கள் செய்ததையும் மீறியதையும், இறுமாப்புடன் நடந்ததையும் எடுத்து இயம்புவார்.
10 அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
10 He opens their ears to correction and commands that they turn from iniquity.
10 அறிவுரைகளுக்கு அவர்கள் செவியைத் திறப்பார்; தீச்செயலிலிருந்து திரும்புமாறு ஆணையிடுவார்.
11 அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
11 If they obey and serve Him, then they end their days in prosperity and their years in happiness.
11 அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால், வளமாய்த் தங்கள் நாள்களையும் இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.
12 அடங்கார்களாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
12 But if they do not obey, then they perish by the sworda and die without knowledge.
12 செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர். அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.
13 மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
13 The godless in heart harbor resentment; even when He binds them, they do not cry for help.
13 தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்; அவர்களை அவர் கட்டிப்போடுகையில் உதவிக்காகக் கதறமாட்டார்.
14 அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.
14 They die in their youth, among the male shrine prostitutes.
14 அவர்கள் இளமையில் மடிவர்; காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.
15 சிறுமைப்பட்டர்வகளை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.
15 God rescues the afflicted by their afflictionb and opens their ears in oppression.
15 துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்; வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.
16 அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
16 Indeed, He drew you from the jaws of distress to a spacious and broad place, to a table full of richness.
16 இடுக்கண் வாயினின்று உங்களை இழுத்துக் காத்தார்; ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார். உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.
17 ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
17 But now you are laden with the judgment due the wicked; judgment and justice have seized you.
17 பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது; தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.
18 உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும்பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.
18 Be careful that no one lures you with riches; do not let a large bribe lead you astray.
18 வளமையால் வழிபிறழாமல் பார்த்துக்கொள்ளும்; நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.
19 உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரணபராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
19 Can your wealthc or all your mighty effort keep you from distress?
19 உம் நிறைந்த செல்வமும் வல்லமையின் முழு ஆற்றலும் இன்னலில் உமக்கு உதவுமா?
20 ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.
20 Do not long for the night, when people vanish from their homes.
20 இருந்த இடத்திலேயே மக்கள் மடியும் இரவுக்காக ஏங்காதீர்.
21 அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும், உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
21 Be careful not to turn to iniquity, for this you have preferred to affliction.
21 துன்பத்தைவிட தீச்செயலையே நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.
22 இதோ தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
22 Behold, God is exalted in His power. Who is a teacher like Him?
22 இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்; அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?
23 அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
23 Who has appointed His way for Him, or told Him, ‘You have done wrong’?
23 அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்? அவர்க்கு 'நீர் வழிதவறினிர்" எனச் சொல்ல வல்லவர் யார்?
24 மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியை நீர் மகிமைப்படுத்த நினையும்.
24 Remember to magnify His work, which men have praised in song.
24 அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும். மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.
25 எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
25 All mankind has seen it; men behold it from afar.
25 மனித இனம் முழுவதும் அதைக் கண்டது; மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.
26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
26 Indeed, God is great—beyond our knowledge; the number of His years is unsearchable.
26 இதோ! இறைவன் பெருமை மிக்கவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்; அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை; கணக்கிட முடியாதவை.
27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
27 For He draws up drops of water which distill the rain from the mist,
27 நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.
28 அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
28 which the clouds pour out and shower abundantly on mankind.
28 முகில்கள் அவற்றைப் பொழிகின்றன; மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.
29 மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
29 Furthermore, who can understand how the clouds spread out, how the thunder roars from His pavilion?
29 பரவும் முகில்களையும் அவர்தம் மணிப்பந்தலின் ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?
30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார்.
30 See how He scatters His lightning around Him and covers the depths of the sea.
30 இதோ! தம்மைச் சுற்றி மின்னல் ஒளிரச் செய்கின்றார். கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.
31 அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.
31 For by these He judgesd the nations and provides food in abundance.
31 இவற்றால், மக்களினங்கள்மீது தீர்ப்பளிக்கின்றார்; அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.
32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை, அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
32 He fills His hands with lightning and commands it to strike its mark.
32 மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்; இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.
33 அதினால் அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.
33 The thunder declares His presence; even the cattle regard the rising storm.
33 இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்; புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
12 a Or they will cross the river of death
15 b Or in their affliction
19 c Or your cry for help
31 d Or governs or nourishes
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.