பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 37 | Job 37
Elihu Proclaims God’s Majesty
1 இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
1 “At this my heart also pounds and leaps from its place.
1 இதைக்கண்டு நடுங்குகிறது என் இதயம்; தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.
2 அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.
2 Listen closely to the thunder of His voice and the rumbling that comes from His mouth.
2 அவரது குரலின் இடியோசையையும் அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும் கவனமுடன் கேளுங்கள்.
3 அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
3 He unleashes His lightning beneath the whole sky and sends it to the ends of the earth.
3 விசும்பின்கீழ் மின்னலை மிளிரச் செய்கின்றார்; மண்ணகத்தின் எல்லைவரை செல்ல வைக்கின்றார்.
4 அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
4 Then there comes a roaring sound; He thunders with His majestic voice. He does not restrain the lightning when His voice resounds.
4 அதனை அடுத்து அதிரும் அவர் குரல்; பேரொலியில் அவர் முழங்கிடுவாரே; மின்னலை நிறுத்தார் அவர்தம் குரல் ஒலிக்கையிலே.
5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.
5 God thunders wondrously with His voice; He does great things we cannot comprehend.
5 கடவுள் வியத்தகு முறையில் தம் குரலால் முழங்குகின்றார்; நம் அறிவுக்கு எட்டாத பெரியனவற்றைச் செய்கின்றார்.
6 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
6 For He says to the snow, ‘Fall on the earth,’ and to the gentle rain, ‘Pour out a mighty downpour.’
6 ஏனெனில், உறைபனியை 'மண்மிசை விழு" என்பார்; மாரியையும் பெருமழையையும் 'உரத்துப் பெய்க" என்பார்.
7 தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
7 He seals up the hand of every man, so that all men may know His work.
7 எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய, எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.
8 அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
8 The wild animals enter their lairs; they settle down in their dens.
8 பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்; தம் குகைக்குள் அது தங்கும்.
9 தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
9 The tempest comes from its chamber, and the cold from the driving north winds.
9 அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும் வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.
10 தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
10 By the breath of God the ice is formed and the watery expanses are frozen.
10 கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்; பரந்த நீர்நிலை உறைந்து போகும்.
11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
11 He loads the clouds with moisture; He scatters His lightning through them.
11 அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்; கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.
12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
12 They swirl about, whirling at His direction, accomplishing all that He commands over the face of all the earth.
12 மேகம் அவரது ஆணைப்படியே சுழன்று ஆடும்; அவர் ஆணையிடுவதை எல்லாம் மண்மிசை செய்யும்.
13 ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும் ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரப்பண்ணுகிறார்.
13 Whether for punishment or for His land, He accomplishes this in His loving devotion.
13 கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.
14 யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
14 Listen to this, O Job; stand still and consider the wonders of God.
14 யோபே! செவிகொடும்; இறைவனின் வியத்தகு செயல்களை நின்று நிதானித்துக் கவனியும்.
15 தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ.
15 Do you know how God dispatches the clouds or makes the lightning flash?
15 கடவுள் எவ்வாறு அவற்றை ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ, அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத் தெறிக்கின்றன என்றோ அறிவீரா?
16 மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
16 Do you understand how the clouds float, those wonders of Him who is perfect in knowledge?
16 முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என உமக்குத் தெரியுமா? அவை நிறை அறிவுள்ளவரின் வியத்தகு செயல்கள் அல்லவா!
17 தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ?
17 You whose clothes get hot when the land lies hushed under the south wind,
17 தென்திசைக் காற்றினால் நிலம் இறுக்கப்படுகையில் உம் உடையின் வெப்பத்தால் நீவிர் புழுங்குகின்றீர்.
18 வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?
18 can you, like Him, spread out the skies to reflect the heat like a mirror of bronze?
18 வார்ப்படக் கண்ணாடியை ஒத்த திண்ணிய விசும்பை அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?
19 அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.
19 Teach us what we should say to Him; we cannot draw up our case when our faces are in darkness.
19 நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும் என்று கற்பியும்; இருளின் முகத்தே வகைதெரியாது உழல்கின்றோம்.
20 நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே.
20 Should He be told that I want to speak? Would a man ask to be swallowed upa?
20 'நான் பேசுவேன்" என்று எவர் அவரிடம் சொல்வார்? அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?
21 இப்போதும் காற்று வீசி ஆகாயமண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது,
21 Now no one can gaze at the sun when it is bright in the skies after the wind has swept them clean.
21 காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின் வானில் கதிரவன் ஒளிரும்போது, மனிதர் அதனைப் பார்க்க ஒண்ணாதே!
22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக் கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
22 Out of the north He comes in golden splendor; awesome majesty surrounds Him.
22 பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்; அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.
23 சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
23 The Almighty is beyond our reach; He is exalted in power! In His justice and great righteousness He does not oppress.
23 எல்லாம் வல்லவரை நாம் கண்டுபிடிக்க முடியாது; ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே! நிறைவான நீதியை மீறுபவர் அல்ல.
24 ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் மதிக்கமாட்டார் என்றான்.
24 Therefore, men fear Him, for He is not partial to the wise in heart.”
24 ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்; எல்லாம் தெரியும் என்போரை அவர் திரும்பியும் பாரார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
20 a Or speak without being swallowed up
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.