பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 4 | Job 4
Eliphaz: The Innocent Prosper
1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
1 Then Eliphaz the Temanite replied:
1 அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்:
2 நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
2 “If one ventures a word with you, will you be wearied? Yet who can keep from speaking?
2 "ஒன்று சொன்னால் உமக்குப் பொறுக்குமோ? சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?
3 இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
3 Surely you have instructed many, and have strengthened their feeble hands.
3 பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!
4 விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
4 Your words have steadied those who stumbled; you have braced the knees that were buckling.
4 உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன; தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன.
5 இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
5 But now trouble has come upon you, and you are weary. It strikes you, and you are dismayed.
5 ஆனால் இப்பொழுதோ, ஒன்று உமக்கு வந்துற்றதும் வருந்துகின்றீர்; அது உம்மைத் தாக்கியதும் கலங்குகின்றீர்.
6 உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?
6 Is your reverence not your confidence, and the uprightness of your ways your hope?
6 இறையச்சம் அல்லவா உமது உறுதி? நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?
7 குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
7 Consider now, I plead: Who, being innocent, has ever perished? Or where have the upright been destroyed?
7 நினைத்துப்பாரும்! குற்றமற்றவர் எவராவது அழிந்ததுண்டா? நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?
8 நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
8 As I have observed, those who plow iniquity and those who sow trouble reap the same.
8 நான் பார்த்த அளவில், தீவினையை உழுது, தீங்கினை விதைத்தவர் அறுப்பது அதையே!
9 தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
9 By the breath of God they perish, and by the blast of His anger they are consumed.
9 கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்; அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.
10 சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம்.
10 The lion may roar, and the fierce lion may growl, yet the teeth of the young lions are broken.
10 அரியின் முழக்கமும் கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்; குருளையின் பற்களும் உடைபடும்.
11 கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
11 The old lion perishes for lack of prey, and the cubs of the lioness are scattered.
11 இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்; குலைந்துபோம் பெண்சிங்கத்தின் குட்டிகள்.
12 இப்போதும் ஒருவார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.
12 Now a word came to me secretly; my ears caught a whisper of it.
12 எனக்கொரு வார்த்தை மறைவாய் வந்தது; அதன் மெல்லிய ஓசை என் செவிக்கு எட்டியது.
13 மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
13 In disquieting visions in the night, when deep sleep falls on men,
13 ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில், இரவுக் காட்சியின் சிந்தனைகளில்,*
* யோபு 33:15.
14 திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
14 fear and trembling came over me and made all my bones shudder.
14 அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள, என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.
15 அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
15 Then a spirita glided past my face, and the hair on my body bristled.
15 ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது; என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.
16 அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
16 It stood still, but I could not discern its appearance; a form loomed before my eyes, and I heard a whispering voice:
16 ஆவி நின்றது; ஆனால், அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை; உருவொன்று என் கண்முன் நின்றது; அமைதி நிலவிற்று; குரலொன்றைக் கேட்டேன்.
17 மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?
17 ‘Can a mortal be more righteous than God, or a man more pure than his Maker?
17 கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா? படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?
18 கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே.
18 If God puts no trust in His servants, and He charges His angels with error,
18 அவர் தம் தொண்டர்களிலே நம்பிக்கை வைக்கவில்லையெனில், அவருடைய வான தூதரிடமே அவர் குறைகாண்கின்றாரெனில்,
19 புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
19 how much more those who dwell in houses of clay, whose foundations are in the dust, who can be crushed like a moth!
19 புழுதியைக் கால்கோளாகக்கொண்டு, மண் குடிசையில் வாழ்ந்து, அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும் மனிதர் எம்மாத்திரம்?
20 காலை முதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.
20 They are smashed to pieces from dawn to dusk; unnoticed, they perish forever.
20 காலைமுதல் மாலைவரையில் அவர்கள் ஒழிக்கப்டுவர்; ஈவு இன்றி என்றென்றும் அழிக்கப்படுவர்.
21 அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்.
21 Are not their tent cords pulled up, so that they die without wisdom?’
21 அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட, அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
15 a Or a wind
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.