பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 5 | Job 5
Eliphaz Continues: God Blesses those Who Seek Him
1 இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்.
1 “Call out if you please, but who will answer? To which of the holy ones will you turn?
1 இப்போது கூப்பிட்டுப்பாரும்! யார் உமக்குப் பதிலுரைப்பார்? எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?
2 கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
2 For resentment kills a fool, and envy slays the simple.
2 உண்மையில், அறிவிலியைத்தான் எரிச்சல் கொல்லும்; பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,
3 நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
3 I have seen a fool taking root, but suddenly his house was cursed.
3 அறிவிலி வேரூன்றுவதை நானே கண்டேன்; ஆனால் உடனே அவன் உறைவிடத்தில் வெம்பழி விழுந்தது,
4 அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
4 His sons are far from safety, crushed in court without a defender.
4 அவனுடைய மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில் அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்; மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.
5 பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத் தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
5 The hungry consume his harvest, taking it even from the thorns, and the thirsty pant after his wealth.a
5 அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்; முள்ளுக்கு நடுவிலுள்ளதையும் அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர் அவன் சொத்துக்காகத் துடிப்பர்.
6 தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை, வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
6 For distress does not spring from the dust, and trouble does not sprout from the ground.
6 ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது; மண்ணினின்று இன்னல் விளையாது.
7 அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
7 Yet man is born to trouble as surely as sparks fly upward.
7 நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல, துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.
8 ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.
8 However, if I were you, I would appeal to God and lay my cause before Him—
8 ஆனால், நான் கடவுளையே நாடுவேன்; அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.
9 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
9 the One who does great and unsearchable things, wonders without number.
9 ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத் தக்கனவற்றையும் செய்பவர் அவரே.
10 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
10 He gives rain to the earth and sends water upon the fields.
10 மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.
11 அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
11 He sets the lowly on high, so that mourners are lifted to safety.
11 அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்; அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.
12 தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
12 He thwarts the schemes of the crafty, so that their hands find no success.
12 வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்; அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.
13 அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார், திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
13 He catches the wise in their craftiness,b and sweeps away the plans of the cunning.
13 ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்; வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;1
1 1 கொரி 3:19.
14 அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியானவேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவித் திரிகிறார்கள்.
14 They encounter darkness by day and grope at noon as in the night.
14 அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்; நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.
15 ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
15 He saves the needy from the sword in their mouth and from the clutches of the powerful.
15 அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்; எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.
16 அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
16 So the poor have hope, and injustice shuts its mouth.
16 எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு; அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.
17 இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
17 Blessed indeed is the man whom God corrects; so do not despise the discipline of the Almighty.c
17 இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்; ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.2
2 நீமொ 3:11; எபி 12:5-6.
18 அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
18 For He wounds, but He also binds; He strikes, but His hands also heal.
18 காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.3
3 ஓசே 6:1.
19 ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
19 He will rescue you from six calamities; no harm will touch you in seven.
19 ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்; ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.
20 பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
20 In famine He will redeem you from death, and in battle from the stroke of the sword.
20 பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.
21 நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
21 You will be hidden from the scourge of the tongue, and will not fear havoc when it comes.
21 நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்; நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.
22 பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.
22 You will laugh at destruction and famine, and need not fear the beasts of the earth.
22 அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்; மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.
23 வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.
23 For you will have a covenant with the stones of the field, and the wild animals will be at peace with you.
23 வயல்வெளிக் கற்களோடு உம் உடன்படிக்கை இருக்கும்; காட்டு விலங்குகளோடும் நீர் அமைதியில் வாழ்வீர்.
24 உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்.
24 You will know that your tent is secure, and find nothing amiss when inspecting your home.
24 உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்; உம் மந்தையைச் சென்று காண்கையில் ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.
25 உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
25 You will know that your offspring will be many, your descendants like the grass of the earth.
25 உமது வித்து பெருகுவதையும், உமது வழிமரபினர் நிலத்துப் புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.
26 தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
26 You will come to the grave in full vigor, like a sheaf of grain gathered in season.
26 பழுத்த வயதில் தளர்வின்றிக் கல்லறை செல்வீர், பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.
27 இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படி இருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.
27 Indeed, we have investigated, and it is true! So hear it and know for yourself.”
27 இதுவே யாம் கண்டறிந்த உண்மை! செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுணர்வீர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
5 a Or and a snare snatches his wealth
13 b Cited in 1 Corinthians 3:19
17 c Hebrew Shaddai ; here and throughout Job
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.