பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 6 | Job 6
Job Replies: My Complaint Is Just
1 யோபு பிரதியுத்தரமாக:
1 Then Job replied:
1 யோபு கூறிய பதிலுரையாவது:
2 என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
2 “If only my grief could be weighed and placed with my calamity on the scales.
2 ஓ! என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு, என் இன்னல்கள் அனைத்தும் சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!
3 அப்பொழுது அது கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
3 For then it would outweigh the sand of the seas—no wonder my words have been rash.
3 கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை; பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே;
4 சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
4 For the arrows of the Almighty have pierced me; my spirit drinks in their poison; the terrors of God are arrayed against me.
4 எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு என் உயிரைக் குடிக்கின்றது; கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.
5 புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
5 Does a wild donkey bray over fresh grass, or an ox low over its fodder?
5 காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா? காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?
6 ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
6 Is tasteless food eaten without salt, or is there flavor in the white of an egga?
6 சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா? துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?
7 உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது.
7 My soul refuses to touch them; they are loathsome food to me.
7 அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது; அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!
8 ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,
8 If only my request were granted and God would fulfill my hope:
8 ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்? நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா?
9 தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.
9 that God would be willing to crush me, to unleash His hand and cut me off!
9 அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா? தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?
10 அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.
10 It still brings me comfort, and joy through unrelenting pain, that I have not denied the words of the Holy One.
10 அதுவே எனக்கு ஆறுதலாகும்; அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்; தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்; ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை.
11 நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?
11 What strength do I have, that I should still hope? What is my future, that I should be patient?
11 நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது? என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?
12 என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?
12 Is my strength like that of stone, or my flesh made of bronze?
12 என் வலிமை கல்லின் வலிமையோ? என் சதை வெண்கலத்தாலானதோ?
13 எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே.
13 Is there any help within me now that success is driven from me?
13 இதோ! என்னில் உதவி ஏதுமில்லை; என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.
14 உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.
14 A despairing man should have the kindness of his friend, even if he forsakes the fear of the Almighty.
14 அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர் எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.
15 என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
15 But my brothers are as faithless as wadis, as seasonal streams that overflow,
15 காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும் வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.
16 அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையிலும் கலங்கலாகி,
16 darkened because of the ice and the inflow of melting snow,
16 அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்; அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும்.
17 உஷ்ணங் கண்டவுடனே உருகி வற்றி, அனல் பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.
17 but ceasing in the dry season and vanishing from their channels in the heat.
17 வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும்.
18 அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
18 Caravans turn aside from their routes; they go into the wasteland and perish.
18 வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது; பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.
19 தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
19 The caravans of Tema look for water; the travelers of Sheba hope to find it.
19 தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்; நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.
20 தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள்.
20 They are confounded because they had hoped; their arrival brings disappointment.
20 அவர்கள் நம்பியிருந்தனர்; ஆனால், ஏமாற்றமடைகின்றனர்; அங்கு வந்தடைந்தனர்; ஆனால் திகைத்துப் போகின்றனர்.
21 அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
21 For now you are of no help; you see terror, and you are afraid.
21 இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்; என் அவலம் கண்டீர்கள்; அஞ்சி நடுங்குகின்றீர்கள்.
22 எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;
22 Have I ever said, ‘Give me something; offer me a bribe from your wealth;
22 எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ, உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக் கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா?
23 அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிகாரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
23 deliver me from the hand of the enemy; redeem me from the grasp of the ruthless’?
23 எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ, கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?
24 எனக்கு உபதேசம் பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேனே; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
24 Teach me, and I will be silent. Help me understand how I have erred.
24 அறிவு புகட்டுக! அமைதியடைவேன்; என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!
25 செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன?
25 How painful are honest words! But what does your argument prove?
25 நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?
26 கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
26 Do you intend to correct my words, and treat as wind my cry of despair?
26 என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா? புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா?
27 இப்படிச் செய்து திக்கற்றவன்மேலே நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
27 You would even cast lots for an orphan and barter away your friend.
27 திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்; நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.
28 இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய் சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
28 But now, please look at me. Would I lie to your face?
28 பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்; உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன்,
29 நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.
29 Reconsider; do not be unjust. Reconsider, for my righteousness is at stake.
29 போதும் நிறுத்துங்கள்; அநீதி செய்ய வேண்டாம்! பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;
30 என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
30 Is there iniquity on my tongue? Can my mouth not discern malice?
30 என் நாவில் அநீதி உள்ளதா? என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
6 a Or in the sap of the mallow plant
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.