பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Job  யோபு  אִיּוֹב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

யோபு 8 | Job 8

Bildad: Job Should Repent

1וַ֭יַּעַן בִּלְדַּ֥ד הַשּׁוּחִ֗י וַיֹאמַֽר׃

1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
1 Then Bildad the Shuhite replied:
1 அதற்குச் சூகாயனான பில்தாது கூறிய பதில்:

2עַד־אָ֥ן תְּמַלֶּל־אֵ֑לֶּה וְר֥וּחַ כַּ֝בִּיר אִמְרֵי־פִֽיךָ׃

2 நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்.
2 “How long will you go on saying such things? The words of your mouth are a blustering wind.
2 எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்? உம் வாய்ச்சொற்கள் புயல்காற்றைப் போல் இருக்கின்றன.

3הַ֭אֵל יְעַוֵּ֣ת מִשְׁפָּ֑ט וְאִם־שַׁ֝דַּ֗י יְעַוֵּֽת־צֶֽדֶק׃

3 தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
3 Does God pervert justice? Does the Almighty pervert what is right?
3 இறைவனே நீதியைப் புரட்டுவாரா? எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?

4אִם־בָּנֶ֥יךָ חָֽטְאוּ־ל֑וֹ וַֽ֝יְשַׁלְּחֵ֗ם בְּיַד־פִּשְׁעָֽם׃

4 உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
4 When your children sinned against Him, He gave them over to their rebellion.
4 உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப் பாவம் செய்ததால், குற்றப்பழியின் ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.

5אִם־אַ֭תָּה תְּשַׁחֵ֣ר אֶל־אֵ֑ל וְאֶל־שַׁ֝דַּ֗י תִּתְחַנָּֽן׃

5 நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,
5 But if you would earnestly seek God and ask the Almighty for mercy,
5 ஆனால், நீர் இறைவனை ஆர்வத்துடன் நாடினால், எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,

6אִם־זַ֥ךְ וְיָשָׁ֗ר אָ֥תָּה כִּי־עַ֭תָּה יָעִ֣יר עָלֶ֑יךָ וְ֝שִׁלַּ֗ם נְוַ֣ת צִדְקֶֽךָ׃

6 சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
6 if you are pure and upright, even now He will rouse Himself on your behalf and restore your righteous estate.
6 நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தால் இப்பொழுது கூட அவர் உம்பொருட்டு எழுந்திடுவார், உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.

7וְהָיָ֣ה רֵאשִׁיתְךָ֣ מִצְעָ֑ר וְּ֝אַחֲרִיתְךָ֗ יִשְׂגֶּ֥ה מְאֹֽד׃

7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
7 Though your beginnings were modest, your latter days will flourish.
7 உம்முடைய தொடக்கம் எளிமையாக இருப்பினும், உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.

8כִּֽי־שְׁאַל־נָ֭א לְדֹ֣ר רִישׁ֑וֹן וְ֝כוֹנֵ֗ן לְחֵ֣קֶר אֲבוֹתָֽם׃

8 ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
8 Please inquire of past generations and consider the discoveries of their fathers.
8 முன்னோரின் தலைமுறையைக் கேட்டுப்பாரும்; அன்னாரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.

9כִּֽי־תְמ֣וֹל אֲ֭נַחְנוּ וְלֹ֣א נֵדָ֑ע כִּ֤י צֵ֖ל יָמֵ֣ינוּ עֲלֵי־אָֽרֶץ׃

9 நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
9 For we were born yesterday and know nothing; our days on earth are but a shadow.
9 நேற்றுத் தோன்றிய நாம் ஒன்றும் அறியோம்; நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,

10הֲלֹא־הֵ֣ם י֭וֹרוּךָ יֹ֣אמְרוּ לָ֑ךְ וּ֝מִלִּבָּ֗ם יוֹצִ֥אוּ מִלִּֽים׃

10 அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவா?
10 Will they not teach you and tell you, and speak from their understanding?
10 அவர்களன்றோ உமக்கு அறிவித்து உணர்த்துவர்! புரிந்த வார்த்தைகளை உமக்குப் புகட்டுவர்!

11הֲיִֽגְאֶה־גֹּ֭מֶא בְּלֹ֣א בִצָּ֑ה יִשְׂגֶּה־אָ֥חוּ בְלִי־מָֽיִם׃

11 சேறில்லாமல நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
11 Does papyrus grow where there is no marsh? Do reeds flourish without water?
11 சேறின்றி நாணல் தழைக்குமா? நீரின்றிக் கோரை வளருமா?

12עֹדֶ֣נּוּ בְ֭אִבּוֹ לֹ֣א יִקָּטֵ֑ף וְלִפְנֵ֖י כָל־חָצִ֣יר יִיבָֽשׁ׃

12 அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?
12 While the shoots are still uncut, they dry up quicker than grass.
12 இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.

13כֵּ֗ן אָ֭רְחוֹת כָּל־שֹׁ֣כְחֵי אֵ֑ל וְתִקְוַ֖ת חָנֵ֣ף תֹּאבֵֽד׃

13 தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.
13 Such is the destiny of all who forget God; so the hope of the godless will perish.
13 இறைவனை மறப்போரின் கதி இதுவே; இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;

14אֲשֶׁר־יָק֥וֹט כִּסְל֑וֹ וּבֵ֥ית עַ֝כָּבִישׁ מִבְטַחֽוֹ׃

14 அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
14 His confidence is fragile; his security is in a spider’s web.
14 அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்; அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.

15יִשָּׁעֵ֣ן עַל־בֵּ֭יתוֹ וְלֹ֣א יַעֲמֹ֑ד יַחֲזִ֥יק בּ֝֗וֹ וְלֹ֣א יָקֽוּם׃

15 ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது; அதைப் பிடித்தால், அது நிற்காது.
15 He leans on his web, but it gives way; he holds fast, but it does not endure.
15 யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால், அது நில்லாதுபோம்; யாராவது அதைப் பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.

16רָטֹ֣ב ה֭וּא לִפְנֵי־שָׁ֑מֶשׁ וְעַ֥ל גַּ֝נָּת֗וֹ יֹ֭נַקְתּ֥וֹ תֵצֵֽא׃

16 வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைக்கொடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்.
16 He is a well-watered plant in the sunshine, spreading its shoots over the garden.
16 பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்; படரும் தோட்டமெங்கும் அவர்களின் கிளைகள்.

17עַל־גַּ֭ל שָֽׁרָשָׁ֣יו יְסֻבָּ֑כוּ בֵּ֖ית אֲבָנִ֣ים יֶחֱזֶֽה׃

17 அதின் வேர்கள் கற்குவியலில்சிக்கி கற்பாறையை நாடும்.
17 His roots wrap around the rock heap; he looks for a home among the stones.
17 கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள் கற்களிடையே இடம் தேடும்.

18אִם־יְבַלְּעֶ֥נּוּ מִמְּקוֹמ֑וֹ וְכִ֥חֶשׁ בּ֝֗וֹ לֹ֣א רְאִיתִֽיךָ׃

18 அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.
18 If he is uprooted from his place, it will disown him, saying, ‘I never saw you.’
18 அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால், 'உங்களை நான் கண்டதேயில்லை' என உதறிவிடும் அவ்விடம்.

19הֶן־ה֭וּא מְשׂ֣וֹשׂ דַּרְכּ֑וֹ וּ֝מֵעָפָ֗ר אַחֵ֥ר יִצְמָֽחוּ׃

19 இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
19 Surely this is the joy of his way; yet others will spring from the dust.
19 பார்! அவர்கள் தம் வாழ்வில் கண்ட இன்பம் இதுவே: மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.

20הֶן־אֵ֭ל לֹ֣א יִמְאַס־תָּ֑ם וְלֹֽא־יַ֝חֲזִ֗יק בְּיַד־מְרֵעִֽים׃

20 இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
20 Behold, God does not reject the blameless, nor will He strengthen the hand of evildoers.
20 இதோ! கறையிலாதவரை இறைவன் கைவிடுவதில்லை; காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.

21עַד־יְמַלֵּ֣ה שְׂח֣וֹק פִּ֑יךָ וּשְׂפָתֶ֥יךָ תְרוּעָֽה׃

21 இனி அவர் உம்முடைய வாயை நகைப்பிலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
21 He will yet fill your mouth with laughter, and your lips with a shout of joy.
21 இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும், இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.

22שֹׂנְאֶ֥יךָ יִלְבְּשׁוּ־בֹ֑שֶׁת וְאֹ֖הֶל רְשָׁעִ֣ים אֵינֶֽנּוּ׃

22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
22 Your enemies will be clothed in shame, and the tent of the wicked will be no more.”
22 உம்மைப் பகைப்பவ‌ர் வெட்கத்தால் உடுத்தப்படுவர்; தீயோர் கூடாரம் இல்லாது போகும்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Job Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.