பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Joshua  யோசுவா  יְהוֹשֻעַ

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

யோசுவா 10 | Joshua 10

The Day the Sun Stood Still

1וַיְהִי֩ כִשְׁמֹ֨עַ אֲדֹֽנִי־צֶ֜דֶק מֶ֣לֶךְ יְרוּשָׁלִַ֗ם כִּֽי־לָכַ֨ד יְהוֹשֻׁ֣עַ אֶת־הָעַי֮ וַיַּחֲרִימָהּ֒ כַּאֲשֶׁ֨ר עָשָׂ֤ה לִֽירִיחוֹ֙ וּלְמַלְכָּ֔הּ כֵּן־עָשָׂ֥ה לָעַ֖י וּלְמַלְכָּ֑הּ וְכִ֨י הִשְׁלִ֜ימוּ יֹשְׁבֵ֤י גִבְעוֹן֙ אֶת־יִשְׂרָאֵ֔ל וַיִּֽהְי֖וּ בְּקִרְבָּֽם׃

1 யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,
1 Now Adoni-zedek king of Jerusalem heard that Joshua had captured Ai and devoted it to destructiona—doing to Ai and its king as he had done to Jericho and its king—and that the people of Gibeon had made peace with Israel and were living near them.
1 யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான்.

2וַיִּֽירְא֣וּ מְאֹ֔ד כִּ֣י עִ֤יר גְּדוֹלָה֙ גִּבְע֔וֹן כְּאַחַ֖ת עָרֵ֣י הַמַּמְלָכָ֑ה וְכִ֨י הִ֤יא גְדוֹלָה֙ מִן־הָעַ֔י וְכָל־אֲנָשֶׁ֖יהָ גִּבֹּרִֽים׃

2 கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
2 So Adoni-zedek and his people were greatly alarmed, because Gibeon was a great city, like one of the royal cities; it was larger than Ai, and all its men were mighty.
2 அவன் மிகவும் அச்சமுற்றான். ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது.

3וַיִּשְׁלַ֨ח אֲדֹנִי־צֶ֜דֶק מֶ֣לֶךְ יְרוּשָׁלִַ֗ם אֶל־הוֹהָ֣ם מֶֽלֶךְ־חֶ֠בְרוֹן וְאֶל־פִּרְאָ֨ם מֶֽלֶךְ־יַרְמ֜וּת וְאֶל־יָפִ֧יעַ מֶֽלֶךְ־לָכִ֛ישׁ וְאֶל־דְּבִ֥יר מֶֽלֶךְ־עֶגְל֖וֹן לֵאמֹֽר׃

3 ஆகையால் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
3 Therefore Adoni-zedek king of Jerusalem sent word to Hoham king of Hebron, Piram king of Jarmuth, Japhia king of Lachish, and Debir king of Eglon, saying,
3 எபிரோன் மன்னன் ஓகாம், யார்முத்து மன்னன் பிராம், இலாக்கிசு மன்னன் யாப்பியா, எக்லோன் மன்னன் தெபீர் ஆகியோருக்கு எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு

4עֲלֽוּ־אֵלַ֣י וְעִזְרֻ֔נִי וְנַכֶּ֖ה אֶת־גִּבְע֑וֹן כִּֽי־הִשְׁלִ֥ימָה אֶת־יְהוֹשֻׁ֖עַ וְאֶת־בְּנֵ֥י יִשְׂרָאֵֽל׃

4 நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.
4 “Come up and help me. We will attack Gibeon, because they have made peace with Joshua and the Israelites.”
4 "எனக்கு உதவி செய்ய வாருங்கள். நாம் கிபயோனைத் தாக்குவோம். ஏனெனில், அது யோசுவாவுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் சமாதானம் செய்து கொண்டுள்ளது" என்று சொல்லியனுப்பினான்.

5וַיֵּאָסְפ֨וּ וַֽיַּעֲל֜וּ חֲמֵ֣שֶׁת ׀ מַלְכֵ֣י הָאֱמֹרִ֗י מֶ֣לֶךְ יְרוּשָׁלִַ֜ם מֶֽלֶךְ־חֶבְר֤וֹן מֶֽלֶךְ־יַרְמוּת֙ מֶֽלֶךְ־לָכִ֣ישׁ מֶֽלֶךְ־עֶגְל֔וֹן הֵ֖ם וְכָל־מַֽחֲנֵיהֶ֑ם וַֽיַּחֲנוּ֙ עַל־גִּבְע֔וֹן וַיִּֽלָּחֲמ֖וּ עָלֶֽיהָ׃

5 அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
5 So the five kings of the Amorites—the kings of Jerusalem, Hebron, Jarmuth, Lachish, and Eglon—joined forces and advanced with all their armies. They camped before Gibeon and made war against it.
5 அவ்வாறே, எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஐந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்; கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள்.

6וַיִּשְׁלְח֣וּ אַנְשֵׁי֩ גִבְע֨וֹן אֶל־יְהוֹשֻׁ֤עַ אֶל־הַֽמַּחֲנֶה֙ הַגִּלְגָּ֣לָה לֵאמֹ֔ר אַל־תֶּ֥רֶף יָדֶ֖יךָ מֵֽעֲבָדֶ֑יךָ עֲלֵ֧ה אֵלֵ֣ינוּ מְהֵרָ֗ה וְהוֹשִׁ֤יעָה לָּ֙נוּ֙ וְעָזְרֵ֔נוּ כִּ֚י נִקְבְּצ֣וּ אֵלֵ֔ינוּ כָּל־מַלְכֵ֥י הָאֱמֹרִ֖י יֹשְׁבֵ֥י הָהָֽר׃

6 அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
6 Then the men of Gibeon sent word to Joshua in the camp at Gilgal: “Do not abandon your servants. Come quickly and save us! Help us, because all the kings of the Amorites from the hill country have joined forces against us.”
6 கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது: "உம் பணியாளர்களைக் கைவிடாதீர். விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்."

7וַיַּ֨עַל יְהוֹשֻׁ֜עַ מִן־הַגִּלְגָּ֗ל ה֚וּא וְכָל־עַ֤ם הַמִּלְחָמָה֙ עִמּ֔וֹ וְכֹ֖ל גִּבּוֹרֵ֥י הֶחָֽיִל׃

7 உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
7 So Joshua and his whole army, including all the mighty men of valor, came from Gilgal.
7 எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார்.

8וַיֹּ֨אמֶר יְהוָ֤ה אֶל־יְהוֹשֻׁ֙עַ֙ אַל־תִּירָ֣א מֵהֶ֔ם כִּ֥י בְיָדְךָ֖ נְתַתִּ֑ים לֹֽא־יַעֲמֹ֥ד אִ֛ישׁ מֵהֶ֖ם בְּפָנֶֽיךָ׃

8 கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
8 The LORD said to Joshua, “Do not be afraid of them, for I have delivered them into your hand. Not one of them shall stand against you.”
8 ஆண்டவர் யோசுவாவிடம், "அவர்கள் முன் அஞ்சாதே; ஏனெனில், அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்" என்றார்.

9וַיָּבֹ֧א אֲלֵיהֶ֛ם יְהוֹשֻׁ֖עַ פִּתְאֹ֑ם כָּל־הַלַּ֕יְלָה עָלָ֖ה מִן־הַגִּלְגָּֽל׃

9 யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.
9 After marching all night from Gilgal, Joshua caught them by surprise.
9 யோசுவா கில்காலிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து, அவர்களை நோக்கித் திடீரென வந்தார்.

10וַיְהֻמֵּ֤ם יְהוָה֙ לִפְנֵ֣י יִשְׂרָאֵ֔ל וַיַּכֵּ֥ם מַכָּֽה־גְדוֹלָ֖ה בְּגִבְע֑וֹן וַֽיִּרְדְּפֵ֗ם דֶּ֚רֶךְ מַעֲלֵ֣ה בֵית־חוֹרֹ֔ן וַיַּכֵּ֥ם עַד־עֲזֵקָ֖ה וְעַד־מַקֵּדָֽה׃

10 கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.
10 And the LORD threw them into confusion before Israel, who defeated them in a great slaughter at Gibeon, pursued them along the ascent to Beth-horon, and struck them down as far as Azekah and Makkedah.
10 ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்; கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார்; அவர் அவர்களைப் பெத்கோரோனின் மேட்டு வழியே அசேக்கா, மக்கேதா வரை துரத்தித் தாக்கினார்.

11וַיְהִ֞י בְּנֻסָ֣ם ׀ מִפְּנֵ֣י יִשְׂרָאֵ֗ל הֵ֞ם בְּמוֹרַ֤ד בֵּית־חוֹרֹן֙ וַֽיהוָ֡ה הִשְׁלִ֣יךְ עֲלֵיהֶם֩ אֲבָנִ֨ים גְּדֹל֧וֹת מִן־הַשָּׁמַ֛יִם עַד־עֲזֵקָ֖ה וַיָּמֻ֑תוּ רַבִּ֗ים אֲשֶׁר־מֵ֙תוּ֙ בְּאַבְנֵ֣י הַבָּרָ֔ד מֵאֲשֶׁ֥ר הָרְג֛וּ בְּנֵ֥י יִשְׂרָאֵ֖ל בֶּחָֽרֶב׃

11 அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
11 As they fled before Israel along the descent from Beth-horon to Azekah, the LORD cast down on them large hailstones from the sky, and more of them were killed by the hailstones than by the swords of the Israelites.
11 அவர்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெத்கோரோனுக்குத் தப்பி ஓடுகையில் ஆண்டவர் அவர்கள்மீது அசேக்காவரை பெரும் கற்களை வானத்திலிருந்து பொழிந்தார். இஸ்ரயேலரின் வாளால் கொல்லப்பட்டவர்களைவிடக் கல்மழையால் இறந்தவர்கள் அதிகம்.

12אָ֣ז יְדַבֵּ֤ר יְהוֹשֻׁעָ֙ לַֽיהוָ֔ה בְּי֗וֹם תֵּ֤ת יְהוָה֙ אֶת־הָ֣אֱמֹרִ֔י לִפְנֵ֖י בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל וַיֹּ֣אמֶר ׀ לְעֵינֵ֣י יִשְׂרָאֵ֗ל שֶׁ֚מֶשׁ בְּגִבְע֣וֹן דּ֔וֹם וְיָרֵ֖חַ בְּעֵ֥מֶק אַיָּלֽוֹן׃

12 கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
12 On the day that the LORD gave the Amorites over to the Israelites, Joshua spoke to the LORD in the presence of Israel: “O sun, stand still over Gibeon, O moon, over the Valley of Aijalon.b
12 கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார். அவர் இஸ்ரயேலர் கண்முன், "கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்" என்றார்.

13וַיִּדֹּ֨ם הַשֶּׁ֜מֶשׁ וְיָרֵ֣חַ עָמָ֗ד עַד־יִקֹּ֥ם גּוֹי֙ אֹֽיְבָ֔יו הֲלֹא־הִ֥יא כְתוּבָ֖ה עַל־סֵ֣פֶר הַיָּשָׁ֑ר וַיַּעֲמֹ֤ד הַשֶּׁ֙מֶשׁ֙ בַּחֲצִ֣י הַשָּׁמַ֔יִם וְלֹא־אָ֥ץ לָב֖וֹא כְּי֥וֹם תָּמִֽים׃

13 அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.
13 So the sun stood still and the moon stopped until the nation took vengeance upon its enemies.c Is this not written in the Book of Jashar?d “So the sun stopped in the middle of the sky and delayed going down about a full day.”e
13 அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன. இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா? 'கதிரவன் நடுவானில் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை'.*

14וְלֹ֨א הָיָ֜ה כַּיּ֤וֹם הַהוּא֙ לְפָנָ֣יו וְאַחֲרָ֔יו לִשְׁמֹ֥עַ יְהוָ֖ה בְּק֣וֹל אִ֑ישׁ כִּ֣י יְהוָ֔ה נִלְחָ֖ם לְיִשְׂרָאֵֽל׃

14 இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
14 There has been no day like it before or since, when the LORD listened to the voice of a man, because the LORD fought for Israel.
14 ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை.

15וַיָּ֤שָׁב יְהוֹשֻׁ֙עַ֙ וְכָל־יִשְׂרָאֵ֣ל עִמּ֔וֹ אֶל־הַֽמַּחֲנֶ֖ה הַגִּלְגָּֽלָה׃

15 பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
15 Then Joshua returned with all Israel to the camp at Gilgal.
15 யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.

The Victory at Makkedah

16וַיָּנֻ֕סוּ חֲמֵ֖שֶׁת הַמְּלָכִ֣ים הָאֵ֑לֶּה וַיֵּחָבְא֥וּ בַמְּעָרָ֖ה בְּמַקֵּדָֽה׃

16 அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள்.
16 Now the five kings had fled and hidden in the cave at Makkedah.
16 அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, மக்கேதாவில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள்.

17וַיֻּגַּ֖ד לִיהוֹשֻׁ֣עַ לֵאמֹ֑ר נִמְצְאוּ֙ חֲמֵ֣שֶׁת הַמְּלָכִ֔ים נֶחְבְּאִ֥ים בַּמְּעָרָ֖ה בְּמַקֵּדָֽה׃

17 ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.
17 And Joshua was informed: “The five kings have been found; they are hiding in the cave at Makkedah.”
17 அவர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி யோசுவாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

18וַיֹּ֣אמֶר יְהוֹשֻׁ֔עַ גֹּ֛לּוּ אֲבָנִ֥ים גְּדֹל֖וֹת אֶל־פִּ֣י הַמְּעָרָ֑ה וְהַפְקִ֧ידוּ עָלֶ֛יהָ אֲנָשִׁ֖ים לְשָׁמְרָֽם׃

18 அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள்.
18 So Joshua said, “Roll large stones against the mouth of the cave, and post men there to guard them.
18 யோசுவா, "குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள். அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள்.

19וְאַתֶּם֙ אַֽל־תַּעֲמֹ֔דוּ רִדְפוּ֙ אַחֲרֵ֣י אֹֽיְבֵיכֶ֔ם וְזִנַּבְתֶּ֖ם אוֹתָ֑ם אַֽל־תִּתְּנ֗וּם לָבוֹא֙ אֶל־עָ֣רֵיהֶ֔ם כִּ֧י נְתָנָ֛ם יְהוָ֥ה אֱלֹהֵיכֶ֖ם בְּיֶדְכֶֽם׃

19 நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
19 But you, do not stop there. Pursue your enemies and attack them from behind. Do not let them reach their cities, for the LORD your God has delivered them into your hand.”
19 நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்" என்றார்.

20וַיְהִי֩ כְּכַלּ֨וֹת יְהוֹשֻׁ֜עַ וּבְנֵ֣י יִשְׂרָאֵ֗ל לְהַכּוֹתָ֛ם מַכָּ֥ה גְדוֹלָֽה־מְאֹ֖ד עַד־תֻּמָּ֑ם וְהַשְּׂרִידִים֙ שָׂרְד֣וּ מֵהֶ֔ם וַיָּבֹ֖אוּ אֶל־עָרֵ֥י הַמִּבְצָֽר׃

20 யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
20 So Joshua and the Israelites continued to inflict a terrible slaughter until they had finished them off, and the remaining survivors retreated to the fortified cities.
20 யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அவர்களை வன்மையாகத் தாக்கி அவர்கள் முற்றிலும் அழியும்வரை அவர்களைக் கொன்று முடித்தனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடியவர்கள் பாதுகாக்கப்பட்ட நகர்களுக்குள் நுழைந்தார்கள்.

21וַיָּשֻׁבוּ֩ כָל־הָעָ֨ם אֶל־הַמַּחֲנֶ֧ה אֶל־יְהוֹשֻׁ֛עַ מַקֵּדָ֖ה בְּשָׁל֑וֹם לֹֽא־חָרַ֞ץ לִבְנֵ֧י יִשְׂרָאֵ֛ל לְאִ֖ישׁ אֶת־לְשֹׁנֽוֹ׃

21 ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
21 The whole army returned safely to Joshua in the camp at Makkedah, and no one dared to utter a word against the Israelites.
21 மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர். இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை.

22וַיֹּ֣אמֶר יְהוֹשֻׁ֔עַ פִּתְח֖וּ אֶת־פִּ֣י הַמְּעָרָ֑ה וְהוֹצִ֣יאוּ אֵלַ֗י אֶת־חֲמֵ֛שֶׁת הַמְּלָכִ֥ים הָאֵ֖לֶּה מִן־הַמְּעָרָֽה׃

22 அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத்திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்தில் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
22 Then Joshua said, “Open the mouth of the cave and bring those five kings out to me.”
22 யோசுவா, "குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.

23וַיַּ֣עֲשׂוּ כֵ֔ן וַיֹּצִ֣יאוּ אֵלָ֗יו אֶת־חֲמֵ֛שֶׁת הַמְּלָכִ֥ים הָאֵ֖לֶּה מִן־הַמְּעָרָ֑ה אֵ֣ת ׀ מֶ֣לֶךְ יְרוּשָׁלִַ֗ם אֶת־מֶ֤לֶךְ חֶבְרוֹן֙ אֶת־מֶ֣לֶךְ יַרְמ֔וּת אֶת־מֶ֥לֶךְ לָכִ֖ישׁ אֶת־מֶ֥לֶךְ עֶגְלֽוֹן׃

23 அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.
23 So they brought the five kings out of the cave—the kings of Jerusalem, Hebron, Jarmuth, Lachish, and Eglon.
23 அவர்கள் அவ்வாறே செய்தனர்; எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஐந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

24וַ֠יְהִי כְּֽהוֹצִיאָ֞ם אֶת־הַמְּלָכִ֣ים הָאֵלֶּה֮ אֶל־יְהוֹשֻׁעַ֒ וַיִּקְרָ֨א יְהוֹשֻׁ֜עַ אֶל־כָּל־אִ֣ישׁ יִשְׂרָאֵ֗ל וַ֠יֹּאמֶר אֶל־קְצִינֵ֞י אַנְשֵׁ֤י הַמִּלְחָמָה֙ ההלכוא אִתּ֔וֹ קִרְב֗וּ שִׂ֚ימוּ אֶת־רַגְלֵיכֶ֔ם עַֽל־צַוְּארֵ֖י הַמְּלָכִ֣ים הָאֵ֑לֶּה וַֽיִּקְרְב֔וּ וַיָּשִׂ֥ימוּ אֶת־רַגְלֵיהֶ֖ם עַל־צַוְּארֵיהֶֽם׃

24 அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
24 When they had brought the kings to Joshua, he summoned all the men of Israel and said to the army commanders who had accompanied him, “Come here and put your feet on the necks of these kings.” So the commanders came forward and put their feet on their necks.
24 அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம், "அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்" என்றார். அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர்.

25וַיֹּ֤אמֶר אֲלֵיהֶם֙ יְהוֹשֻׁ֔עַ אַל־תִּֽירְא֖וּ וְאַל־תֵּחָ֑תּוּ חִזְק֣וּ וְאִמְצ֔וּ כִּ֣י כָ֗כָה יַעֲשֶׂ֤ה יְהוָה֙ לְכָל־אֹ֣יְבֵיכֶ֔ם אֲשֶׁ֥ר אַתֶּ֖ם נִלְחָמִ֥ים אוֹתָֽם׃

25 அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.
25 “Do not be afraid or discouraged,” Joshua said. “Be strong and courageous, for the LORD will do this to all the enemies you fight.”
25 யோசுவா அவர்களிடம், "அஞ்சாதீர்கள்; கலங்காதீர்கள்; திடமும் துணிவும் கொண்டிருங்கள். ஏனெனில், ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்" என்றார்.

26וַיַּכֵּ֨ם יְהוֹשֻׁ֤עַ אַֽחֲרֵי־כֵן֙ וַיְמִיתֵ֔ם וַיִּתְלֵ֕ם עַ֖ל חֲמִשָּׁ֣ה עֵצִ֑ים וַיִּֽהְי֛וּ תְּלוּיִ֥ם עַל־הָעֵצִ֖ים עַד־הָעָֽרֶב׃

26 அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக்கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.
26 After this, Joshua struck down and killed the kings, and he hung their bodies on five treesf and left them there until evening.
26 அதற்குப்பின் யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார். அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார்.

27וַיְהִ֞י לְעֵ֣ת ׀ בּ֣וֹא הַשֶּׁ֗מֶשׁ צִוָּ֤ה יְהוֹשֻׁ֙עַ֙ וַיֹּֽרִידוּם֙ מֵעַ֣ל הָעֵצִ֔ים וַיַּ֨שְׁלִכֻ֔ם אֶל־הַמְּעָרָ֖ה אֲשֶׁ֣ר נֶחְבְּאוּ־שָׁ֑ם וַיָּשִׂ֜מוּ אֲבָנִ֤ים גְּדֹלוֹת֙ עַל־פִּ֣י הַמְּעָרָ֔ה עַד־עֶ֖צֶם הַיּ֥וֹם הַזֶּֽה׃

27 சூரியன் அஸ்தமிக்கிறவேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களை கெபியின் வாயிலே அடைத்தார்கள்.
27 At sunset Joshua ordered that they be taken down from the trees and thrown into the cave in which they had hidden. Then large stones were placed against the mouth of the cave, and the stones are there to this day.
27 கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள். குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள். அவை இந்நாள்வரை உள்ளன.

28וְאֶת־מַקֵּדָה֩ לָכַ֨ד יְהוֹשֻׁ֜עַ בַּיּ֣וֹם הַה֗וּא וַיַּכֶּ֣הָ לְפִי־חֶרֶב֮ וְאֶת־מַלְכָּהּ֒ הֶחֱרִ֣ם אוֹתָ֗ם וְאֶת־כָּל־הַנֶּ֙פֶשׁ֙ אֲשֶׁר־בָּ֔הּ לֹ֥א הִשְׁאִ֖יר שָׂרִ֑יד וַיַּ֙עַשׂ֙ לְמֶ֣לֶךְ מַקֵּדָ֔ה כַּאֲשֶׁ֥ר עָשָׂ֖ה לְמֶ֥לֶךְ יְרִיחֽוֹ׃

28 அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப்பிடித்து, அதைப்பட்டயக் கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.
28 On that day Joshua captured Makkedah and put it to the sword, along with its king. He devoted to destruction everyone in the city, leaving no survivors. So he did to the king of Makkedah as he had done to the king of Jericho.
28 யோசுவா அன்று மக்கேதாவைப் கைப்பற்றினார். அதையும் அதன் மன்னனையும் வாள்முனையில் கொன்றார். அவர்களைக் கொன்று அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், மக்கேதா மன்னனுக்கும் செய்தார்.

Conquest of the Southern Cities

29וַיַּעֲבֹ֣ר יְ֠הוֹשֻׁעַ וְכָֽל־יִשְׂרָאֵ֥ל עִמּ֛וֹ מִמַּקֵּדָ֖ה לִבְנָ֑ה וַיִּלָּ֖חֶם עִם־לִבְנָֽה׃

29 மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்.
29 Then Joshua and all Israel with him moved on from Makkedah to Libnah and fought against Libnah.
29 யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர்.

30וַיִּתֵּן֩ יְהוָ֨ה גַּם־אוֹתָ֜הּ בְּיַ֣ד יִשְׂרָאֵל֘ וְאֶת־מַלְכָּהּ֒ וַיַּכֶּ֣הָ לְפִי־חֶ֗רֶב וְאֶת־כָּל־הַנֶּ֙פֶשׁ֙ אֲשֶׁר־בָּ֔הּ לֹֽא־הִשְׁאִ֥יר בָּ֖הּ שָׂרִ֑יד וַיַּ֣עַשׂ לְמַלְכָּ֔הּ כַּאֲשֶׁ֥ר עָשָׂ֖ה לְמֶ֥לֶךְ יְרִיחֽוֹ׃

30 கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
30 And the LORD also delivered that city and its king into the hand of Israel, and Joshua put all the people to the sword, leaving no survivors. And he did to the king of Libnah as he had done to the king of Jericho.
30 ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார். அதை அவர் வாள்முனையில் அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார்.

31וַיַּעֲבֹ֣ר יְ֠הוֹשֻׁעַ וְכָל־יִשְׂרָאֵ֥ל עִמּ֛וֹ מִלִּבְנָ֖ה לָכִ֑ישָׁה וַיִּ֣חַן עָלֶ֔יהָ וַיִּלָּ֖חֶם בָּֽהּ׃

31 லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயம் இறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான்.
31 And Joshua and all Israel with him moved on from Libnah to Lachish. They laid siege to it and fought against it.
31 யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் லிப்னாவிலிருந்து இலாக்கிசுக்குச் சென்று அதை முற்றுகையிட்டுத் தாக்கினார்கள்.

32וַיִּתֵּן֩ יְהוָ֨ה אֶת־לָכִ֜ישׁ בְּיַ֣ד יִשְׂרָאֵ֗ל וַֽיִּלְכְּדָהּ֙ בַּיּ֣וֹם הַשֵּׁנִ֔י וַיַּכֶּ֣הָ לְפִי־חֶ֔רֶב וְאֶת־כָּל־הַנֶּ֖פֶשׁ אֲשֶׁר־בָּ֑הּ כְּכֹ֥ל אֲשֶׁר־עָשָׂ֖ה לְלִבְנָֽה׃

32 கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.
32 And the LORD delivered Lachish into the hand of Israel, and Joshua captured it on the second day. He put all the people to the sword, just as he had done to Libnah.
32 ஆண்டவர் இலாக்கிசை இஸ்ரயேலின் கையில் ஒப்படைத்தார். அதை இரண்டாம் நாளில் யோசுவா கைப்பற்றினார். வாள்முனையில் அதை அழித்தார்; அதனுள் இருந்த அனைவருக்கும் லிப்னாவுக்குச் செய்தது போல் செய்தார்.

33אָ֣ז עָלָ֗ה הֹרָם֙ מֶ֣לֶךְ גֶּ֔זֶר לַעְזֹ֖ר אֶת־לָכִ֑ישׁ וַיַּכֵּ֤הוּ יְהוֹשֻׁ֙עַ֙ וְאֶת־עַמּ֔וֹ עַד־בִּלְתִּ֥י הִשְׁאִֽיר־ל֖וֹ שָׂרִֽיד׃

33 அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.
33 At that time Horam king of Gezer went to help Lachish, but Joshua struck him down along with his people, leaving no survivors.
33 கெசேரின் மன்னன் ஓராம் இலாக்கிசுக்கு உதவி செய்யச் சென்றான். யோசுவா அவனையும் அவன் மக்களையும் எவரும் தப்பாதபடி கொன்றார்.

34וַיַּעֲבֹ֣ר יְ֠הוֹשֻׁעַ וְכָל־יִשְׂרָאֵ֥ל עִמּ֛וֹ מִלָּכִ֖ישׁ עֶגְלֹ֑נָה וַיַּחֲנ֣וּ עָלֶ֔יהָ וַיִּֽלָּחֲמ֖וּ עָלֶֽיהָ׃

34 லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,
34 So Joshua moved on from Lachish to Eglon, and all Israel with him. They laid siege to it and fought against it.
34 யோசுவாவும் அவருடன் இஸ்ரயேலர் எல்லாரும் இலாக்கிசிலிருந்து எக்லோனுக்குச் சென்று, அதை முற்றுகையிட்டுத் தாக்கினர்.

35וַֽיִּלְכְּד֜וּהָ בַּיּ֤וֹם הַהוּא֙ וַיַכּ֣וּהָ לְפִי־חֶ֔רֶב וְאֵת֙ כָּל־הַנֶּ֣פֶשׁ אֲשֶׁר־בָּ֔הּ בַּיּ֥וֹם הַה֖וּא הֶחֱרִ֑ים כְּכֹ֥ל אֲשֶׁר־עָשָׂ֖ה לְלָכִֽישׁ׃

35 அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.
35 That day they captured Eglon and put it to the sword, and Joshua devoted to destruction everyone in the city, just as he had done to Lachish.
35 அவர்கள் அதை அன்றே கைப்பற்றி, இலாக்கிசுக்குச் செய்ததுபோல், அன்றே அதையும் அதில் வாழ்ந்த அனைவரையும் கொன்று அழித்தனர்.

36וַיַּ֣עַל יְ֠הוֹשֻׁעַ וְכָֽל־יִשְׂרָאֵ֥ל עִמּ֛וֹ מֵעֶגְל֖וֹנָה חֶבְר֑וֹנָה וַיִּֽלָּחֲמ֖וּ עָלֶֽיהָ׃

36 பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி,
36 Then Joshua and all Israel with him went up from Eglon to Hebron and fought against it.
36 யோசுவாவும் அவர் மக்களாகிய இஸ்ரயேலர் எல்லாரும் எக்லோனிலிருந்து எபிரோனுக்குச் சென்று அதைத் தாக்கினர்.

37וַיִּלְכְּד֣וּהָ וַיַּכּֽוּהָ־לְפִי־חֶ֠רֶב וְאֶת־מַלְכָּ֨הּ וְאֶת־כָּל־עָרֶ֜יהָ וְאֶת־כָּל־הַנֶּ֤פֶשׁ אֲשֶׁר־בָּהּ֙ לֹֽא־הִשְׁאִ֣יר שָׂרִ֔יד כְּכֹ֥ל אֲשֶׁר־עָשָׂ֖ה לְעֶגְל֑וֹן וַיַּחֲרֵ֣ם אוֹתָ֔הּ וְאֶת־כָּל־הַנֶּ֖פֶשׁ אֲשֶׁר־בָּֽהּ׃

37 அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப்பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான்.
37 They captured it and put to the sword its king, all its villages, and all the people. Joshua left no survivors, just as he had done at Eglon; he devoted to destruction Hebron and everyone in it.
37 அதைத் தாக்கி, அதன் மன்னனையும், அதன் நகர்களையும், அதனுள் இருந்த அனைத்து உயிர்களையும் வாள்முனையில் கொன்றனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. எக்லோனுக்கு செய்த அனைத்தையும் அதற்கும் அவர் செய்தார்; அதையும் அதனுள் இருந்த அனைவரையும் அழித்தார்.

38וַיָּ֧שָׁב יְהוֹשֻׁ֛עַ וְכָל־יִשְׂרָאֵ֥ל עִמּ֖וֹ דְּבִ֑רָה וַיִּלָּ֖חֶם עָלֶֽיהָ׃

38 பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,
38 Finally Joshua and all Israel with him turned toward Debir and fought against it.
38 யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்களும் தெபீருக்குத் திரும்பி அதனைத் தாக்கினர்.

39וַֽיִּלְכְּדָ֞הּ וְאֶת־מַלְכָּ֤הּ וְאֶת־כָּל־עָרֶ֙יהָ֙ וַיַּכּ֣וּם לְפִי־חֶ֔רֶב וַֽיַּחֲרִ֙ימוּ֙ אֶת־כָּל־נֶ֣פֶשׁ אֲשֶׁר־בָּ֔הּ לֹ֥א הִשְׁאִ֖יר שָׂרִ֑יד כַּאֲשֶׁ֨ר עָשָׂ֜ה לְחֶבְר֗וֹן כֵּן־עָשָׂ֤ה לִדְבִ֙רָה֙ וּלְמַלְכָּ֔הּ וְכַאֲשֶׁ֥ר עָשָׂ֛ה לְלִבְנָ֖ה וּלְמַלְכָּֽהּ׃

39 அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
39 And they captured Debir, its king, and all its villages. They put them to the sword and devoted to destruction everyone in the city, leaving no survivors. Joshua did to Debir and its king as he had done to Hebron and as he had done to Libnah and its king.
39 அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார்.

40וַיַּכֶּ֣ה יְהוֹשֻׁ֣עַ אֶת־כָּל־הָאָ֡רֶץ הָהָר֩ וְהַנֶּ֨גֶב וְהַשְּׁפֵלָ֜ה וְהָאֲשֵׁד֗וֹת וְאֵת֙ כָּל־מַלְכֵיהֶ֔ם לֹ֥א הִשְׁאִ֖יר שָׂרִ֑יד וְאֵ֤ת כָּל־הַנְּשָׁמָה֙ הֶחֱרִ֔ים כַּאֲשֶׁ֣ר צִוָּ֔ה יְהוָ֖ה אֱלֹהֵ֥י יִשְׂרָאֵֽל׃

40 இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,
40 So Joshua conquered the whole region—the hill country, the Negev, the foothills,g and the slopes, together with all their kings—leaving no survivors. He devoted to destruction everything that breathed, just as the LORD, the God of Israel, had commanded.
40 யோசுவா எல்லா மலைநாட்டையும் தாக்கினார். நெகேபு சமவெளியையும், பள்ளத்தாக்கையும் அதன் மன்னர்களையும் கைப்பற்றினார்; எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டது போல் அவர்களை அழித்தார்.

41וַיַּכֵּ֧ם יְהוֹשֻׁ֛עַ מִקָּדֵ֥שׁ בַּרְנֵ֖עַ וְעַד־עַזָּ֑ה וְאֵ֛ת כָּל־אֶ֥רֶץ גֹּ֖שֶׁן וְעַד־גִּבְעֽוֹן׃

41 காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சாமட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
41 Joshua conquered the area from Kadesh-barnea to Gaza, and the whole region of Goshen as far as Gibeon.
41 யோசுவா காதேசு பர்னேயாவிலிருந்து காசா வரை கோசேன் நாடு முழுவதையும் கிபயோன்வரை தோற்கடித்தார்.

42וְאֵ֨ת כָּל־הַמְּלָכִ֤ים הָאֵ֙לֶּה֙ וְאֶת־אַרְצָ֔ם לָכַ֥ד יְהוֹשֻׁ֖עַ פַּ֣עַם אֶחָ֑ת כִּ֗י יְהוָה֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל נִלְחָ֖ם לְיִשְׂרָאֵֽל׃

42 அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
42 And because the LORD, the God of Israel, fought for Israel, Joshua captured all these kings and their land in one campaign.
42 யோசுவா எல்லா மன்னர்களையும் நாடுகளையும் ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேலுக்காகப் போரிட்டார்.

43וַיָּ֤שָׁב יְהוֹשֻׁ֙עַ֙ וְכָל־יִשְׂרָאֵ֣ל עִמּ֔וֹ אֶל־הַֽמַּחֲנֶ֖ה הַגִּלְגָּֽלָה׃

43 பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
43 Then Joshua returned with all Israel to the camp at Gilgal.
43 யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Joshua Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21  22   23   24

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
a Forms of the Hebrew cherem  refer to the giving over of things or persons to the LORD, either by destroying them or by giving them as an offering; also in verses 28, 35, 37, 39, and 40.
12 b See Jasher 88:63.
13 c Or triumphed over its enemies
13 d Or the Book of the Upright One , commonly cited as Jasher
13 e See Jasher 88:64.
26 f Or impaled their bodies on five poles ; similarly in verse 27
40 g Hebrew Shephelah  or lowlands ; that is, the western foothills of Judea

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.