பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Joshua  யோசுவா  יְהוֹשֻעַ

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

யோசுவா 16 | Joshua 16

Ephraim’s Inheritance

1וַיֵּצֵ֨א הַגּוֹרָ֜ל לִבְנֵ֤י יוֹסֵף֙ מִיַּרְדֵּ֣ן יְרִיח֔וֹ לְמֵ֥י יְרִיח֖וֹ מִזְרָ֑חָה הַמִּדְבָּ֗ר עֹלֶ֧ה מִירִיח֛וֹ בָּהָ֖ר בֵּֽית־אֵֽל׃

1 யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தர வழியாகவும் சென்று,
1 The allotment for the descendants of Joseph extended from the Jordan at Jericho to the waters of Jericho on the east, through the wilderness that goes up from Jericho into the hill country of Bethel.
1 யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று,

2וְיָצָ֥א מִבֵּֽית־אֵ֖ל ל֑וּזָה וְעָבַ֛ר אֶל־גְּב֥וּל הָאַרְכִּ֖י עֲטָרֽוֹת׃

2 பெத்தேலிலிருந்து லூசுக்குப்போய், அர்கீயினுடைய எல்லையாகிய அத்ரோத்தைக் கடந்து,
2 It went on from Bethel (that is, Luz)a and proceeded to the border of the Archites in Ataroth.
2 பெத்தேலிலிருந்து லூசுக்குச் சென்று அர்கியரின் எல்லையான அதாரோத்தைக் கடந்து,

3וְיָֽרַד־יָ֜מָּה אֶל־גְּב֣וּל הַיַּפְלֵטִ֗י עַ֣ד גְּב֧וּל בֵּית־חוֹרֹ֛ן תַּחְתּ֖וֹן וְעַד־גָּ֑זֶר וְהָי֥וּ תצאתו יָֽמָּה׃

3 மேற்கே யப்லேத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.
3 Then it descended westward to the border of the Japhletites as far as the border of Lower Beth-horon and on to Gezer, and it ended at the Sea.b
3 மேற்காக, யாப்லேற்றியரின் எல்லை நோக்கி இறங்கி, பெத்கோரோன் கெசேர் எல்லைமட்டும் சென்று கடலில் முடிகின்றது.

4וַיִּנְחֲל֥וּ בְנֵי־יוֹסֵ֖ף מְנַשֶּׁ֥ה וְאֶפְרָֽיִם׃

4 இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பீராயீமும் சுதந்தரித்தார்கள்.
4 So Ephraim and Manasseh, the sons of Joseph, received their inheritance.
4 யோசேப்பின் மக்களான மனாசேயும் எப்ராயிமும் இதை உரிமைச்சொத்தாகப் பெற்றனர்.

5וַיְהִ֛י גְּב֥וּל בְּנֵֽי־אֶפְרַ֖יִם לְמִשְׁפְּחֹתָ֑ם וַיְהִ֞י גְּב֤וּל נַחֲלָתָם֙ מִזְרָ֔חָה עַטְר֣וֹת אַדָּ֔ר עַד־בֵּ֥ית חוֹרֹ֖ן עֶלְיֽוֹן׃

5 எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
5 This was the territory of the descendants of Ephraim by their clans: The border of their inheritance went from Ataroth-addar in the east to Upper Beth-horon
5 எப்ராயிம் புதல்வருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: கிழக்கே எல்லை அற்றரோத்து-அதார் முதல் மேல் பெத்கோரோன்வரை செல்கின்றது.

6וְיָצָ֨א הַגְּב֜וּל הַיָּ֗מָּה הַֽמִּכְמְתָת֙ מִצָּפ֔וֹן וְנָסַ֧ב הַגְּב֛וּל מִזְרָ֖חָה תַּאֲנַ֣ת שִׁלֹ֑ה וְעָבַ֣ר אוֹת֔וֹ מִמִּזְרַ֖ח יָנֽוֹחָה׃

6 மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத் சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
6 and out toward the Sea. From Michmethath on the north it turned eastward toward Taanath-shiloh and passed by it to Janoah on the east.
6 மேற்கு எல்லை மிக்மெத்தாத்துக்கு வடக்கே சென்று கிழக்கே தானத்து சீலோவுக்குத் திரும்பி, அதை யானோவாவுக்குக் கிழக்காகக் கடந்து,

7וְיָרַ֥ד מִיָּנ֖וֹחָה עֲטָר֣וֹת וְנַעֲרָ֑תָה וּפָגַע֙ בִּֽירִיח֔וֹ וְיָצָ֖א הַיַּרְדֵּֽן׃

7 யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
7 From Janoah it went down to Ataroth and Naarah, and then reached Jericho and came out at the Jordan.
7 யானோவாவிலிருந்து அற்றரோத்து நகருக்கு இறங்கி, எரிகோவைத் தொட்டு யோர்தானில் முடிவடைகின்றது.

8מִתַּפּ֜וּחַ יֵלֵ֨ךְ הַגְּב֥וּל יָ֙מָּה֙ נַ֣חַל קָנָ֔ה וְהָי֥וּ תֹצְאֹתָ֖יו הַיָּ֑מָּה זֹ֗את נַחֲלַ֛ת מַטֵּ֥ה בְנֵי־אֶפְרַ֖יִם לְמִשְׁפְּחֹתָֽם׃

8 தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்,
8 From Tappuah the border went westward to the Brook of Kanah and ended at the Sea. This was the inheritance of the clans of the tribe of Ephraim,
8 இவ்வெல்லை தப்பூவாகிலிருந்து மேற்காக கானா நதிவரை ஏறிக் கடலில் முடிவடைகின்றது. இதுவே எப்ராயிம் மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து.

9וְהֶעָרִ֗ים הַמִּבְדָּלוֹת֙ לִבְנֵ֣י אֶפְרַ֔יִם בְּת֖וֹךְ נַחֲלַ֣ת בְּנֵֽי־מְנַשֶּׁ֑ה כָּֽל־הֶעָרִ֖ים וְחַצְרֵיהֶֽן׃

9 பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
9 along with all the cities and villages set apart for the descendants of Ephraim within the inheritance of Manasseh.
9 இதுவன்றி, எப்ராயிம் மக்களுக்கு மனாசேயின் மக்களின் உடைமைகளான நகர்களுக்கும் அவற்றின் சிற்றூர்களுக்கும் நடுவில் நகர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

10וְלֹ֣א הוֹרִ֔ישׁוּ אֶת־הַֽכְּנַעֲנִ֖י הַיּוֹשֵׁ֣ב בְּגָ֑זֶר וַיֵּ֨שֶׁב הַֽכְּנַעֲנִ֜י בְּקֶ֤רֶב אֶפְרַ֙יִם֙ עַד־הַיּ֣וֹם הַזֶּ֔ה וַיְהִ֖י לְמַס־עֹבֵֽד׃

10 அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.
10 But they did not drive out the Canaanites who lived in Gezer. So the Canaanites dwell among the Ephraimites to this day, but they are forced laborers.
10 அவர்கள் கெசேரில் வாழ்ந்து வந்த கானானியரை வெளியேற்றவில்லை. ஆகையால் இன்றும் கானானியர் எப்ராயிம் நடுவில் அடிமைகளாக வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர்.*


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Joshua Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21  22   23   24

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
2 a LXX (See also Joshua 18:13); Hebrew from Bethel to Luz
3 b That is, the Mediterranean Sea, also called the Great Sea; also in verses 6 and 8

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.