பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Joshua  யோசுவா  יְהוֹשֻעַ

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

யோசுவா 17 | Joshua 17

Manasseh’s Western Inheritance

1וַיְהִ֤י הַגּוֹרָל֙ לְמַטֵּ֣ה מְנַשֶּׁ֔ה כִּי־ה֖וּא בְּכ֣וֹר יוֹסֵ֑ף לְמָכִיר֩ בְּכ֨וֹר מְנַשֶּׁ֜ה אֲבִ֣י הַגִּלְעָ֗ד כִּ֣י ה֤וּא הָיָה֙ אִ֣ישׁ מִלְחָמָ֔ה וֽ͏ַיְהִי־ל֖וֹ הַגִּלְעָ֥ד וְהַבָּשָֽׁן׃

1 மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.
1 Now this was the allotment for the tribe of Manasseh as Joseph’s firstborn son, namely for Machir the firstborn of Manasseh and father of the Gileadites, who had received Gilead and Bashan because Machir was a man of war.
1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்; மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.

2וַ֠יְהִי לִבְנֵ֨י מְנַשֶּׁ֥ה הַנּוֹתָרִים֮ לְמִשְׁפְּחֹתָם֒ לִבְנֵ֨י אֲבִיעֶ֜זֶר וְלִבְנֵי־חֵ֗לֶק וְלִבְנֵ֤י אַשְׂרִיאֵל֙ וְלִבְנֵי־שֶׁ֔כֶם וְלִבְנֵי־חֵ֖פֶר וְלִבְנֵ֣י שְׁמִידָ֑ע אֵ֠לֶּה בְּנֵ֨י מְנַשֶּׁ֧ה בֶֿן־יוֹסֵ֛ף הַזְּכָרִ֖ים לְמִשְׁפְּחֹתָֽם׃

2 அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயின் மற்றக்குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.
2 So this allotment was for the rest of the descendants of Manasseh—the clans of Abiezer,a Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These are the other male descendants of the clans of Manasseh son of Joseph.
2 மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.

3וְלִצְלָפְחָד֩ בֶּן־חֵ֨פֶר בֶּן־גִּלְעָ֜ד בֶּן־מָכִ֣יר בֶּן־מְנַשֶּׁ֗ה לֹא־הָ֥יוּ ל֛וֹ בָּנִ֖ים כִּ֣י אִם־בָּנ֑וֹת וְאֵ֙לֶּה֙ שְׁמ֣וֹת בְּנֹתָ֔יו מַחְלָ֣ה וְנֹעָ֔ה חָגְלָ֥ה מִלְכָּ֖ה וְתִרְצָֽה׃

3 மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
3 But Zelophehad son of Hepher (the son of Gilead, the son of Machir, the son of Manasseh) had no sons but only daughters. These are the names of his daughters: Mahlah, Noah, Hoglah, Milcah, and Tirzah.
3 மனாசேயின் மகனான மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் மகனாகிய ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு ஆண்மக்கள் இல்லை; பெண்மக்கள் மட்டும் இருந்தனர். அவனுடைய பெண்மக்களின் பெயர்கள்; மக்லா, நோவா, ஒகுலா, மில்கா, தீரட்சா.

4וַתִּקְרַ֡בְנָה לִפְנֵי֩ אֶלְעָזָ֨ר הַכֹּהֵ֜ן וְלִפְנֵ֣י ׀ יְהוֹשֻׁ֣עַ בִּן־נ֗וּן וְלִפְנֵ֤י הַנְּשִׂיאִים֙ לֵאמֹ֔ר יְהוָה֙ צִוָּ֣ה אֶת־מֹשֶׁ֔ה לָֽתֶת־לָ֥נוּ נַחֲלָ֖ה בְּת֣וֹךְ אַחֵ֑ינוּ וַיִּתֵּ֨ן לָהֶ֜ם אֶל־פִּ֤י יְהוָה֙ נֽ͏ַחֲלָ֔ה בְּת֖וֹךְ אֲחֵ֥י אֲבִיהֶֽן׃

4 அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..
4 They approached Eleazar the priest, Joshua son of Nun, and the leaders, and said, “The LORD commanded Moses to give us an inheritance among our brothers.” So Joshua gave them an inheritance among their father’s brothers, in keeping with the command of the LORD.
4 அவர்கள் குரு எலயாசரையும், நூனின் மகன் யோசுவாவையும், தலைவர்களையும் அணுகி, "எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார்" என்றனர். ஆண்டவரின் கட்டளைப்படி அவர்களுக்கு அவர்களுடைய தந்தையின் சகோதரர்களின் நடுவில் உரிமைச்சொத்து அளித்தார்.1

5וַיִּפְּל֥וּ חַבְלֵֽי־מְנַשֶּׁ֖ה עֲשָׂרָ֑ה לְבַ֞ד מֵאֶ֤רֶץ הַגִּלְעָד֙ וְהַבָּשָׁ֔ן אֲשֶׁ֖ר מֵעֵ֥בֶר לַיַּרְדֵּֽן׃

5 யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.
5 Thus ten shares fell to Manasseh, in addition to the land of Gilead and Bashan beyond the Jordan,
5 யோர்தானுக்கு அப்பால் உள்ள கிலயாது, பாசான் நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன.

6כִּ֚י בְּנ֣וֹת מְנַשֶּׁ֔ה נָחֲל֥וּ נַחֲלָ֖ה בְּת֣וֹךְ בָּנָ֑יו וְאֶ֙רֶץ֙ הַגִּלְעָ֔ד הָיְתָ֥ה לִבְנֵֽי־מְנַשֶּׁ֖ה הַנּֽוֹתָרִֽים׃

6 மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.
6 because the daughters of Manasseh received an inheritance among his sons. And the land of Gilead belonged to the rest of the sons of Manasseh.
6 ஏனெனில், மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுடன் சொத்துரிமை பெற்றனர். கிலயாது நாடு மனாசேயின் ஏனைய புதல்வருக்குக் கிடைத்தது.

7וַיְהִ֤י גְבוּל־מְנַשֶּׁה֙ מֵֽאָשֵׁ֔ר הַֽמִּכְמְתָ֔ת אֲשֶׁ֖ר עַל־פְּנֵ֣י שְׁכֶ֑ם וְהָלַ֤ךְ הַגְּבוּל֙ אֶל־הַיָּמִ֔ין אֶל־יֹשְׁבֵ֖י עֵ֥ין תַּפּֽוּחַ׃

7 மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.
7 Now the border of Manasseh went from Asher to Michmethath near Shechem, then southward to include the inhabitants of En-tappuah.
7 மனாசேயின் எல்லை ஆசேரிலிருந்து செக்கேமின் எதிரில் உள்ள மிக்மத்தாத்துவரை செல்கின்றது. அவ்வெல்லை தென் பக்கமாக ஏன் தப்புவாகு பகுதியில் வாழ்கின்ற மக்களையும் உள்ளடக்கியது.

8לִמְנַשֶּׁ֕ה הָיְתָ֖ה אֶ֣רֶץ תַּפּ֑וּחַ וְתַפּ֛וּחַ אֶל־גְּב֥וּל מְנַשֶּׁ֖ה לִבְנֵ֥י אֶפְרָֽיִם׃

8 தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.
8 The region of Tappuah belonged to Manasseh, but Tappuah itself, on the border of Manasseh, belonged to Ephraim.
8 தப்புவாகு நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமாயிற்று. மனாசேயின் எல்லையில் இருந்த தப்புவாகு நகர் எப்ராயிமின் மக்களுக்குச் சொந்தமானது.

9וְיָרַ֣ד הַגְּבוּל֩ נַ֨חַל קָנָ֜ה נֶ֣גְבָּה לַנַּ֗חַל עָרִ֤ים הָאֵ֙לֶּה֙ לְאֶפְרַ֔יִם בְּת֖וֹךְ עָרֵ֣י מְנַשֶּׁ֑ה וּגְב֤וּל מְנַשֶּׁה֙ מִצְּפ֣וֹן לַנַּ֔חַל וַיְהִ֥י תֹצְאֹתָ֖יו הַיָּֽמָּה׃

9 அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயின் பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பீராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.
9 From there the border continued southward to the Brook of Kanah. There were cities belonging to Ephraim among the cities of Manasseh, but the border of Manasseh was on the north side of the brook and ended at the Sea.b
9 இவ்வெல்லை கானா நதியை நோக்கி இறங்குகின்றது. நதிக்குத் தென்புறமாக உள்ள இந்நகர்கள் எபிராயிமுக்குச் சொந்தமானவை. இவை மனாசேயின் நகர்களுக்கு நடுவில் உள்ளன. மனாசேயின் எல்லை ஓடைக்கு வடக்கில் உள்ளது. அது கடலில் முடிவடைகிறது.

10נֶ֣גְבָּה לְאֶפְרַ֗יִם וְצָפ֙וֹנָה֙ לִמְנַשֶּׁ֔ה וַיְהִ֥י הַיָּ֖ם גְּבוּל֑וֹ וּבְאָשֵׁר֙ יִפְגְּע֣וּן מִצָּפ֔וֹן וּבְיִשָּׂשכָ֖ר מִמִּזְרָֽח׃

10 தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும் கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
10 Ephraim’s territory was to the south, and Manasseh’s was to the north, having the Sea as its border and adjoining Asher on the north and Issachar on the east.
10 எப்ராயிமின் பகுதிக்குத் தெற்காகவும், மனாசேயின் பகுதிக்கு வடக்காகவும் கடல் அதன் எல்லையாக இருந்தது. அவை வடக்கில் ஆசேருக்கு உரிய எல்லையையும், கிழக்கில் இசக்காருக்கு உரிய எல்லையையும் தொட்டன.

11וַיְהִ֨י לִמְנַשֶּׁ֜ה בְּיִשָּׂשכָ֣ר וּבְאָשֵׁ֗ר בֵּית־שְׁאָ֣ן וּ֠בְנוֹתֶיהָ וְיִבְלְעָ֨ם וּבְנוֹתֶ֜יהָ וְֽאֶת־יֹשְׁבֵ֧י דֹ֣אר וּבְנוֹתֶ֗יהָ וְיֹשְׁבֵ֤י עֵֽין־דֹּר֙ וּבְנֹתֶ֔יהָ וְיֹשְׁבֵ֤י תַעְנַךְ֙ וּבְנֹתֶ֔יהָ וְיֹשְׁבֵ֥י מְגִדּ֖וֹ וּבְנוֹתֶ֑יהָ שְׁלֹ֖שֶׁת הַנָּֽפֶת׃

11 இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும் எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.
11 Within Issachar and Asher, Manasseh was assigned Beth-shean, Ibleam, Dor (that is, Naphath), Endor, Taanach, and Megiddo, each with their surrounding settlements.
11 இசக்கார், ஆசேர் எல்லைகளுக்குள் பெத்சானும் அதன் ஊர்களும், இப்லயாமும் அதன் ஊர்களும், தோரின் குடிமக்களும் அதன் ஊர்களும், ஏன்தோரின் குடிமக்களும், அதன் ஊர்களும், தானாக்கின் குடிமக்களும் அதன் ஊர்களும், மெகிதோவின் குடிமக்களும் அதன் ஊர்களும் மனாசேக்கு உரிமையாக்கப்பட்டன.

12וְלֹ֤א יָכְלוּ֙ בְּנֵ֣י מְנַשֶּׁ֔ה לְהוֹרִ֖ישׁ אֶת־הֶֽעָרִ֣ים הָאֵ֑לֶּה וַיּ֙וֹאֶל֙ הַֽכְּנַעֲנִ֔י לָשֶׁ֖בֶת בָּאָ֥רֶץ הַזֹּֽאת׃

12 மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.
12 But the descendants of Manasseh were unable to occupy these cities, because the Canaanites were determined to stay in this land.
12 மனாசேயின் மக்களால் இந்நகர்களைக் கைப்பற்ற முடியவில்லை. கானானியர் அப்பகுதியிலேயே உறுதியுடன் தங்கிவிட்டனர்.

13וֽ͏ַיְהִ֗י כִּ֤י חֽ͏ָזְקוּ֙ בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל וַיִּתְּנ֥וּ אֶת־הַֽכְּנַעֲנִ֖י לָמַ֑ס וְהוֹרֵ֖שׁ לֹ֥א הוֹרִישֽׁוֹ׃

13 இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.
13 However, when the Israelites grew stronger, they put the Canaanites to forced labor; but they failed to drive them out completely.
13 இஸ்ரயேலரின் புதல்வர் வலிமை பெற்றவுடன் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அடிமை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர்.2

14וַֽיְדַבְּרוּ֙ בְּנֵ֣י יוֹסֵ֔ף אֶת־יְהוֹשֻׁ֖עַ לֵאמֹ֑ר מַדּוּעַ֩ נָתַ֨תָּה לִּ֜י נַחֲלָ֗ה גּוֹרָ֤ל אֶחָד֙ וְחֶ֣בֶל אֶחָ֔ד וֽ͏ַאֲנִ֣י עַם־רָ֔ב עַ֥ד אֲשֶׁר־עַד־כֹּ֖ה בֵּֽרְכַ֥נִי יְהוָֽה׃

14 யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
14 Then the sons of Joseph said to Joshua, “Why have you given us only one portion as an inheritance? We have many people, because the LORD has blessed us abundantly.”
14 யோசேப்பின் புதல்வர் யோசுவாவிடம், "ஏன் எங்களுக்கு உரிமைச் சொத்தாக ஒரே ஒரு பங்கு அளித்தீர்? எங்கள் மக்கள் பெருந்தொகையினர். ஆண்டவர் எங்களுக்கு இத்துணை ஆசி வழங்கியுள்ளார்!" என்றனர்.

15וַיֹּ֨אמֶר אֲלֵיהֶ֜ם יְהוֹשֻׁ֗עַ אִם־עַם־רַ֤ב אַתָּה֙ עֲלֵ֣ה לְךָ֣ הַיַּ֔עְרָה וּבֵרֵאתָ֤ לְךָ֙ שָׁ֔ם בְּאֶ֥רֶץ הַפְּרִזִּ֖י וְהָֽרְפָאִ֑ים כִּֽי־אָ֥ץ לְךָ֖ הַר־אֶפְרָֽיִם׃

15 அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம்பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.
15 Joshua answered them, “If you have so many people that the hill country of Ephraim is too small for you, go to the forest and clear for yourself an area in the land of the Perizzites and the Rephaim.”
15 யோசுவா அவர்களிடம், "நீங்கள் திரளான மக்களாக இருப்பதால் பெரிசியர், இரபாயிம் ஆகியோரின் காட்டு நிலத்திற்குப் போய் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். எப்ராயிம் மலைப்பகுதியோ உங்களுக்கு மிகவும் குறுகலானது" என்றார்.

16וַיֹּֽאמְרוּ֙ בְּנֵ֣י יוֹסֵ֔ף לֹֽא־יִמָּ֥צֵא לָ֖נוּ הָהָ֑ר וְרֶ֣כֶב בַּרְזֶ֗ל בְּכָל־הַֽכְּנַעֲנִי֙ הַיֹּשֵׁ֣ב בְּאֶֽרֶץ־הָעֵ֔מֶק לֽ͏ַאֲשֶׁ֤ר בְּבֵית־שְׁאָן֙ וּבְנוֹתֶ֔יהָ וְלַֽאֲשֶׁ֖ר בְּעֵ֥מֶק יִזְרְעֶֽאל׃

16 அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.
16 “The hill country is not enough for us,” they replied, “and all the Canaanites who live in the valley have iron chariots, both in Beth-shean with its towns and in the Valley of Jezreel.”
16 யோசேப்பின் மக்கள், "மலைப்பகுதி எங்களுக்குப் போதாது. மேலும், சமவெளியில் இருக்கும் பெத்சானிலும் அதன் ஊர்களிலும், மற்றும் இஸ்ரியேல் சமவெளியிலும் வாழும் கானானியர் அனைவரிடமும் இரும்புத் தேர்கள் இருக்கின்றன" என்றனர்.

17וַיֹּ֤אמֶר יְהוֹשֻׁ֙עַ֙ אֶל־בֵּ֣ית יוֹסֵ֔ף לְאֶפְרַ֥יִם וְלִמְנַשֶּׁ֖ה לֵאמֹ֑ר עַם־רַ֣ב אַתָּ֗ה וְכֹ֤חַ גָּדוֹל֙ לָ֔ךְ לֹֽא־יִהְיֶ֥ה לְךָ֖ גּוֹרָ֥ל אֶחָֽד׃

17 யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.
17 So Joshua said to the house of Joseph—to Ephraim and Manasseh—“You have many people and great strength. You shall not have just one allotment,
17 யோசுவா யோசேப்பின் வீட்டாரான எப்ராயிமிடமும் மனாசேயிடமும், "நீங்கள் திரளான மக்கள். வலிமை மிக்கவர்கள். உங்களுக்கு ஒரு பங்கு மட்டும் இல்லை.

18כִּ֣י הַ֤ר יִֽהְיֶה־לָּךְ֙ כִּֽי־יַ֣עַר ה֔וּא וּבֵ֣רֵאת֔וֹ וְהָיָ֥ה לְךָ֖ תֹּֽצְאֹתָ֑יו כִּֽי־תוֹרִ֣ישׁ אֶת־הַֽכְּנַעֲנִ֗י כִּ֣י רֶ֤כֶב בַּרְזֶל֙ ל֔וֹ כִּ֥י חָזָ֖ק הֽוּא׃

18 அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.
18 because the hill country will be yours as well. It is a forest; clear it, and its farthest limits will be yours. Although the Canaanites have iron chariots and although they are strong, you can drive them out.”
18 மலைப்பகுதியும் உங்களுடையதே. அது காட்டுப் பகுதியாக இருப்பதால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். அதன் எல்லை அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். ஏனெனில், கானானியருக்கு இரும்புத் தேர்கள் இருந்தாலும், அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களை விரட்டுவீர்கள்" என்றார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Joshua Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21  22   23   24

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
2 a Abiezer  is a variant of Iezer ; see Numbers 26:30.
b That is, the Mediterranean Sea, also called the Great Sea; also in verse 10

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.