பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Judges நியாயாதிபதிகள் שֹׁפְטִים
நியாயாதிபதிகள் 17 | Judges 17
Micah’s Idolatry
1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
1 Now a man named Micah from the hill country of Ephraim
1 எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் மீக்கா.
2 அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
2 said to his mother, “The eleven hundred shekels of silver that were taken from you and about which I heard you utter a curse—I have the silvera here with me; I took it.” Then his mother said, “Blessed be my son by the LORD!”
2 அவர் தம் தாயிடம், "உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான்" என்றார். அப்பொழுது அவர் தாய், "என் மகனே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!" என்றார்.
3 அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டு பண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்பொழுதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
3 And when he had returned the eleven hundred shekels of silver to his mother, she said, “I wholly dedicate the silver to the LORD for my son’s benefit, to make a graven image and a molten idol. Therefore I will now return it to you.”
3 அவர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் தம் தாயிடம் திருப்பிக் கொடுக்க, அவர் தாய், "என் மகன் உனக்காக என் கையிலிருந்து இந்த வெள்ளிக் காசுகளை ஆண்டவருக்கு நேர்ச்சையாக அர்ப்பணிக்கின்றேன். அவற்றைக் கொண்டு செதுக்கிய உருவத்தையும் வார்ப்புச் சிலையையும் செய்துகொள். எனவே, அவற்றை இப்பொழுதே உன்னிடம் திருப்பித் தருகின்றேன்" என்றார்.
4 அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
4 So he returned the silver to his mother, and she took two hundred shekels of silverb and gave them to a silversmith, who made them into a graven image and a molten idol. And they were placed in the house of Micah.
4 அவர் தம் தாயிடம் திருப்பிக் கொடுத்த வெள்ளிக் காசுகளிலிருந்து அவர் தாய் இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்து, அதைத் தட்டானிடம் கொடுத்தார். அவர் அதை செதுக்கிய உருவமாகவும், வார்ப்புச் சிலையாகவும் செய்தார். அது மீக்காவின் வீட்டில் இருந்தது.
5 மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டு பண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டை பண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
5 Now this man Micah had a shrine, and he made an ephod and some household idols, and ordainedc one of his sons as his priest.
5 இந்தத் தெய்வங்களுக்கான கோவில் ஒன்று மீக்காவிற்குச் சொந்தமாக இருந்தது. அவர் ஏபோதையும் தெராபிமையும் செய்தார்; தம் புதல்வருள் ஒருவரைக் குருவாக நியமித்தார்.
6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
6 In those days there was no king in Israel; everyone did what was right in his own eyes.
6 அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.*
* நீதி 21:25.
7 யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்.
7 And there was a young Levite from Bethlehem in Judah who had been residing within the clan of Judah.
7 யூதாநாட்டுப் பெத்லகேமில், யூதா குலத்தைச் சார்ந்த லேவியரான ஓர் இளைஞர் தங்கியிருந்தார்.
8 அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
8 This man left the city of Bethlehem in Judah to settle where he could find a place. And as he traveled, he came to Micah’s house in the hill country of Ephraim.
8 அவர் யூதாநாட்டுப் பெத்லகேம் நகரிலிருந்து தாம் தங்கி வாழ, வேறோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் எப்ராயிம் மலைப்பகுதியில் இருந்த மீக்காவின் வீட்டை நெருங்கினார்.
9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப் போகிறேன் என்றான்.
9 “Where are you from?” Micah asked him. “I am a Levite from Bethlehem in Judah,” he replied, “and I am on my way to settle wherever I can find a place.”
9 மீக்கா அவரிடம், "எங்கிருந்து வருகின்றீர்?" என்று கேட்டார். அவர் அவரிடம், "நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்" என்றார்.
10 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.
10 “Stay with me,” Micah said to him, “and be my father and priest, and I will give you ten shekels of silverd per year, a suit of clothes, and your provisions.” So the Levite went in
10 மீக்கா அவரிடம், "என்னுடன் தங்கும்; எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர். நான் உமக்கு ஆண்டொன்றுக்குப் பத்து வெள்ளிக் காசுகளும் உடையும் உணவும் தருவேன்" என்றார்.
11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.
11 and agreed to stay with him, and the young man became like a son to Micah.
11 லேவியர் அவருடன் சென்றார். லேவியர் அவரோடு விருப்பமுடன் தங்கினார். அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல் இருந்தார்.
12 மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டை பண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி மீகாவின் வீட்டில் இருந்தான்.
12 Micah ordained the Levite, and the young man became his priest and lived in his house.
12 மீக்கா, இளைஞரான அந்த லேவியரைக் குருவாக நியமித்தார். அவர் மீக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
13 Then Micah said, “Now I know that the LORD will be good to me, because a Levite has become my priest.”
13 மீக்கா, "இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன். ஏனெனில், ஒரு லேவியரே எனக்குக் குருவாக இருக்கின்றார்" என்றார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a 1,100 shekels is approximately 27.6 pounds or 12.5 kilograms of silver; also in verse 3.
4 b 200 shekels is approximately 5 pounds or 2.3 kilograms of silver.
5 c Hebrew filled the hand of ; also in verse 12
10 d 10 shekels is approximately 4 ounces or 114 grams of silver.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.