பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Judges நியாயாதிபதிகள் שֹׁפְטִים
நியாயாதிபதிகள் 21 | Judges 21
Wives for the Benjamites
1 இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும் போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.
1 Now the men of Israel had sworn an oath at Mizpah, saying, “Not one of us will give his daughter in marriage to a Benjamite.”
1 மிஸ்பாவில் இருந்த இஸ்ரயேல் வீரர்கள், "எங்களில் ஒருவனும் தன் மகளைப் பென்யமினுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டான்" என்று ஆணையிட்டுக் கூறினர்.
2 ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது;
2 So the people came to Bethel and sat there before God until evening, lifting up their voices and weeping bitterly.
2 ஆயினும், மக்கள் பெத்தேலுக்கு வந்து மாலைவரை அங்கே கடவுளின் திருமுன் அமர்ந்து ஓலமிட்டு அழுதனர்.
3 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.
3 “Why, O LORD God of Israel,” they cried out, “has this happened in Israel? Today in Israel one tribe is missing!”
3 அவர்கள், "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் இந்நாளில் குறைந்திருக்கும் இந்நிலை ஏற்பட்டது ஏன்?" என்று கேட்டனர்.
4 மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.
4 The next day the people got up early, built an altar there, and presented burnt offerings and peace offerings.
4 மறுநாள், பொழுது புலர்ந்ததும் அவர்கள் எழுந்து அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
5 கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
5 The Israelites asked, “Who among all the tribes of Israel did not come to the assembly before the LORD?” For they had taken a solemn oath that anyone who failed to come up before the LORD at Mizpah would surely be put to death.
5 இஸ்ரயேலின் புதல்வர், "இஸ்ரயேல் குலங்கள் அனைத்திலிருந்தும் ஆண்டவர்திருமுன் கூடிய சபைக்கு யார் வரவில்லை?" என்று கேட்டனர். ஏனெனில், அவர்கள் மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடும் சபைக்கு வராதவனைக் கண்டிப்பாகக் கொல்வோம் என்று ஆணையிட்டுக் கடும் சபதம் எடுத்திருந்தனர்.
6 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.
6 And the Israelites grieved for their brothers, the Benjamites, and said, “Today a tribe is cut off from Israel.
6 அவர்கள் தங்கள் சகோதரர்களாகிய பென்யமின் புதல்வர் மீது இரக்கம் கொண்டனர். "இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டு விட்டது.
7 மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர் மேல் ஆணையிட்டுக்கொண்டோமே,
7 What should we do about wives for the survivors, since we have sworn by the LORD not to give them our daughters in marriage?”
7 நாம் நம் பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க மாட்டோம் என்று ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுக் கூறியுள்ளோம். அவர்களில் எஞ்சியிருப்போருக்கு மனைவியர் கிடைக்க நாம் என்ன செய்யலாம்" என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.
8 இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.
8 So they asked, “Which one of the tribes of Israel failed to come up before the LORD at Mizpah?” And, in fact, no one from Jabesh-gilead had come to the camp for the assembly.
8 இஸ்ரயேலின் குலங்களிலிருந்து மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு எந்தக் குலம் வரவில்லை என்று பார்த்தபொழுது கிலயாதைச் சார்ந்த யாபேசிலிருந்து சபைக்கு ஒருவரும் வரவில்லை என்று கண்டனர்.
9 ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்ட போது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
9 For when the people were counted, none of the residents of Jabesh-gilead were there.
9 மக்கள் எண்ணப்பட்டனர். கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஒருவரும் அங்கே இல்லை.
10 உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.
10 So the congregation sent 12,000 of their most valiant men and commanded them: “Go and put to the sword those living in Jabesh-gilead, including women and children.
10 இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆற்றல்மிகு வீரர்களுள் பன்னீராயிரம் பேர்களிடம், "புறப்பட்டுச் செல்லுங்கள், கிலயாதைச் சார்ந்த யாபேசில் வாழும் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் வெட்டி வீழ்த்துங்கள்" என்று கட்டளையிட்டு அனுப்பினர்.
11 சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
11 This is what you are to do: Devote to destructiona every male, as well as every female who has had relations with a man.”
11 மேலும், அவர்கள் கூறியது: "நீங்கள் செய்ய வேண்டியது, எல்லா ஆண்களையும் ஆணுடன் உறவு கொண்ட பெண்களையும் கொன்று விடுங்கள்."
12 இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
12 So they found among the inhabitants of Jabesh-gilead four hundred young women who had not had relations with a man, and they brought them to the camp at Shiloh in the land of Canaan.
12 அவ்வாறே, வீரர்கள் கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஆணுடன் உறவு கொண்டிராத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்துக் கானான் நாட்டில் இருந்த சீலோ பாசறைக்குக் கொண்டு சென்றனர்.
13 அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.
13 Then the whole congregation sent a message of peace to the Benjamites who were at the rock of Rimmon.
13 இஸ்ரயேல் கூட்டமைப்பினர் அனைவரும் ரிம்மோன் பாறையில் இருந்து பென்யமின் மக்களுக்குத் தூதனுப்பி, அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.
14 அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.
14 And at that time the Benjamites returned and were given the women who were spared from Jabesh-gilead. But there were not enough women for all of them.
14 உடனே பென்யமின் புதல்வர் அங்குத் திரும்பி வந்தனர். இஸ்ரயேலர் கிலயாதைச் சார்ந்த யாபேசில் உயிருடன் இருந்த பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் மணமுடித்துக் கொடுக்க பெண்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
15 இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.
15 The people grieved for Benjamin, because the LORD had made a void in the tribes of Israel.
15 மக்கள் பென்யமின் புதல்வரைக் குறித்து மனம் வருந்தினர். ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேல் குலங்களில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
16 பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்னசெய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு,
16 Then the elders of the congregation said, “What should we do about wives for those who remain, since the women of Benjamin have been destroyed?”
16 கூட்டமைப்பின் முதியோர்கள் "பென்யமின் மக்களில் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எஞ்சியோருக்கு மனைவியாகக் கிடைக்கும்படி என்ன செய்யலாம்?" என்று கேட்டனர்.
17 இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
17 They added, “There must be heirs for the survivors of Benjamin, so that a tribe of Israel will not be wiped out.
17 மேலும், அவர்கள் கூறியது: "பென்யமின் மக்களுக்குச் சொந்த வாரிசு வேண்டும். இல்லையேல், இஸ்ரயேலில் ஒரு குலம் அழிந்துவிடும்.
18 நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண்கொடுக்கக் கூடாது; பென்யமீனருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.
18 But we cannot give them our daughters as wives.” For the Israelites had sworn, “Cursed is he who gives a wife to a Benjamite.”
18 நாம் நம் புதல்வியரை அவர்களுக்கு மனைவியாக அளிக்க முடியாது, ஏனெனில், 'பென்யமின் புதல்வருக்குப் பெண் கொடுப்பவன் சபிக்கப்பட்டவன்' என்று ஆணையிட்டுக் கூறியுள்ளோம்.
19 பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்கு கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,
19 “But look,” they said, “there is a yearly feast to the LORD in Shiloh, which is north of Bethel east of the road that goes up from Bethel to Shechem, and south of Lebonah.”
19 இதோ! பெத்தேலுக்கு வடக்கே, லெபனோனுக்குத் தெற்கே, பெத்தேலிலிருந்து செக்கேமுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் கிழக்கே இருக்கும் சீலோவில் ஆண்டுதோறும் ஆண்டவருக்கு விழா நடைபெறுகின்றது".
20 அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,
20 So they commanded the Benjamites: “Go, hide in the vineyards
20 எனவே, அவர்கள் பென்யமின் புதல்வரை நோக்கி, "செல்லுங்கள். திராட்சைத் தோட்டங்களில் ஒளிந்துகொண்டு,
21 சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
21 and watch. When you see the daughters of Shiloh come out to perform their dances, each of you is to come out of the vineyards, catch for himself a wife from the daughters of Shiloh, and go to the land of Benjamin.
21 கவனமாக உற்று நோக்குங்கள், சீலோ மகளிர் நடனமாட வெளியே வரும்பொழுது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொருவனும் சீலோவின் மகளிருள் ஒருத்தியை உங்களுக்கு மனைவியாகத் தூக்கித் கொண்டு பென்யமின் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்.
22 அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிகொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
22 When their fathers or brothers come to us to complain, we will tell them, ‘Do us a favor by helping them, since we did not get wives for each of them in the war. Since you did not actually give them your daughters, you have no guilt.’”
22 அவர்கள் தந்தையரோ சகோதரரோ எங்களிடம் முறையிட வந்தால் நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், போரில் எங்களுள் எவனும் மனைவியாக எப்பெண்ணையும் கவர்ந்து கொள்ளவில்லை. நீங்களும் அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. எனவே, நீங்கள்தாம் குற்றவாளிகள் என்று பதில் அளிப்போம்" என்றனர்.
23 பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
23 The Benjamites did as instructed and carried away the number of women they needed from the dancers they caught. They went back to their own inheritance, rebuilt their cities, and settled in them.
23 பென்யமின் புதல்வரும் அவ்வாறே செய்தனர். தங்கள் எண்ணிக்கைக் கேற்ப நடனமாடியவர்களிலிருந்து கவர்ந்த பெண்களைத் தூக்கிக் கொண்டு தங்கள் உரிமைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு நகர்களைக் கட்டியெழுப்பி அவற்றில் குடியேறினர்.
24 இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
24 And at that time, each of the Israelites returned from there to his own tribe and clan, each to his own inheritance.
24 அப்பொழுது இஸ்ரயேல் புதல்வர்களுள் ஒவ்வொருவனும் தன் குலத்திற்கும் குடும்பத்திற்கும் திரும்பிச் சென்றான். அங்கிருந்து ஒவ்வொருவனும் தன் உரிமைப் பகுதிக்கு சென்றான்.
25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
25 In those days there was no king in Israel; everyone did what was right in his own eyes.
25 அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.*
* நீதி 17:6.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
11 a Forms of the Hebrew cherem refer to the giving over of things or persons to the LORD, either by destroying them or by giving them as an offering.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.