பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Lamentations புலம்பல் אֵיכָה
புலம்பல் 3 | Lamentations 3
The Prophet’s Afflictions
1 ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
1 Ia am the man who has seen affliction under the rod of God’s wrath.
1 ஆண்டவரது சினத்தின் கோலால் வேதனை அனுபவித்த ஒருவன் நான்!
2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
2 He has driven me away and made me walk in darkness instead of light.
2 அவர் என்னைத் துரத்தியடித்து, ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார்!
3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
3 Indeed, He keeps turning His hand against me all day long.
3 உண்மையில் அவர் என்மீது தம் கையை ஓங்குகிறார்! நாள் முழுதும் ஓங்குகிறார்! மீண்டும் மீண்டும் என்னை வதைக்கிறார்!
4 என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
4 He has worn away my flesh and skin; He has shattered my bones.
4 அவர் என் சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்! என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!
5 அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைத்துகொண்டார்.
5 He has besieged me and surrounded me with bitterness and hardship.
5 அவர் கசப்பாலும் துயராலும் என்னை முற்றுகையிட்டு வளைத்துக்கொண்டார்!
6 பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
6 He has made me dwell in darkness like those dead for ages.
6 பண்டைக் காலத்தில் இறந்தோர் போல, இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்!
7 நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.
7 He has walled me in so I cannot escape; He has weighed me down with chains.
7 நான் தப்பிச் செல்ல இயலாதவாறு என்னைச் சுற்றிலும் அவர் மதில் எழுப்பினார்! பளுவான தளைகளால் என்னைக் கட்டினார்!
8 நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
8 Even when I cry out and plead for help, He shuts out my prayer.
8 துணை வேண்டி நான் கூக்குரல் எழுப்பியபோதும், அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுத்துவிட்டார்!
9 வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
9 He has barred my ways with cut stones; He has made my paths crooked.
9 செதுக்கிய கற்களால் என் வழிகளில் தடைச் சுவர் எழுப்பினார்! என் பாதைகளைக் கோணாலாக்கினார்!
10 அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
10 He is a bear lying in wait, a lion hiding in ambush.
10 பதுங்கியிருக்கும் கரடி போன்றும் மறைந்திருக்கும் சிங்கம் போன்றும், அவர் எனக்கு ஆனார்!
11 என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னை பாழாக்கிவிட்டார்.
11 He forced me off my path and tore me to pieces; He left me without help.
11 என் வழிகளினின்று இழுத்துச் சென்று, என்னைப் பீறிக் கிழித்தார்! என்னை முற்றிலும் பாழாக்கினார்!
12 தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
12 He bent His bow and set me as the target for His arrow.
12 அவர் தமது வில்லை நாணேற்றினார்! அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்!
13 தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.
13 He pierced my kidneys with His arrows.
13 அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை என் நெஞ்சுள் பாய்ச்சினார்!
14 நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.
14 I am a laughingstock to all my people; they mock me in song all day long.
14 நாள் முழுதும் நான் என் மக்கள் அனைவரின் நகைப்புக்கு உள்ளானேன்! அவர்களது வசைப்பாடலின் பொருள் ஆனேன்!
15 கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
15 He has filled me with bitterness; He has intoxicated me with wormwood.
15 அவர் கசப்புணவால் என்னை நிரப்பினார்! எட்டிக் காடியால் எனக்கு வெறியூட்டினார்!
16 அவர் பருக்கைக் கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
16 He has ground my teeth with gravel and trampled me in the dust.
16 கற்களால் என் பற்களை நொறுக்கினார்! என்னைப் புழுதியில் போட்டு அவர் மிதித்தார்!
17 என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
17 My soul has been deprived of peace; I have forgotten what prosperity is.
17 அமைதியை நான் இழக்கச் செய்தீர்! நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!
18 என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
18 So I say, “My strength has perished, along with my hope from the LORD.”
18 'என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!' என்று நான் சொல்லிக் கொண்டேன்.
The Prophet’s Hope
19 எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
19 Remember my affliction and wandering, the wormwood and the gall.
19 என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்!
20 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
20 Surely my soul remembers and is humbled within me.
20 அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!
21 இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
21 Yet I call this to mind, and therefore I have hope:
21 இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்; எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
22 Because of the loving devotionb of the LORD we are not consumed, for His mercies never fail.
22 'ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
23 அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
23 They are new every morning; great is Your faithfulness!
23 காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!'
24 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
24 “The LORD is my portion,” says my soul, “therefore I will hope in Him.”
24 'ஆண்டவரே என் பங்கு' என்று என் மனம் சொல்கின்றது! எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.
25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
25 The LORD is good to those who wait for Him, to the soul who seeks Him.
25 ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!
26 கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
26 It is good to wait quietly for the salvation of the LORD.
26 ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
27 தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
27 It is good for a man to bear the yoke while he is still young.
27 இளமையில் நுகம் சுமப்பது மனிதருக்கு நலமானது!
28 அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
28 Let him sit alone in silence, for God has disciplined him.
28 அவரே அதை அவர்கள்மேல் வைத்தார்; எனவே, தனிமையில் அமைதியாய் அவர்கள் அமரட்டும்.
29 நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
29 Let him bury his face in the dust—perhaps there is still hope.
29 அவர்களின் வாய் புழுதியைக் கவ்வட்டும்; நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கலாம்!
30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
30 Let him offer his cheek to the one who would strike him; let him be filled with reproach.
30 தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்! அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!
31 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
31 For the Lord will not cast us off forever.
31 என் தலைவர் என்றுமே கைவிட மாட்டார்!
32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
32 Even if He causes grief, He will show compassion according to His abundant loving devotion.
32 அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.
33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
33 For He does not willingly afflict or grieve the sons of men.
33 மனமார அவர் மானிடரை வருத்துவதுமில்லை; துன்புறுத்துவதுமில்லை.
34 ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
34 To crush underfoot all the prisoners of the land,
34 நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும் காலால் மிதிக்கப்படுவதையோ,
35 உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
35 to deny a man justice before the Most High,
35 உன்னதரின் திருமுன் மனிதருக்கு நீதி மறுக்கப்படுவதையோ,
36 மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
36 to subvert a man in his lawsuit—of these the Lord does not approve.
36 வழக்கில் ஒருவர் வஞ்சிக்கப்படுவதையோ, என் தலைவர் காணாது இருப்பாரோ?
God’s Justice
37 ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
37 Who has spoken and it came to pass, unless the Lord has ordained it?
37 என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியதை நிறைவேற்றக்கூடும்?
38 உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
38 Do not both adversity and good come from the mouth of the Most High?
38 நன்மையும் தீமையும் புறப்படுவது, உன்னதரின் வாயினின்று அன்றோ?
39 உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
39 Why should any mortal man complain, in view of his sins?
39 உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்? மானிடர் அடைவது தம் பாவத்தின் விளைவை அன்றோ?
40 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
40 Let us examine and test our ways, and turn back to the LORD.
40 நம் வழிகளை ஆய்ந்தறிவோம்! ஆண்டவரிடம் திரும்புவோம்!
41 நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
41 Let us lift up our hearts and hands to God in heaven:
41 விண்ணக இறைவனை நோக்கி நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!
42 நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
42 “We have sinned and rebelled; You have not forgiven.”
42 நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்! நீரோ எம்மை மன்னிக்கவில்லை!
43 தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.
43 You have covered Yourself in anger and pursued us; You have killed without pity.
43 நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு எம்மைப் பின்தொடர்ந்தீர்! இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?
44 ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
44 You have covered Yourself with a cloud that no prayer can pass through.
44 எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி, மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!
45 ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
45 You have made us scum and refuse among the nations.
45 மக்களினங்கள் இடையே எம்மை குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!
46 எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
46 All our enemies open their mouths against us.
46 எங்கள் பகைவர் அனைவரும் எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்!
47 திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.
47 Panic and pitfall have come upon us—devastation and destruction.
47 திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன! சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!
48 என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
48 Streams of tears flow from my eyes over the destruction of the daughter of my people.
48 என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் குளமாயின!
49 கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,
49 My eyes overflow unceasingly, without relief,
49 வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன;
50 என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.
50 until the LORD looks down from heaven and sees.
50 ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை, ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!
51 என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.
51 My eyes bring grief to my soul because of all the daughters of my city.
51 என் நகரின் புதல்வியர் அனைவர் நிலை கண்டு, என் உள்ளம் புலம்புகின்றது!
52 முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.
52 Without cause my enemies hunted me like a bird.
52 காரணமின்றி என் பகைவர், பறவையை வேட்டையாடுவது போன்று, என்னை வேட்டையாடினர்!
53 காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
53 They dropped me alive into a pit and cast stones upon me.
53 உயிரோடு என்னைக் குழியில் தள்ளி, என்மேல் கற்களை எறிந்தார்கள்!
54 தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
54 The waters flowed over my head, and I thought I was going to die.
54 வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று! 'நான் தொலைந்தேன்' என்றேன்.
55 மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.
55 I called on Your name, O LORD, out of the depths of the Pit.
55 படுகுழியினின்று ஆண்டவரே! உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.
56 என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
56 You heard my plea: “Do not ignore my cry for relief.”
56 என் குரலை நீர் கேட்டீர்; என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும் உம் செவியை மூடிக்கொள்ளாதீர்!
57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
57 You drew near when I called on You; You said, “Do not be afraid.”
57 உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, 'அஞ்சாதே' என்றீர்!
58 ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
58 You defend my cause, O Lord; You redeem my life.
58 என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்!
59 கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.
59 You have seen, O LORD, the wrong done to me; vindicate my cause!
59 ஆண்டவரே! எனக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்! எனக்கு நீதி வழங்கும்!
60 அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
60 You have seen all their malice, all their plots against me.
60 அவர்களின் பழிவாங்கும் திட்டத்தையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!
61 கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
61 O LORD, You have heard their insults, all their plots against me—
61 ஆண்டவரே! அவர்களின் வசைமொழிகளையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!
62 எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
62 the slander and murmuring of my assailants against me all day long.
62 என் பகைவர் நாள் முழுவதும் எனக்கெதிராக, முணுமுணுத்துத் திட்டமிடுகின்றனர்.
63 அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
63 When they sit and when they rise, see how they mock me in song.
63 பாரும்! அவர்கள் அமர்ந்தாலும் எழுந்தாலும் என்னைப் பற்றியே வசைபாடுகிறார்கள்!
64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
64 You will pay them back what they deserve, O LORD, according to the work of their hands.
64 ஆண்டவரே! அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கைம்மாறு அளித்தருளும்!
65 அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள் மேல் இருக்கும்.
65 Put a veil of anguish over their hearts; may Your curse be upon them!
65 நீர் அவர்கள் மனதைக் கடினப்படுத்தும்! உம் சாபம் அவர்கள்மேல் விழச் செய்யும்!
66 கோபமாய் அவர்களைப் பின் தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.
66 You will pursue them in anger and exterminate them from under Your heavens, O LORD.
66 ஆண்டவரே, சினம் கொண்டு அவர்களைப் பின்தொடரும்! வானத்தின்கீழ் இல்லாதவாறு அவர்களை அழித்தொழியும்!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a This chapter is an acrostic poem, each 3–verse stanza beginning with the successive letters of the Hebrew alphabet.
22 b Forms of the Hebrew chesed are translated here and in most cases throughout the Scriptures as loving devotion ; the range of meaning includes love , goodness , kindness , faithfulness , and mercy , as well as loyalty to a covenant
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.