பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Micah மீகா מִיכָה
மீகா 2 | Micah 2
Woe to Oppressors
1 அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.
1 Woe to those who devise iniquity and plot evil on their beds! At morning’s light they accomplish it because the power is in their hands.
1 தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள்.
2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும் மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ!
2 They covet fields and seize them; they take away houses. They deprive a man of his home, a fellow man of his inheritance.
2 வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.
3 ஆகையால் கர்த்தர்: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாய்த் தீமையை வருவிக்க நினைக்கிறேன்; அதினின்று நீங்கள் கழுத்தை நீக்கமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாய் நடப்பதில்லை; அது தீமையான காலம்.
3 Therefore this is what the LORD says: “I am planning against this nation a disaster from which you cannot free your necks. Then you will not walk so proudly, for it will be a time of calamity.
3 ஆதலால், ஆண்டவர் கூறுவது இதுவே: "இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனினின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்கமாட்டீர்கள்; ஏனெனில், காலம் தீயதாய் இருக்கும்.
4 அந்நாளில் உங்கள்பேரில் ஒப்புச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார்; என்னமாய் அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாய்ப் புலம்புவார்கள்.
4 In that day they will take up a proverb against you and taunt you with this bitter lamentation: ‘We are utterly ruined! He has changed the portion of my people. How He has removed it from me! He has allotted our fields to traitors.’”
4 அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, 'அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!' என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
5 கர்த்தரின் சபையில் சுதந்தரவீதங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
5 Therefore, you will have no one in the assembly of the LORD to divide the land by lot.
5 ஆதலால், நூல்பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.
Reproof of False Prophets (Ezekiel 13:1–16)
6 தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்றார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே.
6 “Do not preach,” they preach. “Do not preach these things; disgrace will not overtake us.”
6 அவர்கள் பிதற்றுவது: 'சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்; அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்; மானக்கேடு நம்மை அணுகாது.
7 யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?
7 Should it be said, O house of Jacob, “Is the Spirit of the LORD impatient? Are these the things He does?” Do not My words bring good to him who walks uprightly?
7 யாக்கோபின் குடும்பத்தாரே, ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ? இவற்றைச் செய்பவர் அவர்தாமோ? நேர்மையாய் நடப்போரிடம் அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?'
8 என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டீர்கள்.
8 But of late My people have risen up like an enemy: You strip off the splendid robe from unsuspecting passersby like men returning from battle.
8 ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப் பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்! போரில் நாட்டம் கொள்ளாமல், அமைதியை நாடுவோரின் மேலாடையைப் பறிக்கின்றீர்கள்; இதனால், அவர்களின் மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;
9 என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய செளக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள்.
9 You drive the women of My people from their pleasant homes. You take away My blessing from their children forever.
9 என் மக்களின் கூட்டத்திலுள்ள பெண்களை அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து விரட்டுகின்றீர்கள்; அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம் என் மாட்சி என்றும் விளங்காதவாறு செய்துவிடுகின்றீர்கள்.
10 எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும்.
10 Arise and depart, for this is not your place of rest, because its defilement brings destruction—a grievous destruction!
10 எழுந்து அகன்றுபோங்கள்; இது இளைப்பாறும் இடம் அல்ல; நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது; அது அழிவைக் கொண்டுவரும். அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.
11 மனம்போகிற போக்கின்படிபோய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான்.
11 If a man of wind were to come and say falsely, “I will preach to you of wine and strong drink,”a he would be just the preacher for this people!
11 'திராட்சை இரசத்தையும் மதுவையும்பற்றி உங்களுக்கு உரையாற்றுவேன்' என்று கூறி, வீண் சொற்களையும் பொய்களையும் பிதற்றுகிறவன்தான் இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!
The Remnant of Israel (Micah 5:7–15)
12 யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.
12 I will surely gather all of you, O Jacob; I will collect the remnant of Israel. I will bring them together like sheep in a pen, like a flock in the midst of its pasture—a noisy throng.
12 யாக்கோபே! நான் உங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டுவேன்; இஸ்ரயேலில் எஞ்சியோரை ஒன்றாகத் திரட்டுவேன்; இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை ஆடுகளைக் கிடையில் மடக்குவது போலவும்; மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலவும் ஒன்றாகச் சேர்ப்பேன்.
13 தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
13 One who breaks open the way will go up before them; they will break through the gate, and go out by it. Their King will pass through before them, the LORD as their leader.
13 அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்; அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
11 a Or “I will prophesy to you for wine and strong drink”
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.