பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Micah  மீகா  מִיכָה

அதிகாரம்  1   2   3   4   5   6   7

மீகா 3 | Micah 3

Rulers and Prophets Condemned

1וָאֹמַ֗ר שִׁמְעוּ־נָא֙ רָאשֵׁ֣י יַעֲקֹ֔ב וּקְצִינֵ֖י בֵּ֣ית יִשְׂרָאֵ֑ל הֲל֣וֹא לָכֶ֔ם לָדַ֖עַת אֶת־הַמִּשְׁפָּֽט׃

1 நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.
1 Then I said: “Hear now, O leaders of Jacob, you rulers of the house of Israel. Should you not know justice?
1 அப்பொழுது நான் கூறியது: "யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ!

2שֹׂ֥נְאֵי ט֖וֹב וְאֹ֣הֲבֵי רעה גֹּזְלֵ֤י עוֹרָם֙ מֵֽעֲלֵיהֶ֔ם וּשְׁאֵרָ֖ם מֵעַ֥ל עַצְמוֹתָֽם׃

2 ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,
2 You hate good and love evil. You tear the skin from my people and strip the flesh from their bones.
2 நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்; என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்;

3וַאֲשֶׁ֣ר אָכְלוּ֮ שְׁאֵ֣ר עַמִּי֒ וְעוֹרָם֙ מֵעֲלֵיהֶ֣ם הִפְשִׁ֔יטוּ וְאֶת־עַצְמֹֽתֵיהֶ֖ם פִּצֵּ֑חוּ וּפָרְשׂוּ֙ כַּאֲשֶׁ֣ר בַּסִּ֔יר וּכְבָשָׂ֖ר בְּת֥וֹךְ קַלָּֽחַת׃

3 என் ஜனத்தின் சதையைத்தின்று அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு அவர்கள் எலும்புகளை முறித்து பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.
3 You eat the flesh of my people after stripping off their skin and breaking their bones. You chop them up like flesh for the cooking pot, like meat in a cauldron.”
3 என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்; அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்; அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள்.

4אָ֚ז יִזְעֲק֣וּ אֶל־יְהוָ֔ה וְלֹ֥א יַעֲנֶ֖ה אוֹתָ֑ם וְיַסְתֵּ֨ר פָּנָ֤יו מֵהֶם֙ בָּעֵ֣ת הַהִ֔יא כַּאֲשֶׁ֥ר הֵרֵ֖עוּ מַעַלְלֵיהֶֽם׃

4 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
4 Then they will cry out to the LORD, but He will not answer them. At that time He will hide His face from them because of the evil they have done.
4 அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்; ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்; ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன."

5כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה עַל־הַנְּבִיאִ֖ים הַמַּתְעִ֣ים אֶת־עַמִּ֑י הַנֹּשְׁכִ֤ים בְּשִׁנֵּיהֶם֙ וְקָרְא֣וּ שָׁל֔וֹם וַאֲשֶׁר֙ לֹא־יִתֵּ֣ן עַל־פִּיהֶ֔ם וְקִדְּשׁ֥וּ עָלָ֖יו מִלְחָמָֽה׃

5 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;
5 This is what the LORD says: “As for the prophets who lead My people astray, who proclaim peace while they chew with their teeth, but declare war against one who puts nothing in their mouths:
5 இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் 'அமைதி உண்டாகுக!' என உரக்கச் சொல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம் 'புனிதப் போர் வரும்' எனக் கூறுகின்றார்கள்."

6לָכֵ֞ן לַ֤יְלָה לָכֶם֙ מֵֽחָז֔וֹן וְחָשְׁכָ֥ה לָכֶ֖ם מִקְּסֹ֑ם וּבָ֤אָה הַשֶּׁ֙מֶשׁ֙ עַל־הַנְּבִיאִ֔ים וְקָדַ֥ר עֲלֵיהֶ֖ם הַיּֽוֹם׃

6 தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.
6 Therefore night will come over you without visions, and darkness without divination. The sun will set on these prophets, and the daylight will turn black over them.
6 ஆதலால் "இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது; முன்னுரைத்தல் இராது; காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்; இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது; பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்."

7וּבֹ֣שׁוּ הַחֹזִ֗ים וְחָֽפְרוּ֙ הַקֹּ֣סְמִ֔ים וְעָט֥וּ עַל־שָׂפָ֖ם כֻּלָּ֑ם כִּ֛י אֵ֥ין מַעֲנֵ֖ה אֱלֹהִֽים׃

7 தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நானி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.
7 Then the seers will be ashamed and the diviners will be disgraced. They will all cover their mouths because there is no answer from God.”
7 காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்; முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது.

8וְאוּלָ֗ם אָנֹכִ֞י מָלֵ֤אתִי כֹ֙חַ֙ אֶת־ר֣וּחַ יְהוָ֔ה וּמִשְׁפָּ֖ט וּגְבוּרָ֑ה לְהַגִּ֤יד לְיַֽעֲקֹב֙ פִּשְׁע֔וֹ וּלְיִשְׂרָאֵ֖ל חַטָּאתֽוֹ׃

8 நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
8 As for me, however, I am filled with power by the Spirit of the LORD, with justice and courage, to declare to Jacob his transgression and to Israel his sin.
8 ஆனால், நான் யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.

9שִׁמְעוּ־נָ֣א זֹ֗את רָאשֵׁי֙ בֵּ֣ית יַעֲקֹ֔ב וּקְצִינֵ֖י בֵּ֣ית יִשְׂרָאֵ֑ל הַֽמֲתַעֲבִ֣ים מִשְׁפָּ֔ט וְאֵ֥ת כָּל־הַיְשָׁרָ֖ה יְעַקֵּֽשׁוּ׃

9 நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,
9 Now hear this, O leaders of the house of Jacob and rulers of the house of Israel, who despise justice and pervert all that is right,
9 யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்; நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்; நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள்.

10בֹּנֶ֥ה צִיּ֖וֹן בְּדָמִ֑ים וִירוּשָׁלַ֖͏ִם בְּעַוְלָֽה׃

10 சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
10 who build Zion with bloodshed and Jerusalem with iniquity.
10 இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள்.

11רָאשֶׁ֣יהָ ׀ בְּשֹׁ֣חַד יִשְׁפֹּ֗טוּ וְכֹהֲנֶ֙יהָ֙ בִּמְחִ֣יר יוֹר֔וּ וּנְבִיאֶ֖יהָ בְּכֶ֣סֶף יִקְסֹ֑מוּ וְעַל־יְהוָה֙ יִשָּׁעֵ֣נוּ לֵאמֹ֔ר הֲל֤וֹא יְהוָה֙ בְּקִרְבֵּ֔נוּ לֹֽא־תָב֥וֹא עָלֵ֖ינוּ רָעָֽה׃

11 அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
11 Her leaders judge for a bribe, her priests teach for a price, and her prophets practice divination for money. Yet they lean upon the LORD, saying, “Is not the LORD among us? No disaster can come upon us.”
11 அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, 'ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது' என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.

12לָכֵן֙ בִּגְלַלְכֶ֔ם צִיּ֖וֹן שָׂדֶ֣ה תֵֽחָרֵ֑שׁ וִירוּשָׁלִַ֙ם֙ עִיִּ֣ין תִּֽהְיֶ֔ה וְהַ֥ר הַבַּ֖יִת לְבָמ֥וֹת יָֽעַר׃

12 ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.
12 Therefore, because of you, Zion will be plowed like a field, Jerusalem will become a heap of rubble, and the temple mount a wooded ridge.
12 ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்; எருசலேம் பாழடைந்த மண் மேடாக மாறும்; கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்."*


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Micah Chapter  1   2   3   4   5   6   7  

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.