பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Micah மீகா מִיכָה
மீகா 4 | Micah 4
The Mountain of the House of the LORD (Isaiah 2:1–4)
1 ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
1 In the last days the mountain of the house of the LORD will be established as the chief of the mountains; it will be raised above the hills, and the peoples will stream to it.
1 "இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை; மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.
2 திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
2 And many nations will come and say: “Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob. He will teach us His ways, so that we may walk in His paths.” For the law will go forth from Zion and the word of the LORD from Jerusalem.
2 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, 'புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்; எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.
3 அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
3 Then He will judge between many peoples and arbitrate for strong nations far and wide. Then they will beat their swords into plowshares and their spears into pruning hooks. Nation will no longer take up the sword against nation, nor will they train anymore for war.
3 அவரே பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்; தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்; அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்; ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.1
1 யோவே 3:10.
4 அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
4 And each man will sit under his own vine and under his own fig tree, with no one to frighten him. For the mouth of the LORD of Hosts has spoken.
4 அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும், அத்தி மரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்; அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை; ஏனெனில், படைகளின் ஆண்டவரது திருவாய் இதை மொழிந்தது.2
5 சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
5 Though each of the peoples may walk in the name of his god, yet we will walk in the name of the LORD our God forever and ever.
5 மக்களினங்கள் யாவும் தம் தெய்வத்தின் பெயரை வழிபடும். நாமோ, நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு என்றென்றும் பணிந்திருப்போம்.
The Restoration of Zion (Zechariah 8:1–23)
6 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
6 “On that day,” declares the LORD, “I will gather the lame; I will assemble the outcast, even those whom I have afflicted.
6 அந்நாளில், "நான் முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்; விரட்டியடிக்கப்பட்டோரையும் என்னால் தண்டிக்கப்பட்டோரையும் ஒன்றுகூட்டுவேன்" என்கிறார் ஆண்டவர்.
7 நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இது முதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.
7 And I will make the lame into a remnant, and the outcast into a strong nation. Then the LORD will rule over them in Mount Zion from that day and forever.
7 முடமாக்கப்பட்டோரை எஞ்சியோராய் ஆக்குவேன்; விரட்டியடிக்கப்பட்டோரை வலியதோர் இனமாக உருவாக்குவேன்; அன்றுமுதல் என்றென்றும் ஆண்டவராகிய நானே சீயோன் மலைமேலிருந்து அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.
8 மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.
8 And you, O watchtower of the flock, O strongholda of the Daughter of Zion—the former dominion will be restored to you; sovereignty will come to the Daughter of Jerusalem.”
8 மந்தையின் காவல் மாடமே! மகள் சீயோனின் குன்றே! முன்னைய அரசுரிமை உன்னை வந்துசேரும்; மகள் எருசலேமின் அரசு உன்னை வந்தடையும்.
9 இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும்.
9 Why do you now cry aloud? Is there no king among you? Has your counselor perished so that anguish grips you like a woman in labor?
9 இப்போது நீ கூக்குரலிட்டுக் கதறுவானேன்? பேறுகாலப் பெண்ணைப்போல் ஏன் வேதனைப்படுகின்றாய்? அரசன் உன்னிடத்தில் இல்லாமற் போனானோ? உனக்கு அறிவு புகட்டுபவன் அழிந்தொழிந்தானோ?
10 சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
10 Writhe in agony, O Daughter of Zion, like a woman in labor. For now you will leave the city and camp in the open fields. You will go to Babylon; there you will be rescued; there the LORD will redeem you from the hand of your enemies!
10 மகளே சீயோன்! பேறுகாலப் பெண்ணைப்போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு; ஏனெனில், இப்பொழுதே நீ நகரைவிட்டு வெளியேறுவாய்; வயல்வெளிகளில் குடியிருப்பாய்; பாபிலோனுக்குப் போவாய்; அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்; உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.
11 சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
11 But now many nations have assembled against you, saying, “Let her be defiled, and let us feast our eyes on Zion.”
11 இப்பொழுது, வேற்றினத்தார் பலர் உனக்கு எதிராய் ஒன்று கூடியிருக்கின்றார்கள்; 'சீயோன் தீட்டுப்படட்டும்; அதன் வீழ்ச்சியை நம் கண்கள் காணட்டும்' என்று சொல்லுகின்றார்கள்.
12 ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
12 But they do not know the thoughts of the LORD or understand His plan, for He has gathered them like sheaves to the threshing floor.
12 ஆனால் அவர்கள் ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை. அவரது திட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல் அவர் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கின்றார்.
13 சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
13 Rise and thresh, O Daughter of Zion, for I will give you horns of iron and hooves of bronze to break to pieces many peoples. Then you will devoteb their gain to the LORD, their wealth to the Lord of all the earth.
13 மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி; நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்; உன்னுடைய குளம்புகளை வெண்கலம் ஆக்குவேன்; மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்கிப்போடுவாய்; அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்; அவர்களது செல்வங்களை அனைத்துலகின் ஆண்டவரிடம் ஒப்படைப்பாய்."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
8 a Or hill ; Hebrew And you, Migdal-eder, the Ophel
13 b Or devote to destruction
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.