பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Nahum நாகூம் נַחוּם
நகூம் 2 | Nahum 2
The Overthrow of Nineveh
1 சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.
1 One who scatters advances against you, O Nineveh. Guard the fortress! Watch the road! Brace yourselves!a Summon all your strength!
1 உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்; கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து; வழிகளில் காவலர்களை அமர்த்து; உம் இடையே வரிந்து கட்டிக்கொள்; உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.
2 வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.
2 For the LORD will restore the splendor of Jacob like the splendor of Israel, though destroyers have laid them waste and ruined the branches of their vine.
2 இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப்போட்டனர்.
3 அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.
3 The shields of his mighty men are red; the valiant warriors are dressed in scarlet. The fittings of the chariots flash like fire on the day they are prepared, and the spears of cypress have been brandished.b
3 எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை; அவனுடைய போர்வீரர் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்; போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கின்றது; குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன.
4 இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.
4 The chariots dash through the streets; they rush around the plazas, appearing like torches, darting about like lightning.
4 வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன; திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன; தீப்பந்தங்களைப்போலச் சுடர்விடுகின்றன; மின்னலைப்போலப் பாய்கின்றன.
5 அவன் தன் பிரபலஸ்தரை நினைவுகூருவான்; அεர்கள் தங்கள் நடைகளில் இடறி, அலங்கத்துக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்.
5 He summons his nobles; they stumble as they advance. They race to its wall; the protective shield is set in place.
5 படைத்தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்; அவர்கள் செல்லும்போது இடறுகின்றார்கள்; கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றார்கள்; காப்புக் கருவி அமைத்தாயிற்று.
6 ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்.
6 The river gates are thrown open and the palace collapses.
6 ஆறுகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. அரண்மனை இடிந்து கரைந்தது.
7 அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்ககள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
7 It is decreed that the city be exiled and carried away; her maidservants moan like doves, and beat upon their breasts.
7 அரசி அணிகள் களையப்பெற்று நாடு கடத்தப்படுகின்றாள்; அவளுடைய பணிப்பெண்கள் புறாக்களைப்போலப் பெருமூச்செறிந்து, மாரடித்துப் புலம்புகின்றார்கள்.
8 நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
8 Nineveh has been like a pool of water throughout her days, but now it is draining away. “Stop! Stop!” they cry, but no one turns back.
8 உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்; 'நில்லுங்கள், நில்லுங்கள்!' என அவர்கள் அலறுகிறார்கள்; ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.
9 வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது.
9 “Plunder the silver! Plunder the gold!” There is no end to the treasure, an abundance of every precious thing.
9 வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்; பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்; கருவூலங்கள் மிகப்பெரியவை; அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களுக்கு அளவே இல்லை.
10 அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.
10 She is emptied! Yes, she is desolate and laid waste! Hearts melt, knees knock, bodies tremble, and every face grows pale!
10 வெறுமை! பாழ்! அழிவு! உள்ளம் சோர்ந்துவிட்டது; கால்கள் தள்ளாடுகின்றன; திகில் அனைவரையும் முற்றிலும் ஆட்கொள்கிறது; முகங்களெல்லாம் வெளிறிப் போகின்றன.
11 சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே?
11 Where is the lions’ lair or the feeding ground of the young lions, where the lion and lioness prowled with their cubs, with nothing to frighten them away?
11 சிங்கங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே? அச்சமின்றி இருந்த தன் குட்டிகளுக்கு அது இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ?
12 சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.
12 The lion mauled enough for its cubs and strangled prey for the lioness. It filled its dens with the kill, and its lairs with mauled prey.
12 சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று.
13 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
13 “Behold, I am against you,” declares the LORD of Hosts. “I will send your chariots up in smoke, and the sword will devour your young lions. I will cut off your prey from the earth, and the voices of your messengers will no longer be heard.”
13 இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்; உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்; உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்; நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்; உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Hebrew Strengthen your loins!
3 b Hebrew; alternately, the spears may be of pine or juniper or fir ; LXX and Syriac they are prepared, and the horsemen rush to and fro.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.