பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Numbers எண்ணாகமம் בְּמִדְבַּר
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
எண்ணாகமம் 13 | Numbers 13
The Spies Explore Canaan (Deuteronomy 1:19–25)
1 கர்த்தர் மோசேயை நோக்கி:
1 And the LORD said to Moses,
1 ஆண்டவர் மோசேயிடம்,
2 நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.
2 “Send out for yourself men to spy out the land of Canaan, which I am giving to the Israelites. From each of their fathers’ tribes send one man who is a leader among them.”
2 "இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்" என்றார்.
3 மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
3 So at the consenta of the LORD, Moses sent them out from the Wilderness of Paran. All the men were leaders of the Israelites,
3 ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள்.
4 அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
4 and these were their names: From the tribe of Reuben, Shammua son of Zaccur;
4 அவர்களின் பெயர்கள்; ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா;
5 சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.
5 from the tribe of Simeon, Shaphat son of Hori;
5 சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று;
6 யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
6 from the tribe of Judah, Caleb son of Jephunneh;
6 யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு;
7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.
7 from the tribe of Issachar, Igal son of Joseph;
7 இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்;
8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.
8 from the tribe of Ephraim, Hoshea son of Nun;
8 எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா;
9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.
9 from the tribe of Benjamin, Palti son of Raphu;
9 பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி;
10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.
10 from the tribe of Zebulun, Gaddiel son of Sodi;
10 செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்;
11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
11 from the tribe of Manasseh (a tribe of Joseph), Gaddi son of Susi;
11 யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி;
12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.
12 from the tribe of Dan, Ammiel son of Gemalli;
12 தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்;
13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
13 from the tribe of Asher, Sethur son of Michael;
13 ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்;
14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.
14 from the tribe of Naphtali, Nahbi son of Vophsi;
14 நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி;
15 காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
15 and from the tribe of Gad, Geuel son of Machi.
15 காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்;
16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
16 These were the names of the men Moses sent to spy out the land; and Moses gave to Hoshea son of Nun the name Joshua.
16 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை 'யோசுவா'* என்று பெயரிட்டு அழைத்தார்.1
1 எபிரேயத்தில், 'விடுதலையளிப்பவர்' என்பது பொருள்.
17 அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
17 When Moses sent them to spy out the land of Canaan, he told them, “Go up through the Negev and into the hill country.
17 கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்; அவர் அவர்களிடம், "நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்;
18 தேசம் எப்படிப்பட்டதென்றும், குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,
18 See what the land is like and whether its people are strong or weak, few or many.
18 அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா,
19 அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
19 Is the land where they live good or bad? Are the cities where they dwell open camps or fortifications?
19 அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா,
20 நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள், தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.
20 Is the soil fertile or unproductive? Are there trees in it or not? Be courageous, and bring back some of the fruit of the land.” (It was the season for the first ripe grapes.)
20 அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்; துணிவுடன் இருங்கள்; அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம்.
21 அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
21 So they went up and spied out the land from the Wilderness of Zin as far as Rehob, toward Lebo-hamath.
21 அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர்.
22 தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.
22 They went up through the Negev and came to Hebron, where Ahiman, Sheshai, and Talmai, the descendants of Anak, dwelled. It had been built seven years before Zoan in Egypt.
22 அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர். அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்; எகிப்திலுள்ள சோவானுக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது.
23 பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
23 When they came to the Valley of Eshcol,b they cut down a branch with a single cluster of grapes, which they carried on a pole between two men. They also took some pomegranates and figs.
23 பின்னர், அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.
24 இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.
24 Because of the cluster of grapes the Israelites cut there, that place was called the Valley of Eshcol.
24 இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு 'எசுக்கோல்'** பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.2
2 எபிரேயத்தில் 'குலை' என்பது பொருள்.
The Reports of the Spies
25 அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.
25 After forty days the men returned from spying out the land,
25 நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.
26 அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
26 and they went back to Moses, Aaron, and the whole congregation of Israel in the Wilderness of Paran at Kadesh. They brought back a report for the whole congregation and showed them the fruit of the land.
26 அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர்.
27 அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
27 And they gave this account to Moses: “We went into the land to which you sent us, and indeed, it is flowing with milk and honey. Here is some of its fruit!
27 அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி.
28 ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.
28 Nevertheless, the people living in the land are strong, and the cities are large and fortified. We even saw the descendants of Anak there.
28 ஆயினும், அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்;
29 அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.
29 The Amalekites live in the land of the Negev; the Hittites, Jebusites, and Amorites live in the hill country; and the Canaanites live by the sea and along the Jordan.”
29 அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர்.
30 அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.
30 Then Caleb quieted the people before Moses and said, “We must go up and take possession of the land, for we can certainly conquer it!”
30 காலேபு மோசேமுன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, "நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்; ஏனெனில், நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்" என்றார்.
31 அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.
31 But the men who had gone up with him replied, “We cannot go up against the people, for they are stronger than we are!”
31 ஆனால், அவருடன் சென்றிருந்த ஆள்கள், "நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில், அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்" என்றனர்.
32 நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.
32 So they gave the Israelites a bad report about the land that they had spied out: “The land we explored devours its inhabitants, and all the people we saw there are great in stature.
32 இவ்வாறு, அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்;
33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
33 We even saw the Nephilim there—the descendants of Anak that come from the Nephilim! We seemed like grasshoppers in our own sight, and we must have seemed the same to them!”
33 அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம்.3
3 தொநூ 6:4.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Literally according to the mouth
23 b Eshcol means cluster ; also in verse 24.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.