பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Numbers எண்ணாகமம் בְּמִדְבַּר
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
எண்ணாகமம் 17 | Numbers 17
Aaron’s Staff Buds
1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:
1 And the LORD said to Moses,
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக.
2 “Speak to the Israelites and take from them twelve staffs, one from the leader of each tribe. Write each man’s name on his staff,
2 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோல் வீதம் அவர்கள் தலைவர்களிடம் தங்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக் கொள்; ஒவ்வொருவன் பெயரையும் அவன் கோலின் மேல் எழுது;
3 லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.
3 and write Aaron’s name on the staff of Levi, because there must be one staff for the head of each tribe.
3 ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது; இவ்வாறு ஒவ்வொரு மூதாதையர் குலத் தலைவனுக்கும் ஒரு கோல் இருக்கும்.
4 அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.
4 Place the staffs in the Tent of Meeting in front of the Testimony,a where I meet with you.
4 பின் அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தில் நான் உன்னைச் சந்திக்கும் உடன்படிக்கைப்பேழை முன் வைப்பாய்.
5 அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.
5 The staff belonging to the man I choose will sprout, and I will rid Myself of the constant grumbling of the Israelites against you.”
5 நான் தெரிந்து கொள்பவரின் கோல் துளிர்க்கும். இங்ஙனம், உங்களுக்கெதிராக முறுமுறுக்கிற இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை என் முன்னின்று ஒழித்து விடுவேன்.
6 இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.
6 So Moses spoke to the Israelites, and each of their leaders gave him a staff—one for each of the leaders of their tribes, twelve staffs in all. And Aaron’s staff was among them.
6 மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசினார்; ஒரு தலைவனுக்கு ஒன்று வீதம் அவர்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரு கோல்களை அவர்கள் தலைவர்கள் அவரிடம் கொடுத்தனர்; அவர்கள் கோல்களுள் ஆரோன் கோலும் இருந்தது.
7 அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.
7 Then Moses placed the staffs before the LORD in the Tent of the Testimony.
7 மோசே அந்தக் கோல்களை உடன்படிக்கைக் கூடாரத்தினுள் ஆண்டவர் திருமுன் வைத்தார்.
8 மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.
8 The next day Moses entered the Tent of the Testimony and saw that Aaron’s staff, representing the house of Levi, had sprouted, put forth buds, blossomed, and produced almonds.
8 மறுநாள் மோசே உடன்படிக்கைக் கூடாரத்தினுள் சென்றார்; லேவிகுலத்துக்காக இருந்த ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது; அது துளிர்த்துப் பூத்து வாதுமைப் பழங்களைத் தாங்கியிருந்தது.
9 அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.
9 Then Moses brought out all the staffs from the LORD’s presence to all the Israelites. They saw them, and each man took his own staff.
9 பின்னர், மோசே ஆண்டவர் முன்னின்று எல்லாக் கோல்களையும் எடுத்து வெளியே இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கொண்டு வந்தார்; அவர்கள் பார்த்தார்கள்; ஒவ்வொரு தலைவனும் தன் கோலை எடுத்துக் கொண்டான்.
10 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.
10 The LORD said to Moses, “Put Aaron’s staff back in front of the Testimony, to be kept as a sign for the rebellious, so that you may put an end to their grumbling against Me, lest they die.”
10 ஆண்டவர் மோசேயிடம், "ஆரோன் கோலைத் திரும்ப எடுத்து உடன்படிக்கைப் பேழை முன் வை; எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோர் சாகாதபடி அவர்கள் முறுமுறுப்புகளை என் முன்னின்று நீ ஒழித்துவிட்டதற்கு ஓர் அடையாளமாக அது வைக்கப்படட்டும்" என்றார்.*
* எபி 9:4.
11 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
11 So Moses did as the LORD had commanded him.
11 அப்படியே மோசே செய்தார்; ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.
12 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.
12 Then the Israelites declared to Moses, “Look, we are perishing! We are lost; we are all lost!
12 இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், "இதோ நாங்கள் மடிந்தோம், நாங்கள் அழிந்தோம், அனைவரும் அழிந்தே போனோம்;
13 கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டேவருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.
13 Anyone who comes near the tabernacle of the LORD will die. Are we all going to perish?”
13 நெருங்கி வருகிற எவனும், அதாவது ஆண்டவரின் திருஉறைவிடத்தை நெருங்கி வருகிற எவனும் செத்தே போவான்; நாங்கள் அனைவரும் சாகத்தான் வேண்டுமா?" என்றனர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a The Testimony refers to the stone tablets in the ark of the covenant inscribed with the Ten Commandments; also in verse 10.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.