பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Numbers  எண்ணாகமம்  בְּמִדְבַּר

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

எண்ணாகமம் 30 | Numbers 30

Laws about Vows (Matthew 5:33–37)

1וַיְדַבֵּ֤ר מֹשֶׁה֙ אֶל־רָאשֵׁ֣י הַמַּטּ֔וֹת לִבְנֵ֥י יִשְׂרָאֵ֖ל לֵאמֹ֑ר זֶ֣ה הַדָּבָ֔ר אֲשֶׁ֖ר צִוָּ֥ה יְהוָֽה׃

1 மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்:
1 மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது: கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே;


1 Then Moses said to the heads of the tribes of Israel, “This is what the LORD has commanded:

2אִישׁ֩ כִּֽי־יִדֹּ֨ר נֶ֜דֶר לַֽיהוָ֗ה אֽוֹ־הִשָּׁ֤בַע שְׁבֻעָה֙ לֶאְסֹ֤ר אִסָּר֙ עַל־נַפְשׁ֔וֹ לֹ֥א יַחֵ֖ל דְּבָר֑וֹ כְּכָל־הַיֹּצֵ֥א מִפִּ֖יו יַעֲשֶֽׂה׃

2 ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.
2 If a man makes a vow to the LORD or swears an oath to obligate himself by a pledge, he must not break his word; he must do everything he has promised.a
2 ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்.*

3וְאִשָּׁ֕ה כִּֽי־תִדֹּ֥ר נֶ֖דֶר לַיהוָ֑ה וְאָסְרָ֥ה אִסָּ֛ר בְּבֵ֥ית אָבִ֖יהָ בִּנְעֻרֶֽיהָ׃

3 தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண் பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,
3 And if a woman in her father’s house during her youth makes a vow to the LORD or obligates herself by a pledge,
3 ஒரு பெண் இளமையில் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போது ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றைச் செய்து உறுதிமொழிக்குத் தான் கட்டுப்பட்டிருக்க,

4וְשָׁמַ֨ע אָבִ֜יהָ אֶת־נִדְרָ֗הּ וֽ͏ֶאֱסָרָהּ֙ אֲשֶׁ֣ר אֽ͏ָסְרָ֣ה עַל־נַפְשָׁ֔הּ וְהֶחֱרִ֥ישׁ לָ֖הּ אָבִ֑יהָ וְקָ֙מוּ֙ כָּל־נְדָרֶ֔יהָ וְכָל־אִסָּ֛ר אֲשֶׁר־אָסְרָ֥ה עַל־נַפְשָׁ֖הּ יָקֽוּם׃

4 அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
4 and her father hears about her vow or pledge but says nothing to her, then all the vows or pledges by which she has bound herself shall stand.
4 அவள் தந்தை அவள் செய்து கொண்ட பொருத்தனையையும் அவள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியையும் கேட்டும் எதையும் அவளிடம் சொல்லவில்லையெனில் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் எடுத்துக்கொண்ட ஒவ்வோர் உறுதிமொழியும் நிலைக்கும்.

5וְאִם־הֵנִ֨יא אָבִ֣יהָ אֹתָהּ֮ בְּי֣וֹם שָׁמְעוֹ֒ כָּל־נְדָרֶ֗יהָ וֽ͏ֶאֱסָרֶ֛יהָ אֲשֶׁר־אָסְרָ֥ה עַל־נַפְשָׁ֖הּ לֹ֣א יָק֑וּם וַֽיהוָה֙ יִֽסְלַח־לָ֔הּ כִּי־הֵנִ֥יא אָבִ֖יהָ אֹתָֽהּ׃

5 அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளிலே அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
5 But if her father prohibits her on the day he hears about it, then none of the vows or pledges by which she has bound herself shall stand. The LORD will absolve her because her father has prohibited her.
5 ஆனால், அவள் தந்தை அதைக் கேட்ட நாளில் அவளுக்கு ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனையோ, அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியோ எதுவும் நிலைக்காது. ஆண்டவரும் அவளை மன்னிப்பார். ஏனெனில், அவள் தந்தை அதற்கு ஒப்புதல் தரவில்லை.

6וְאִם־הָי֤וֹ תִֽהְיֶה֙ לְאִ֔ישׁ וּנְדָרֶ֖יהָ עָלֶ֑יהָ א֚וֹ מִבְטָ֣א שְׂפָתֶ֔יהָ אֲשֶׁ֥ר אָסְרָ֖ה עַל־נַפְשָֽׁהּ׃

6 அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால்,
6 If a woman marries while under a vow or rash promise by which she has bound herself,
6 ஆனால், அவள் பொருத்தனை செய்திருக்கையில் அல்லது கருத்தின்றிக் கூறிய சொற்களால் கட்டுண்டிருக்கையில் ஒருவனுக்கு மணம் முடிக்கப்பட்டிருக்க,

7וְשָׁמַ֥ע אִישָׁ֛הּ בְּי֥וֹם שָׁמְע֖וֹ וְהֶחֱרִ֣ישׁ לָ֑הּ וְקָ֣מוּ נְדָרֶ֗יהָ וֶֽאֱסָרֶ֛הָ אֲשֶׁר־אָסְרָ֥ה עַל־נַפְשָׁ֖הּ יָקֻֽמוּ׃

7 அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
7 and her husband hears of it but says nothing to her on that day, then the vows or pledges by which she has bound herself shall stand.
7 தன் கணவன் அதைக் கேட்டு அவன் அதைக் கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும்; அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.

8וְ֠אִם בְּי֨וֹם שְׁמֹ֣עַ אִישָׁהּ֮ יָנִ֣יא אוֹתָהּ֒ וְהֵפֵ֗ר אֶת־נִדְרָהּ֙ אֲשֶׁ֣ר עָלֶ֔יהָ וְאֵת֙ מִבְטָ֣א שְׂפָתֶ֔יהָ אֲשֶׁ֥ר אָסְרָ֖ה עַל־נַפְשָׁ֑הּ וַיהוָ֖ה יִֽסְלַֽח־לָֽהּ׃

8 அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
8 But if her husband prohibits her when he hears of it, he nullifies the vow that binds her or the rash promise she has made, and the LORD will absolve her.
8 ஆனால், அவள் கணவன் அதை அறியவரும் நாளில் ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகளையும் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கருத்தின்றிக் கூறிய சொற்களையும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறான். ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.

9וְנֵ֥דֶר אַלְמָנָ֖ה וּגְרוּשָׁ֑ה כֹּ֛ל אֲשֶׁר־אָסְרָ֥ה עַל־נַפְשָׁ֖הּ יָק֥וּם עָלֶֽיהָ׃

9 ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.
9 Every vow a widow or divorced woman pledges to fulfill is binding on her.
9 ஒரு விதவை அல்லது மணமுறிவு செய்யப்பட்டவள் செய்துகொண்ட பொருத்தனைக்கும் அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறிய எதற்கும் அவளே பொறுப்பாவாள்.

10וְאִם־בֵּ֥ית אִישָׁ֖הּ נָדָ֑רָה אֽוֹ־אָסְרָ֥ה אִסָּ֛ר עַל־נַפְשָׁ֖הּ בִּשְׁבֻעָֽה׃

10 அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,
10 If a woman in her husband’s house has made a vow or put herself under an obligation with an oath,
10 மேலும், அவள் கணவன் வீட்டில் பொருத்தனை செய்திருக்க அல்லது தன்னைக் கட்டக்குள்ளாக்கும் அளவில் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்க,

11וְשָׁמַ֤ע אִישָׁהּ֙ וְהֶחֱרִ֣שׁ לָ֔הּ לֹ֥א הֵנִ֖יא אֹתָ֑הּ וְקָ֙מוּ֙ כָּל־נְדָרֶ֔יהָ וְכָל־אִסָּ֛ר אֲשֶׁר־אָסְרָ֥ה עַל־נַפְשָׁ֖הּ יָקֽוּם׃

12 அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும்.
11 and her husband hears of it but says nothing to her and does not prohibit her, then all the vows or pledges by which she has bound herself shall stand.
12 ஆனால், அவள் கணவன் அவற்றைக் கேட்ட நாளில் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகளோ, அவளைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் கூறிய வார்த்தைகளோ எவையும் நிலைக்கா; அவள் கணவன் அவற்றை ஒன்றுமில்லாமலாக்கி விட்டான்; ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.

12וְאִם־הָפֵר֩ יָפֵ֨ר אֹתָ֥ם ׀ אִישָׁהּ֮ בְּי֣וֹם שָׁמְעוֹ֒ כָּל־מוֹצָ֨א שְׂפָתֶ֧יהָ לִנְדָרֶ֛יהָ וּלְאִסַּ֥ר נַפְשָׁ֖הּ לֹ֣א יָק֑וּם אִישָׁ֣הּ הֲפֵרָ֔ם וַיהוָ֖ה יִֽסְלַֽח־לָֽהּ׃

13 அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
12 But if her husband nullifies them on the day he hears of them, then nothing that came from her lips, whether her vows or pledges, shall stand. Her husband has nullified them, and the LORD will absolve her.
13 தன்னை வருத்திக்கொள்ளுமாறு அவள் செய்து கொண்ட எந்தப் பொருத்தனையையும் தன்னைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் எடுத்துக்கொண்ட எந்த உறுதி மொழியையும் அவள் கணவன் நிலைப்படுத்தலாம்; அல்லது ஒன்றுமில்லாமல் ஆக்கலாம்.

13כָּל־נֵ֛דֶר וְכָל־שְׁבֻעַ֥ת אִסָּ֖ר לְעַנֹּ֣ת נָ֑פֶשׁ אִישָׁ֥הּ יְקִימֶ֖נּוּ וְאִישָׁ֥הּ יְפֵרֶֽנּוּ׃

14 எந்தப் பொருத்தனையையும் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும்.
13 Her husband may confirm or nullify any vow or any sworn pledge to deny herself.b
14 ஆயினும், அவள் கணவன் ஒருநாளும் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால் அவள் செய்துகொண்ட எல்லாப் பொருத்தனைகளையும் அல்லது அவளைக் கட்டுக்குள்ளாக்கும் அவளின் உறுதிமொழிகள் அனைத்தையும் அவன் நிலைப்படுத்துகிறான். அவன் அவற்றைக் கேட்ட அவளிடம் ஒன்றும் சொல்லாதபடியால் அவன் அவற்றை நிலைப்படுத்தி விட்டான்.

14וְאִם־הַחֲרֵשׁ֩ יַחֲרִ֨ישׁ לָ֥הּ אִישָׁהּ֮ מִיּ֣וֹם אֶל־יוֹם֒ וְהֵקִים֙ אֶת־כָּל־נְדָרֶ֔יהָ א֥וֹ אֶת־כָּל־אֱסָרֶ֖יהָ אֲשֶׁ֣ר עָלֶ֑יהָ הֵקִ֣ים אֹתָ֔ם כִּי־הֶחֱרִ֥שׁ לָ֖הּ בְּי֥וֹם שָׁמְעֽוֹ׃

15 அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான்.
14 But if her husband says nothing to her from day to day, then he confirms all the vows and pledges that bind her. He has confirmed them, because he said nothing to her on the day he heard about them.
15 ஆனால், அவற்றைப் பற்றிக் கேட்டபின் அவன் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால் அவளின் குற்றத்திற்கு அவனே பொறுப்பு.

15וְאִם־הָפֵ֥ר יָפֵ֛ר אֹתָ֖ם אַחֲרֵ֣י שָׁמְע֑וֹ וְנָשָׂ֖א אֶת־עֲוֺנָֽהּ׃

15 அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.
15 But if he nullifies them after he hears of them, then he will bear her iniquity.”
15 ஆனால், அவற்றைப் பற்றிக் கேட்டபின் அவன் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால் அவளின் குற்றத்திற்கு அவனே பொறுப்பு.

16אֵ֣לֶּה הֽ͏ַחֻקִּ֗ים אֲשֶׁ֨ר צִוָּ֤ה יְהוָה֙ אֶת־מֹשֶׁ֔ה בֵּ֥ין אִ֖ישׁ לְאִשְׁתּ֑וֹ בֵּֽין־אָ֣ב לְבִתּ֔וֹ בִּנְעֻרֶ֖יהָ בֵּ֥ית אָבִֽיהָ׃

16 புருஷனையும் ஸ்திரீயையும், தகப்பனையும் தகப்பனுடைய வீட்டில் சிறுவயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
16 These are the statutes that the LORD commanded Moses concerning the relationship between a man and his wife, and between a father and a young daughter still in his home.
16 ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்குமிடையிலும், ஒரு தந்தைக்கும் அவர் வீட்டில் இளமையாயிருக்கும் ஒரு மகளுக்குமிடையிலும் இருக்குமாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிமுறைகள் இவையே.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Numbers Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

Footnotes:
2 a Cited in Matthew 5:33
13 b Or to fast

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.