பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Numbers எண்ணாகமம் בְּמִדְבַּר
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
எண்ணாகமம் 36 | Numbers 36
Zelophehad’s Daughters Marry (Numbers 27:1–11)
1 யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாகவந்து, அவர்களை நோக்கி:
1 Now the family heads of the clan of Gilead son of Machir son of Manasseh, one of the clans of Joseph, approached Moses and the leaders who were the heads of the Israelite families and addressed them,
1 யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில் மனாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகளின் தலைவர்கள், மோசேயிடமும், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர்.
2 சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.
2 saying, “When the LORD commanded my lord to give the land as an inheritance to the Israelites by lot, He also commanded him to give the inheritance of our brother Zelophehad to his daughters.
2 அவர்கள் கூறியது: "இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்துக்காக நாட்டைத் திருவுளச்சீட்டு முறையில் கொடுக்கும்படி ஆண்டவர் எம் தலைவராகிய உமக்குக் கட்டளையிட்டார். எம் சகோதரன் செலோபுகாதின் உரிமைச் சொத்தை அவர் புதல்வியருக்குக் கொடுக்கும்படியும் ஆண்டவரால் உமக்குக் கட்டளையிடப்பட்டது.*
* எண் 27:7.
3 இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே.
3 But if they marry any of the men from the other tribes of Israel, their inheritance will be withdrawn from the portion of our fathers and added to the tribe into which they marry. So our allotted inheritance would be taken away.
3 ஆனால், இஸ்ரயேல் மக்களின் வேறு குலங்களின் புதல்வர்களை அவர்கள் மணம் புரிந்தால் அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையர் உரிமைச் சொத்திலிருந்து எடுக்கப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்பட்டுவிடும்; இவ்வாறு, திருவுளச் சீட்டால் எங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து குறைய நேரிடும்.
4 இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.
4 And when the Jubilee for the Israelites comes, their inheritance will be added to the tribe into which they marry and taken away from the tribe of our fathers.”
4 அத்துடன் இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பின் ஆண்டு வரும்போது அவர்கள் உரிமைச் சொத்து அவர்களுக்குரிய குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்படும்; இவ்வாறு, அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்திலிருந்து குறைய நேரிடும்."
5 அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: யோசேப்பு புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.
5 So at the word of the LORD, Moses commanded the Israelites: “The tribe of the sons of Joseph speaks correctly.
5 மோசே ஆண்டவரின் வார்த்தைப்படியே மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: யோசேப்புப் புதல்வரின் குலம் கூறுவது சரியே;
6 கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக் குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.
6 This is what the LORD has commanded concerning the daughters of Zelophehad: They may marry anyone they please, provided they marry within a clan of the tribe of their father.
6 செலொபுகாதின் புதல்வியரைக் குறித்து ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. "தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்; ஆனால், தங்கள் தந்தையின் குலக் குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்க வேண்டும்.
7 இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.
7 No inheritance in Israel may be transferred from tribe to tribe, because each of the Israelites is to retain the inheritance of the tribe of his fathers.
7 இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது; இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
8 இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.
8 Every daughter who possesses an inheritance from any Israelite tribe must marry within a clan of the tribe of her father, so that every Israelite will possess the inheritance of his fathers.
8 இஸ்ரயேல் மக்களில் எந்த ஒரு குலத்திலும் உரிமைச் சொத்தில் உடைமை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தையின் குலத்திலுள்ள குடும்பம் ஒன்றிலேயே மனைவி ஆவாள். இதனால், இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் உரிமைச் சொத்தில் உடைமை கொண்டிருப்பர்.
9 சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக் கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
9 No inheritance may be transferred from one tribe to another, for each tribe of Israel must retain its inheritance.”
9 எனவே, ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு எந்த உரிமைச் சொத்தும் மாற்றப்படக் கூடாது; இஸ்ரயேல் மக்களின் குலங்கள் ஒவ்வொன்றும் தன் உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்."
10 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்.
10 So the daughters of Zelophehad did as the LORD had commanded Moses.
10 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோபுகாதின் புதல்வியர் செய்தனர்.
11 செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால்,
11 Mahlah, Tirzah, Hoglah, Milcah, and Noah, the daughters of Zelophehad, were married to cousins on their father’s side.
11 செலோபு காதின் புதல்வியரான மக்லா, திர்சா, ஒக்லா, மில்கா, நோவா ஆகியோர் தங்கள் தந்தையாரின் சகோதரர் புதல்வரையே மணந்தனர்.
12 அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது.
12 They married within the clans of the descendants of Manasseh son of Joseph, and their inheritance remained within the tribe of their father’s clan.
12 அவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் புதல்வர் குடும்பங்களில் மணம் புரிந்தனர். எனவே, அவர்களின் உரிமைச் சொத்து அவர்கள் தந்தையர் குலக்குடும்பத்திற்கே சொந்தமாயிருந்தது.
13 எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
13 These are the commandments and ordinances that the LORD gave the Israelites through Moses on the plains of Moab by the Jordan across from Jericho.
13 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்துள்ள மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே வழியாக ஆண்டவர் விதித்த கட்டளைகளும் நீதிச் சட்டங்களும் இவையே.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a That is, Mount Sinai, or possibly a mountain in the range containing Mount Sinai; also in verses 6 and 19
5 b Note that Deuteronomy 1:6 through Deuteronomy 4:40 may be presented as a continuous section of unbroken speech by Moses. In place of multiple levels of nested quotes, this section has been set apart with a double space.
7 c Hebrew Shephelah or lowlands ; that is, the western foothills of Judea
40 d Or the Sea of Reeds
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.