பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Numbers  எண்ணாகமம்  בְּמִדְבַּר

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

எண்ணாகமம் 7 | Numbers 7

Offerings of Dedication

1וַיְהִ֡י בְּיוֹם֩ כַּלּ֨וֹת מֹשֶׁ֜ה לְהָקִ֣ים אֶת־הַמִּשְׁכָּ֗ן וַיִּמְשַׁ֨ח אֹת֜וֹ וַיְקַדֵּ֤שׁ אֹתוֹ֙ וְאֶת־כָּל־כֵּלָ֔יו וְאֶת־הַמִּזְבֵּ֖חַ וְאֶת־כָּל־כֵּלָ֑יו וַיִּמְשָׁחֵ֖ם וַיְקַדֵּ֥שׁ אֹתָֽם׃

1 மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்தநாளில்,
1 On the day Moses finished setting up the tabernacle, he anointed and consecrated it and all its furnishings, along with the altar and all its utensils.
1 மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில்,

2וַיַּקְרִ֙יבוּ֙ נְשִׂיאֵ֣י יִשְׂרָאֵ֔ל רָאשֵׁ֖י בֵּ֣ית אֲבֹתָ֑ם הֵ֚ם נְשִׂיאֵ֣י הַמַּטֹּ֔ת הֵ֥ם הָעֹמְדִ֖ים עַל־הַפְּקֻדִֽים׃

2 தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
2 And the leaders of Israel, the heads of their families, presented an offering. These men were the tribal leaders who had supervised the registration.
2 கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள் ஆகியோர் காணிக்கைகள் கொணர்ந்தனர்.

3וַיָּבִ֨יאוּ אֶת־קָרְבָּנָ֜ם לִפְנֵ֣י יְהוָ֗ה שֵׁשׁ־עֶגְלֹ֥ת צָב֙ וּשְׁנֵ֣י עָשָׂ֣ר בָּקָ֔ר עֲגָלָ֛ה עַל־שְׁנֵ֥י הַנְּשִׂאִ֖ים וְשׁ֣וֹר לְאֶחָ֑ד וַיַּקְרִ֥יבוּ אוֹתָ֖ם לִפְנֵ֥י הַמִּשְׁכָּֽן׃

3 தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
3 They brought as their offering before the LORD six covered carts and twelve oxen—an ox from each leader and a cart from every two leaders—and presented them before the tabernacle.
3 அவர்கள் ஆண்டவர் திருமுன் இரு தலைவர்களுக்கு ஒரு வண்டியும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாடுமாக ஆறுகூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் திருஉறைவிடத்திற்குத் தங்கள் காணிக்கைகளாகக் கொண்டு வந்தனர்.

4וַיֹּ֥אמֶר יְהוָ֖ה אֶל־מֹשֶׁ֥ה לֵּאמֹֽר׃

4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
4 And the LORD said to Moses,
4 பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

5קַ֚ח מֵֽאִתָּ֔ם וְהָי֕וּ לַעֲבֹ֕ד אֶת־עֲבֹדַ֖ת אֹ֣הֶל מוֹעֵ֑ד וְנָתַתָּ֤ה אוֹתָם֙ אֶל־הַלְוִיִּ֔ם אִ֖ישׁ כְּפִ֥י עֲבֹדָתֽוֹ׃

5 நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத்தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.
5 “Accept these gifts from them, that they may be used in the work of the Tent of Meeting. And give them to the Levites, to each man according to his service.”
5 "சந்திப்புக் கூடாரப் பணியைச் செய்வதற்குப் பயன்படும்படி இவற்றைப் பெற்றுக்கொள்; ஒவ்வொருவரின் பணிக்கும் ஏற்ப இவற்றை லேவியரிடம் ஒப்படைப்பாய்".

6וַיִּקַּ֣ח מֹשֶׁ֔ה אֶת־הָעֲגָלֹ֖ת וְאֶת־הַבָּקָ֑ר וַיִּתֵּ֥ן אוֹתָ֖ם אֶל־הַלְוִיִּֽם׃

6 அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.
6 So Moses took the carts and oxen and gave them to the Levites.
6 அவ்வாறே மோசே வண்டிகளையும் மாடுகளையும் பெற்று லேவியரிடம் ஒப்படைத்தார்.

7אֵ֣ת ׀ שְׁתֵּ֣י הָעֲגָלֹ֗ת וְאֵת֙ אַרְבַּ֣עַת הַבָּקָ֔ר נָתַ֖ן לִבְנֵ֣י גֵרְשׁ֑וֹן כְּפִ֖י עֲבֹדָתָֽם׃

7 இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
7 He gave the Gershonites two carts and four oxen, as their service required,
7 கேர்சோன் புதல்வருக்கு அவரவர் பணிக்கேற்ப இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கொடுத்தார்.

8וְאֵ֣ת ׀ אַרְבַּ֣ע הָעֲגָלֹ֗ת וְאֵת֙ שְׁמֹנַ֣ת הַבָּקָ֔ר נָתַ֖ן לִבְנֵ֣י מְרָרִ֑י כְּפִי֙ עֲבֹ֣דָתָ֔ם בְּיַד֙ אִֽיתָמָ֔ר בֶּֽן־אַהֲרֹ֖ן הַכֹּהֵֽן׃

8 நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
8 and he gave the Merarites four carts and eight oxen, as their service required, all under the direction of Ithamar son of Aaron the priest.
8 அவர் மெராரிப் புதல்வருக்கு அவர்கள் பணிக்கேற்ப நான்கு வண்டிகளையும், எட்டு மாடுகளையும் கொடுத்தார்; இவர்கள் பணி குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமரின் மேற்பார்வையில் இருந்தது.

9וְלִבְנֵ֥י קְהָ֖ת לֹ֣א נָתָ֑ן כִּֽי־עֲבֹדַ֤ת הַקֹּ֙דֶשׁ֙ עֲלֵהֶ֔ם בַּכָּתֵ֖ף יִשָּֽׂאוּ׃

9 கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.
9 But he did not give any to the Kohathites, since they were to carry on their shoulders the holy objects for which they were responsible.
9 ஆனால், கோகாத்தின் புதல்வருக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தோளில் வைத்துச் சுமக்க வேண்டிய புனிதப் பொருள்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர்.

10וַיַּקְרִ֣יבוּ הַנְּשִׂאִ֗ים אֵ֚ת חֲנֻכַּ֣ת הַמִּזְבֵּ֔חַ בְּי֖וֹם הִמָּשַׁ֣ח אֹת֑וֹ וַיַּקְרִ֧יבוּ הַנְּשִׂיאִ֛ם אֶת־קָרְבָּנָ֖ם לִפְנֵ֥י הַמִּזְבֵּֽחַ׃

10 பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
10 When the altar was anointed, the leaders approached with their offerings for its dedication and presented them before the altar.
10 மேலும், பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் அதன் அர்ப்பணத்துக்காகவும் தலைவர்கள் காணிக்கைகள் கொண்டு வந்து பலிபீடத்தின் முன்வைத்தனர்.

11וַיֹּ֥אמֶר יְהוָ֖ה אֶל־מֹשֶׁ֑ה נָשִׂ֨יא אֶחָ֜ד לַיּ֗וֹם נָשִׂ֤יא אֶחָד֙ לַיּ֔וֹם יַקְרִ֙יבוּ֙ אֶת־קָרְבָּנָ֔ם לַחֲנֻכַּ֖ת הַמִּזְבֵּֽחַ׃

11 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக, ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.
11 And the LORD said to Moses, “Each day one leader is to present his offering for the dedication of the altar.”
11 ஆண்டவர் மோசேயிடம் "நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும்" என்றார்.

12וַיְהִ֗י הַמַּקְרִ֛יב בַּיּ֥וֹם הָרִאשׁ֖וֹן אֶת־קָרְבָּנ֑וֹ נַחְשׁ֥וֹן בֶּן־עַמִּינָדָ֖ב לְמַטֵּ֥ה יְהוּדָֽה׃

12 அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.
12 On the first day Nahshon son of Amminadab from the tribe of Judah drew near with his offering.
12 முதல் நாளில் தம் காணிக்கையைக் கொண்டு வந்தவர் நகசோன், இவர் யூதா குலத்து அம்மினதாபின் மகன்.

13וְקָרְבָּנ֞וֹ קֽ͏ַעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

13 அவன் காணிக்கையாவது: போஜனபலியாக படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
13 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
13 அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம்* நிறையையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம்** நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று; உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது;12

1 'நூற்று முப்பது செக்கேல்' என்பது எபிரேய பாடம்.

2 'எழுபது செக்கேல்' என்பது எபிரேய பாடம்.

14כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

14 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
14 one gold dish weighing ten shekels,c filled with incense;
14 நூற்றுப் பதினைந்து கிராம்* நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது;3

3 'பத்து செக்கேல்' என்பது எபிரேய பாடம்.

15פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

15 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
15 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
15 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று - இவை எரிபலிக்குரியவை.

16שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

16 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
16 one male goat for a sin offering;
16 பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.

17וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתּוּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵֽי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן נַחְשׁ֖וֹן בֶּן־עַמִּינָדָֽב׃

17 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.
17 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Nahshon son of Amminadab.
17 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - அம்மினதாபின் மகன் நகசோனின் காணிக்கை இதுவே.

18בַּיּוֹם֙ הַשֵּׁנִ֔י הִקְרִ֖יב נְתַנְאֵ֣ל בֶּן־צוּעָ֑ר נְשִׂ֖יא יִשָּׂשכָֽר׃

18 இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
18 On the second day Nethanel son of Zuar, the leader of Issachar, drew near.
18 இரண்டாம் நாளில் காணிக்கை கொண்டு வந்தவர் இசக்கார் தலைவரான சூவாரின் மகன் நெத்தனியேல்.

19הִקְרִ֨ב אֶת־קָרְבָּנ֜וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

19 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
19 The offering he presented was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
19 அவர் கொண்டு வந்த காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

20כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

20 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
20 one gold dish weighing ten shekels, filled with incense;
20 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது.

21פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

21 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,
21 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
21 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை.

22שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

22 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
22 one male goat for a sin offering;
22 பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;

23וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתּוּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן נְתַנְאֵ֖ל בֶּן־צוּעָֽר׃

23 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.
23 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Nethanel son of Zuar.
23 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - சூவாரின் மகன் நெத்தனியேலின் காணிக்கை இதுவே.

24בַּיּוֹם֙ הַשְּׁלִישִׁ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י זְבוּלֻ֑ן אֱלִיאָ֖ב בֶּן־חֵלֹֽן׃

24 மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
24 On the third day Eliab son of Helon, the leader of the Zebulunites, drew near.
24 மூன்றாம் நாள்; செபுலோன் மக்கள் தலைவரான கேலோனின் மகன் எலியாபு.

25קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

25 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
25 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
25 அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று- உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு இருந்தது.

26כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

26 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
26 one gold dish weighing ten shekels, filled with incense;
26 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது.

27פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

27 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
27 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
27 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று. ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை -எரிபலிக்குரியவை.

28שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

28 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
28 one male goat for a sin offering;
28 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;

29וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן אֱלִיאָ֖ב בֶּן־חֵלֹֽן׃

29 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய எலியாபின் காணிக்கை.
29 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Eliab son of Helon.
29 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - கேலோனின் மகன் எலியாபின் காணிக்கை இதுவே.

30בַּיּוֹם֙ הָרְבִיעִ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י רְאוּבֵ֑ן אֱלִיצ֖וּר בֶּן־שְׁדֵיאֽוּר׃

30 நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை, செலுத்தினான்.
30 On the fourth day Elizur son of Shedeur, the leader of the Reubenites, drew near.
30 நான்காம் நாள்; ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்; இவர் செதேயூரின் மகன்.

31קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

31 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
31 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
31 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

32כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת

32 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
32 one gold dish weighing ten shekels, filled with incense;
32 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறைய தூபம் இருந்தது.

33פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

33 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
33 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
33 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.

34שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

34 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
34 one male goat for a sin offering;
34 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

35וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵֽי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן אֱלִיצ֖וּר בֶּן־שְׁדֵיאֽוּר׃

35 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை.
35 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Elizur son of Shedeur.
35 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஐந்து - செதேயூரின் புதல்வன் எலிட்சூரின் காணிக்கை இதுவே.

36בַּיּוֹם֙ הַחֲמִישִׁ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י שִׁמְע֑וֹן שְׁלֻֽמִיאֵ֖ל בֶּן־צוּרִֽישַׁדָּֽי׃

36 ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
36 On the fifth day Shelumiel son of Zurishaddai, the leader of the Simeonites, drew near.
36 ஐந்தாம் நாள்; சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்; இவர் கரிசத்தாயின் மகன்.

37קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

37 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
37 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
37 அவர் காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

38כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

38 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
38 one gold dish weighing ten shekels, filled with incense;
38 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது.

39פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

39 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
39 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
39 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.

40שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת

40 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
40 one male goat for a sin offering;
40 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;

41וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן שְׁלֻמִיאֵ֖ל בֶּן־צוּרִֽישַׁדָּֽי׃

41 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேலின் காணிக்கை.
41 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Shelumiel son of Zurishaddai.
41 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து - ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - சுரிசத்தாயின் புதல்வன் செலுமியேலின் காணிக்கை இதுவே.

42בַּיּוֹם֙ הַשִּׁשִּׁ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י גָ֑ד אֶלְיָסָ֖ף בֶּן־דְּעוּאֵֽל׃

42 ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
42 On the sixth day Eliasaph son of Deuel, the leader of the Gadites, drew near.
42 ஆறாம் நாள்; காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு; இவர் தெகுவேலின் மகன்.

43קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

43 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
43 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
43 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரைக் கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

44כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

44 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
44 one gold dish weighing ten shekels, filled with incense;
44 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.

45פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

45 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
45 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
45 இளங்காளை ஒன்று; ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரி பலிக்குரியவை.

46שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

46 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
46 one male goat for a sin offering;
46 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;

47וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן אֶלְיָסָ֖ף בֶּן־דְּעוּאֵֽל׃

47 சமாதானபலியாக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை.
47 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Eliasaph son of Deuel.
47 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - தெகுவேலின் புதல்வன் எல்யாசாபின் காணிக்கை இதுவே.

48בַּיּוֹם֙ הַשְּׁבִיעִ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י אֶפְרָ֑יִם אֱלִֽישָׁמָ֖ע בֶּן־עַמִּיהֽוּד׃

48 ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
48 On the seventh day Elishama son of Ammihud, the leader of the Ephraimites, drew near.
48 ஏழாம் நாள்; எப்ராயிம் மக்களின் தலைவர் எலிசாமா; இவர் அம்மிகூதின் மகன்.

49קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

49 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
49 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
49 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

50כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

50 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
50 one gold dish weighing ten shekels, filled with incense;
50 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.

51פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

51 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
51 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
51 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று - இவை எரிபலிக்குரியவை.

52שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

52 பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
52 one male goat for a sin offering;
52 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

53וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵֽי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן אֱלִישָׁמָ֖ע בֶּן־עַמִּיהֽוּד׃

53 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
53 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Elishama son of Ammihud.
53 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஐந்து -அம்மிகூதின் புதல்வன் எலிசாமாவின் காணிக்கை இதுவே.

54בַּיּוֹם֙ הַשְּׁמִינִ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י מְנַשֶּׁ֑ה גַּמְלִיאֵ֖ל בֶּן־פְּדָה־צֽוּר׃

54 எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
54 On the eighth day Gamaliel son of Pedahzur, the leader of the Manassites, drew near.
54 எட்டாம் நாள்: மனாசே மக்களின் தலைவர் கமாலியேல், இவர் பெதாசூரின் மகன்.

55קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה

55 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெய் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
55 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
55 அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித் தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

56כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

56 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
56 one gold dish weighing ten shekels, filled with incense;
56 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது.

57פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

57 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
57 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
57 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.

58שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

58 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
58 one male goat for a sin offering;
58 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

59וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן גַּמְלִיאֵ֖ל בֶּן־פְּדָה צֽוּר׃

59 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை.
59 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Gamaliel son of Pedahzur.
59 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - பெதாசூரின் புதல்வன் காமாலியேலின் காணிக்கை இதுவே.

60בַּיּוֹם֙ הַתְּשִׁיעִ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י בִנְיָמ֑͏ִן אֲבִידָ֖ן בֶּן־גִּדְעֹנִֽי׃

60 ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
60 On the ninth day Abidan son of Gideoni, the leader of the Benjamites, drew near.
60 ஒன்பதாம் நாள்; பென்யமின் மக்களின் தலைவர் அபிதான்; இவர்கிதயோனியின் மகன்.

61קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

61 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
61 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
61 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

62כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

62 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
62 one gold dish weighing ten shekels, filled with incense;
62 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது.

63פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

63 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
63 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
63 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.

64שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

64 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
64 one male goat for a sin offering;
64 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

65וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן אֲבִידָ֖ן בֶּן־גִּדְעֹנִֽי׃

65 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை.
65 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Abidan son of Gideoni.
65 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - கிதயோனியின் புதல்வன் அபிதானியின் காணிக்கை இதுவே.

66בַּיּוֹם֙ הָעֲשִׂירִ֔י נָשִׂ֖יא לִבְנֵ֣י דָ֑ן אֲחִיעֶ֖זֶר בֶּן־עַמִּישַׁדָּֽי׃

66 பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
66 On the tenth day Ahiezer son of Ammishaddai, the leader of the Danites, drew near.
66 பத்தாம் நாள்; தாண் மக்களின் தலைவர் அகியேசர், இவர் அம்மிசத்தாயின் மகன்.

67קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

67 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
67 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
67 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

68כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת

68 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
68 one gold dish weighing ten shekels, filled with incense;
68 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.

69פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

69 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
69 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
69 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.

70שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

70 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
70 one male goat for a sin offering;
70 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று,

71וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵֽי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן אֲחִיעֶ֖זֶר בֶּן־עַמִּישַׁדָּֽי׃

71 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை.
71 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Ahiezer son of Ammishaddai.
71 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - அம்மிசத்தாயின் புதல்வன் அகியேசரின் காணிக்கை இதுவே.

72בְּיוֹם֙ עַשְׁתֵּ֣י עָשָׂ֣ר י֔וֹם נָשִׂ֖יא לִבְנֵ֣י אָשֵׁ֑ר פַּגְעִיאֵ֖ל בָּן־עָכְרָֽן׃

72 பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
72 On the eleventh day Pagiel son of Ocran, the leader of the Asherites, drew near.
72 பதினோராம் நாள்; ஆசேர் மக்களின் தலைவர் பகியேல், இவர் ஒக்ரானின் மகன்.

73קָרְבָּנ֞וֹ קַֽעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

73 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
73 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
73 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

74כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

74 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
74 one gold dish weighing ten shekels, filled with incense;
74 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.

75פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

75 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
75 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
75 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை.

76שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

76 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
76 one male goat for a sin offering;
76 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.

77וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵֽי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן פַּגְעִיאֵ֖ל בֶּן־עָכְרָֽן׃

77 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை.
77 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Pagiel son of Ocran.
77 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - ஒக்ரானின் மகன் பகியேலின் காணிக்கை இதுவே.

78בְּיוֹם֙ שְׁנֵ֣ים עָשָׂ֣ר י֔וֹם נָשִׂ֖יא לִבְנֵ֣י נַפְתָּלִ֑י אֲחִירַ֖ע בֶּן־עֵינָֽן׃

78 பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
78 On the twelfth day Ahira son of Enan, the leader of the Naphtalites, drew near.
78 பன்னிரண்டாம் நாள்; நப்தலி மக்களின் தலைவர் அகிரா, இவர் ஏனானின் மகன்;

79קָרְבָּנ֞וֹ קֽ͏ַעֲרַת־כֶּ֣סֶף אַחַ֗ת שְׁלֹשִׁ֣ים וּמֵאָה֮ מִשְׁקָלָהּ֒ מִזְרָ֤ק אֶחָד֙ כֶּ֔סֶף שִׁבְעִ֥ים שֶׁ֖קֶל בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ שְׁנֵיהֶ֣ם ׀ מְלֵאִ֗ים סֹ֛לֶת בְּלוּלָ֥ה בַשֶּׁ֖מֶן לְמִנְחָֽה׃

79 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரρ வெӠύளிՠύகலமும் ஆகிய இவ்விரண்டும்,
79 His offering was one silver platter weighing a hundred and thirty shekels, and one silver bowl weighing seventy shekels, both according to the sanctuary shekel and filled with fine flour mixed with oil for a grain offering;
79 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

80כַּ֥ף אַחַ֛ת עֲשָׂרָ֥ה זָהָ֖ב מְלֵאָ֥ה קְטֹֽרֶת׃

80 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
80 one gold dish weighing ten shekels, filled with incense;
80 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.

81פַּ֣ר אֶחָ֞ד בֶּן־בָּקָ֗ר אַ֧יִל אֶחָ֛ד כֶּֽבֶשׂ־אֶחָ֥ד בֶּן־שְׁנָת֖וֹ לְעֹלָֽה׃

81 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,
81 one young bull, one ram, and one male lamb a year old for a burnt offering;
81 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக் கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.

82שְׂעִיר־עִזִּ֥ים אֶחָ֖ד לְחַטָּֽאת׃

82 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
82 one male goat for a sin offering;
82 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

83וּלְזֶ֣בַח הַשְּׁלָמִים֮ בָּקָ֣ר שְׁנַיִם֒ אֵילִ֤ם חֲמִשָּׁה֙ עַתֻּדִ֣ים חֲמִשָּׁ֔ה כְּבָשִׂ֥ים בְּנֵֽי־שָׁנָ֖ה חֲמִשָּׁ֑ה זֶ֛ה קָרְבַּ֥ן אֲחִירַ֖ע בֶּן־עֵינָֽן׃

83 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.
83 and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Ahira son of Enan.
83 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - ஏனானின் புதல்வன் அகிராவின் காணிக்கை இதுவே.

84זֹ֣את ׀ חֲנֻכַּ֣ת הַמִּזְבֵּ֗חַ בְּיוֹם֙ הִמָּשַׁ֣ח אֹת֔וֹ מֵאֵ֖ת נְשִׂיאֵ֣י יִשְׂרָאֵ֑ל קַעֲרֹ֨ת כֶּ֜סֶף שְׁתֵּ֣ים עֶשְׂרֵ֗ה מִֽזְרְקֵי־כֶ֙סֶף֙ שְׁנֵ֣ים עָשָׂ֔ר כַּפּ֥וֹת זָהָ֖ב שְׁתֵּ֥ים עֶשְׂרֵֽה׃

84 பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.
84 So these were the offerings from the leaders of Israel for the dedication of the altar when it was anointed: twelve silver platters, twelve silver bowls, and twelve gold dishes.
84 பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் இஸ்ரயேல் தலைவர்களிடமிருந்து வந்த அதற்கான அர்ப்பணக்காணிக்கை இதுவே; வெள்ளித்தட்டுகள் பன்னிரண்டு, வெள்ளிக் கலங்கள் பன்னிரண்டு, பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு;

85שְׁלֹשִׁ֣ים וּמֵאָ֗ה הַקְּעָרָ֤ה הָֽאַחַת֙ כֶּ֔סֶף וְשִׁבְעִ֖ים הַמִּזְרָ֣ק הָאֶחָ֑ד כֹּ֚ל כֶּ֣סֶף הַכֵּלִ֔ים אַלְפַּ֥יִם וְאַרְבַּע־מֵא֖וֹת בְּשֶׁ֥קֶל הַקֹּֽדֶשׁ׃

85 ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது.
85 Each silver platter weighed a hundred and thirty shekels, and each silver bowl seventy shekels. The total weight of the silver articles was two thousand four hundred shekels,d according to the sanctuary shekel.
85 தூயகச் செக்கேலின்படி வெள்ளித்தட்டின் நிறை ஒன்றரை கிலோ கிராம், வெள்ளிக்கலத்தின் நிறை எண்ணூறு கிராம். ஆக, தூயகச் செக்கேலின்படி அனைத்து வெள்ளிப்பாத்திரங்களின் நிறை இருபத்தியேழு கிலோ அறுநூறு கிராம்.

86כַּפּ֨וֹת זָהָ֤ב שְׁתֵּים־עֶשְׂרֵה֙ מְלֵאֹ֣ת קְטֹ֔רֶת עֲשָׂרָ֧ה עֲשָׂרָ֛ה הַכַּ֖ף בְּשֶׁ֣קֶל הַקֹּ֑דֶשׁ כָּל־זְהַ֥ב הַכַּפּ֖וֹת עֶשְׂרִ֥ים וּמֵאָֽה׃

86 தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.
86 The twelve gold dishes filled with incense weighed ten shekels each, according to the sanctuary shekel. The total weight of the gold dishes was a hundred and twenty shekels.e
86 தூபம் நிறைந்திருந்த பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு; தூயகச் செக்கேலின்படி ஒவ்வொன்றின் நிறை நூற்றுப் பதினைந்து கிராம். ஆக, பொன் பாத்திரங்கள் அனைத்தின் நிறை ஒரு கிலோ முந்நூற்றி எண்பது கிராம்.

87כָּל־הַבָּקָ֨ר לָעֹלָ֜ה שְׁנֵ֧ים עָשָׂ֣ר פָּרִ֗ים אֵילִ֤ם שְׁנֵים־עָשָׂר֙ כְּבָשִׂ֧ים בְּנֵֽי־שָׁנָ֛ה שְׁנֵ֥ים עָשָׂ֖ר וּמִנְחָתָ֑ם וּשְׂעִירֵ֥י עִזִּ֛ים שְׁנֵ֥ים עָשָׂ֖ר לְחַטָּֽאת׃

87 சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.
87 All the livestock for the burnt offering totaled twelve bulls, twelve rams, and twelve male lambs a year old—together with their grain offerings—and twelve male goats for the sin offering.
87 எரிபலிக்கான மொத்த கால்நடைகள்; காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் பன்னிரண்டு; இவற்றின் உணவுப் படையலும், இவற்றுடன் சேரும்; பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு;

88וְכֹ֞ל בְּקַ֣ר ׀ זֶ֣בַח הַשְּׁלָמִ֗ים עֶשְׂרִ֣ים וְאַרְבָּעָה֮ פָּרִים֒ אֵילִ֤ם שִׁשִּׁים֙ עַתֻּדִ֣ים שִׁשִּׁ֔ים כְּבָשִׂ֥ים בְּנֵי־שָׁנָ֖ה שִׁשִּׁ֑ים זֹ֚את חֲנֻכַּ֣ת הַמִּזְבֵּ֔חַ אַחֲרֵ֖י הִמָּשַׁ֥ח אֹתֽוֹ׃

88 சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதானஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.
88 All the livestock sacrificed for the peace offering totaled twenty-four bulls, sixty rams, sixty male goats, and sixty male lambs a year old. This was the dedication offering for the altar after it was anointed.
88 நல்லுறவுப் பலி செலுத்துவதற்கான மொத்தக் கால்நடைகள்; காளைகள் இருபத்துநான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் அறுபது, பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்டபின் அதன் அர்ப்பண காணிக்கை இதுவே.

89וּבְבֹ֨א מֹשֶׁ֜ה אֶל־אֹ֣הֶל מוֹעֵד֮ לְדַבֵּ֣ר אִתּוֹ֒ וַיִּשְׁמַ֨ע אֶת־הַקּ֜וֹל מִדַּבֵּ֣ר אֵלָ֗יו מֵעַ֤ל הַכַּפֹּ֙רֶת֙ אֲשֶׁר֙ עַל־אֲרֹ֣ן הָעֵדֻ֔ת מִבֵּ֖ין שְׁנֵ֣י הַכְּרֻבִ֑ים וַיְדַבֵּ֖ר אֵלָֽיו׃

89 மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.
89 When Moses entered the Tent of Meeting to speak with the LORD, he heard the voice speaking to him from between the two cherubim above the mercy seatf on the ark of the Testimony.g Thus the LORD spoke to him.
89 ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Numbers Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

Footnotes:
13 a 130 shekels  is approximately 3.3 pounds or 1.48 kilograms; here and throughout this chapter.
13 b 70 shekels  is approximately 1.76 pounds or 797.8 grams; here and throughout this chapter.
14 c 10 shekels  is approximately 4 ounces or 114 grams; here and throughout this chapter.
85 d 2,400 shekels  is approximately 60.3 pounds or 27.4 kilograms.
86 e 120 shekels  is approximately 3 pounds or 1.4 kilograms.
89 f Or atonement cover
89 g That is, the ark of the covenant

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.