பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 16 | Proverbs 16
The Reply of the Tongue Is from the LORD
1 மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
1 The plans of the heart belong to man, but the reply of the tongue is from the LORD.
1 எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.
2 மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
2 All a man’s ways are pure in his own eyes, but his motives are weighed out by the LORD.
2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
3 உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
3 Commit your works to the LORD and your plans will be achieved.
3 உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.
4 கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
4 The LORD has made everything for His purpose—even the wicked for the day of disaster.
4 ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு; பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.
5 மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
5 Everyone who is proud in heart is detestable to the LORD; be assured that he will not go unpunished.
5 இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.
6 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
6 By loving devotion and faithfulness iniquity is atoned for, and by the fear of the LORD one turns aside from evil.
6 அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.
7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
7 When a man’s ways please the LORD, He makes even the man’s enemies live at peace with him.
7 ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.
8 அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
8 Better a little with righteousness than great gain with injustice.
8 தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.
9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
9 A man’s heart plans his course, but the LORD determines his steps.
9 மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.
10 ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
10 A divine verdict is on the lips of a king; his mouth must not betray justice.
10 அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது; தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.
11 சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
11 Honest scales and balances are from the LORD; all the weights in the bag are His concern.
11 நிறைகோலும் துலாக்கோலும் ஆண்ட வருக்கே உரியன; பையிலுள்ள எடைக்கற்க ளெல்லாம் அவரால் உண்டானவை.
12 அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
12 Wicked behavior is detestable to kings, for a throne is established through righteousness.
12 தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்; ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.
13 நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
13 Righteous lips are a king’s delight, and he who speaks honestly is beloved.
13 நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.
14 ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
14 The wrath of a king is a messenger of death, but a wise man will pacify it.
14 அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது; ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.
15 ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
15 When a king’s face brightens, there is life; his favor is like a rain cloud in spring.
15 அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்; அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.
16 பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
16 How much better to acquire wisdom than gold! To gain understanding is more desirable than silver.
16 பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.
17 தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
17 The highway of the upright leads away from evil; he who guards his way protects his life.
17 நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புட னிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.
18 அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
18 Pride goes before destruction, and a haughty spirit before a fall.
18 அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.
19 அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
19 It is better to be lowly in spirit among the humble than to divide the spoil with the proud.
19 மேட்டிமையானவர்களோடு கொள்ளை யடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.
20 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
20 Whoever heeds instruction will find success,a and blessed is he who trusts in the LORD.
20 போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.
21 இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
21 The wise in heart are called discerning, and pleasant speech promotes instruction.
21 ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்; இனிமை யாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.
22 புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
22 Understanding is a fountain of life to its possessor, but the discipline of fools is folly.
22 விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.
23 ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
23 The heart of the wise man instructs his mouth and adds persuasiveness to his lips.
23 ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.
24 இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.
24 Pleasant words are a honeycomb, sweet to the soul and healing to the bones.
24 இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.*
* நீமொ 14:12.
25 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
25 There is a way that seems right to a man, but its end is the way of death.
25 ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.
26 பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
26 A worker’s appetite works for him because his hunger drives him onward.
26 உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.
27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
27 A worthless man digs up evil, and his speechb is like a scorching fire.
27 பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.
28 மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
28 A perverse man spreads dissension, and a gossip divides close friends.
28 கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.
29 கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
29 A violent man entices his neighbor and leads him down a path that is not good.
29 வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.
30 அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
30 He who winks his eye devises perversity; he who purses his lips is bent on evil.
30 கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக் கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.
31 நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
31 Gray hair is a crown of glory; it is attained along the path of righteousness.
31 நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.
32 பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
32 He who is slow to anger is better than a warrior, and he who controls his temper is greater than one who captures a city.
32 வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிற வரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.
33 சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
33 The lot is cast into the lap, but its every decision is from the LORD.
33 மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
20 a Or Whoever speaks prudently will find what is good
27 b Or and what is on his lips
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.