பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 17 | Proverbs 17
Better a Dry Morsel in Quietness
1 சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
1 Better a dry morsel in quietness than a house full of feastinga with strife.
1 சண்டை நடக்கும் வீட்டில் விருந் துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்..
2 புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
2 A wise servant will rule over a disgraceful son and share his inheritance as one of the brothers.
2 முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்ட வனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர் களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.
3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
3 A crucible for silver and a furnace for gold, but the LORD is the tester of hearts.
3 வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத் தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.
4 துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
4 A wicked man listens to evil lips; a liar gives ear to a destructive tongue.
4 தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.
5 ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
5 He who mocks the poor insults their Maker; whoever gloats over calamity will not go unpunished.
5 ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்.
6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
6 Grandchildren are the crown of the aged, and the glory of a son is his father.
6 முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள் ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்கள் தந்தையரே.
7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
7 Eloquent words are unfit for a fool; how much worse are lying lips to a ruler!
7 பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சும் அரசனுக்குப் பொருந்தவே பொருந்தாது.
8 பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
8 A bribe is a charm to its giver; wherever he turns, he succeeds.
8 கைகூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத் தையும் நிறைவேற்றுவார்.
9 குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
9 Whoever conceals an offense promotes love, but he who brings it up separates friends.
9 குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடு கிறவர்; குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறவன் நட்பை முறிப்பான்.
10 மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
10 A rebuke cuts into a man of discernment deeper than a hundred lashes cut into a fool.
10 சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.
11 துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
11 An evil man seeks only rebellion; a cruel messenger will be sent against him.
11 தீயவர் கலகம் செய்வதையே நாடுவர்; அவர்களை அழிக்கக் கொடிய தூதர் அனுப் பப்படுவார்.
12 தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
12 It is better to meet a bear robbed of her cubs than a fool in his folly.
12 மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேட னுக்கு எதிர்ப்படுவது, குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.
13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
13 If anyone returns evil for good, evil will never leave his house.
13 நன்மை செய்தவருக்கு எவர் தீமை செய்கிறாரோ, அவர் வீட்டை விட்டுத் தீமை அகலாது.
14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
14 To start a quarrel is to release a flood; so abandon the dispute before it breaks out.
14 வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்; வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு.
15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்
15 Acquitting the guilty and condemning the righteous—both are detestable to the LORD.
15 குற்றம் செய்தவரை நேர்மையானவ ரென்றும் நேர்மையானவரைக் குற்றம் செய்தவ ரென்றும் தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.
16 ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
16 Why should the fool have money in his hand with no intention of buying wisdom?
16 மதிகேடர் கையில் பணம் இருப்பதால் பயனென்ன? ஞானத்தைப் பெற்றுக்கொள்ளச் செலவிடுவாரா? அவருக்குத் தான் மனமில் லையே!
17 சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
17 A friend loves at all times, and a brother is born for adversity.
17 நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.
18 புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.
18 A man lacking judgment strikes hands in pledge and puts up security for his neighbor.
18 அடுத்தவர் கடனுக்காகப் பொறுப்பேற்று, அவருக்காகப் பிணையாய் நிற்பவன் அறி வில்லாதவனே.
19 வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
19 He who loves transgression loves strife; he who builds his gate high invites destruction.
19 வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்; இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.
20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
20 The one with a perverse heart finds no good, and he whose tongue is deceitful falls into trouble.
20 கோணல் மதியுள்ளவர் நன்மையைக் காணார்; வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்.
21 மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
21 A man fathers a fool to his own grief; the father of a fool has no joy.
21 மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள் ளாவார்; மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.
22 மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
22 A joyful heart is good medicine, but a broken spirit dries up the bones.
22 மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.
23 துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.
23 A wicked man takes a covert bribeb to subvert the course of justice.
23 கயவர் மறைவாகக் கைக்கூலி வாங்கிக் கொண்டு, நியாயத்தின் போக்கையே மாற்றிவிடுவார்.
24 ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.
24 Wisdom is the focus of the discerning, but the eyes of a fool wander to the ends of the earth.
24 உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்; மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.
25 மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
25 A foolish son brings grief to his father and bitterness to her who bore him.
25 மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை; பெற்ற தாய்க்குத் துயரம்.
26 நீதிமானை தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
26 It is surely not good to punish the innocent or to flog a noble for his honesty.
26 நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல; மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.
27 அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
27 A man of knowledge restrains his words, and a man of understanding maintains a calm spirit.
27 தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர்.
28 பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
28 Even a fool is considered wise if he keeps silent, and discerning when he holds his tongue.
28 பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or sacrifices
23 b Hebrew a bribe from the bosom
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.