பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 27 | Proverbs 27
Do Not Boast about Tomorrow (James 4:13–17)
1 நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
1 Do not boast about tomorrow, for you do not know what a day may bring.
1 இன்று நடக்கப்போவதே தெரியாது; நாளை நடக்கப் போவதை அறிந்தவன் போலப் பெருமையாகப் பேசாதே.*
* யாக் 4:13-16.
2 உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
2 Let another praise you, and not your own mouth—a stranger, and not your own lips.
2 உன்னை உன்னுடைய வாயல்ல; மற்றவர் களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.
3 கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
3 A stone is heavy and sand is a burden, but aggravation from a fool outweighs them both.
3 கல்லும் மணலும் பளுவானவை; மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.
4 உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
4 Wrath is cruel and anger is like a flood, but who can withstand jealousy?
4 சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடு மையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?
5 மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
5 Better an open rebuke than love that is concealed.
5 வெளிப்படுத்தப்படாத அன்பை விட, குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.
6 சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
6 The wounds of a friend are faithful, but the kisses of an enemy are deceitful.
6 நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை; பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.
7 திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.
7 The soul that is full loathes honey, but to a hungry soul, any bitter thing is sweet.
7 வயிறார உண்டவர் தேனையும் உதறித் தள்ளுவார்; பசியுள்ளவருக்கோ கசப்பும் இனிக்கும்.
8 தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.
8 Like a bird that strays from its nest is a man who wanders from his home.
8 தம் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிபவர், தன் கூட்டை விட்டு வெளியேறி அலைந்து திரியும் குருவிக்கு ஒப்பானவர்.
9 பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
9 Oil and incense bring joy to the heart, and the sweetness of a friend is counsel to the soul.
9 நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ் விக்கும்; கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.
10 உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.
10 Do not forsake your friend or your father’s friend, and do not go to your brother’s house in the day of your calamity; better a neighbor nearby than a brother far away.
10 உன் நண்பரையும் உன் தந்தையின் நண்பரையும் கைவிடாதே; உனக்கு இடுக்கண் வரும்காலத்தில் உடன்பிறந்தான் வீட்டிற்குச் செல்லாதே; தொலையிலிருக்கும் உடன்பிறந் தாரைவிட அண்மையிலிருக்கும் நன்பரே மேல்.
11 என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
11 Be wise, my son, and bring joy to my heart, so that I can answer him who taunts me.
11 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்; அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.
12 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
12 The prudent see danger and take cover; but the simple keep going and pay the penalty.
12 எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.
13 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.
13 Take the garment of him who posts security for a stranger; get collateral if it is for a foreigner.a
13 அன்னியருடைய கடனுக்காகப் பிணை யாக நிற்கிறவனுடைய ஆடையை எடுத்துக் கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.
14 ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
14 If one blesses his neighbor with a loud voice early in the morning, it will be counted to him as a curse.
14 ஒரு நண்பரிடம் விடியுமுன் போய் உரக்கக் கத்தி அவரை வாழ்த்துவது, அவரைச் சபிப் பதற்குச் சமமெனக் கருதப்படும்.
15 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
15 A constant dripping on a rainy day and a contentious woman are alike—
15 ஓயாது சண்டைபிடிக்கும் மனைவி, அடைமழை நாளில் இடைவிடாத் தூறல் போன்றவள்.
16 அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
16 restraining her is like holding back the wind or grasping oil with one’s right hand.
16 அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்; கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.
17 இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.
17 As iron sharpens iron, so one man sharpens another.b
17 இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர் மதியாளராக்கலாம்.
18 அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
18 Whoever tends a fig tree will eat its fruit, and he who looks after his master will be honored.
18 அத்திமரத்தைக் காத்துப் பேணுகிற வருக்கு அதன் கனி கிடைக்கும்; தம் தலைவரைக் காத்துப் பேணுகிறவருக்கு மேன்மை கிடைக்கும்.
19 தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல. மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
19 As water reflects the face, so the heart reflects the true man.
19 நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.
20 பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.
20 Sheol and Abaddonc are never satisfied; so the eyes of man are never satisfied.
20 பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவ தேயில்லை; ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.
21 வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
21 A crucible for silver and a furnace for gold, but a man is tested by the praise accorded him.
21 வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும் சோதித்துப் பார்க்கும்; ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.
22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
22 Though you grind a fool like grain with mortar and a pestle, yet his folly will not depart from him.
22 மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனது மடமை அவனை விட்டு நீங்காது.
23 உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.
23 Be sure to know the state of your flocks, and pay close attention to your herds;
23 உன் ஆடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்; உன் மந்தையின்மேல் கண்ணும் கருத்து மாயிரு.
24 செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
24 for riches are not forever, nor does a crown endure to every generation.
24 ஏனெனில், செல்வம் எப்போதும் நிலைத் திராது; சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை.
25 புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
25 When hay is removed and new growth appears and the grain from the hills is gathered,
25 புல்லை அறுத்தபின் இளம்புல் முளைக்கும்; மலையில் முளைத்துள்ள புல்லைச் சேர்த்துவை.
26 ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
26 the lambs will provide you with clothing, and the goats with the price of a field.
26 ஆடுகள் உனக்கு ஆடை தரும்; வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.
27 வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.
27 You will have plenty of goats’ milk to feed you—food for your household and nourishment for your maidservants.
27 எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தேவைப்படும் பாலைக் கொடுக்கும்; உன் வேலைக்காரருக்கும் பால் கிடைக்கும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
13 a Or a wayward woman
17 b Hebrew sharpens the face of another or sharpens the countenance of a friend
20 c Or Death and Destruction
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.