பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 28 | Proverbs 28
The Boldness of the Righteous
1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.
1 The wicked flee when no one pursues, but the righteous are as bold as a lion.
1 பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்; நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.
2 தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
2 A land in rebellion has many rulers, but a man of understanding and knowledge maintains order.
2 ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமை வாய்ந்ததாய் நிலைத்திருக்கும்; ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.
3 ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
3 A destitute leader who oppresses the poor is like a driving rain that leaves no food.
3 ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.
4 வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.
4 Those who forsake the law praise the wicked, but those who keep the law resist them.
4 நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்; அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.
5 துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
5 Evil men do not understand justice, but those who seek the LORD comprehend fully.
5 தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது; ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.
6 இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.
6 Better a poor man who walks with integrity than a rich man whose ways are perverse.
6 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.
7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
7 A discerning son keeps the law, but a companion of gluttons disgraces his father.
7 அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரி களோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.
8 அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
8 He who increases his wealth by interest and usury lays it up for one who is kind to the poor.
8 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.
9 வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
9 Whoever turns his ear away from hearing the law, even his prayer is detestable.
9 ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியா திருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.
10 உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
10 He who leads the upright along the path of evil will fall into his own pit, but the blameless will inherit what is good.
10 நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்; தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.
11 ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
11 A rich man is wise in his own eyes, but a poor man with discernment sees through him.
11 செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்; உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.
12 நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.
12 When the righteous triumph, there is great glory, but when the wicked rise, men hide themselves.
12 நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்.
13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
13 He who conceals his sins will not prosper, but whoever confesses and renounces them will find mercy.
13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார்.
14 எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
14 Blessed is the man who is always reverent,a but he who hardens his heart falls into trouble.
14 எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்; பிடிவாதமுள்ளவரோ தீங் கிற்கு உள்ளாவார்.
15 ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
15 Like a roaring lion or a charging bear is a wicked ruler over a helpless people.
15 கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக் களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.
16 பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
16 A leader who lacks judgment is also a great oppressor, but he who hates dishonest profit will prolong his days.
16 அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்; நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.
17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
17 A man burdened by bloodguilt will flee into the Pit;b let no one support him.
17 கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்; அவனை எவரும் தடுக்க வேண்டாம்.
18 உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
18 He who walks with integrity will be kept safe, but whoever is perverse in his ways will suddenly fall.
18 நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது; தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.
19 தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
19 The one who works his land will have plenty of food, but whoever chases fantasies will have his fill of poverty.
19 உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்; வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.
20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
20 A faithful man will abound with blessings, but one eager to be rich will not go unpunished.
20 உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.
21 முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.
21 To show partiality is not good, yet a man will do wrong for a piece of bread.
21 ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல; ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.
22 வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
22 A stingy manc hastens after wealth and does not know that poverty awaits him.
22 பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர் அறியார்.
23 தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
23 He who rebukes a man will later find more favor than one who flatters with his tongue.
23 முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.
24 தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
24 He who robs his father or mother, saying, “It is not wrong,” is a companion to the man who destroys.
24 பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, "அது குற்றமில்லை" என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.
25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
25 A greedy man stirs up strife, but he who trusts in the LORD will prosper.
25 பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.
26 தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
26 He who trusts in himself is a fool, but one who walks in wisdom will be safe.
26 தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.
27 தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
27 Whoever gives to the poor will not be in need, but he who hides his eyes will receive many curses.
27 ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.
28 துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
28 When the wicked come to power, people hide themselves; but when they perish, the righteous flourish.
28 பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
14 a Or always fears the LORD ; Hebrew does not include the LORD .
17 b Or will be a fugitive until death
22 c Hebrew A man whose eye is evil
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.