பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 29 | Proverbs 29
The Flourishing of the Righteous
1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
1 A man who remains stiff-necked after much reproof will suddenly be shattered beyond recovery.
1 பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார்.
2 நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
2 When the righteous flourish, the people rejoice, but when the wicked rule, the people groan.
2 நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
3 ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
3 A man who loves wisdom brings joy to his father, but a companion of prostitutes squanders his wealth.
3 ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார்.
4 நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
4 By justice a king brings stability to the land, but a man who exacts tributea demolishes it.
4 நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.
5 பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
5 A man who flatters his neighbor spreads a net for his feet.
5 தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.
6 துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
6 An evil man is caught by his own sin, but a righteous one sings and rejoices.
6 தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.
7 நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
7 The righteous consider the cause of the poor, but the wicked have no regard for such concerns.
7 ஏழைகளின் உரிமைகளைக் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்; இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது.
8 பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
8 Mockers inflame a city, but the wise turn away anger.
8 வன்முறையாளர் ஊரையே கொளுத்தி விடுவர்; ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.
9 ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
9 If a wise man goes to court with a fool, there will be raving and laughing with no resolution.
9 போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.
10 இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.
10 Men of bloodshed hate a blameless man, but the upright care for his life.b
10 தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்; நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.
11 மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
11 A fool vents all his anger, but a wise man holds it back.
11 அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும்.
12 அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
12 If a ruler listens to lies, all his officials will be wicked.
12 ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.
13 தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார்.
13 The poor man and the oppressor have this in common: The LORD gives light to the eyes of both.
13 ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு; இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.
14 ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
14 A king who judges the poor with fairness—his throne will be established forever.
14 திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.
15 பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
15 A rod of correction imparts wisdom, but a child left to himself disgraces his mother.
15 பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்; தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக் கேட்டை வருவிப்பர்.
16 துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
16 When the wicked thrive, rebellion increases; but the righteous will see their downfall.
16 பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.
17 உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
17 Discipline your son, and he will give you rest; he will bring delight to your soul.
17 உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.
18 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
18 Where there is no vision, the people cast off restraint; but blessed is he who keeps the Law.
18 எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரி வார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.
19 அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
19 A servant cannot be corrected by words alone; though he understands, he will not respond.
19 வெறும் வார்த்தைகளினால் வேலைக் காரர் திருந்தமாட்டார்; அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்.
20 தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
20 Do you see a man who speaks in haste? There is more hope for a fool than for him.
20 பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.
21 ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
21 A servant pampered from his youth will bring grief in the end.
21 அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.
22 கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
22 An angry man stirs up dissension, and a hot-tempered man abounds in transgression.
22 எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.
23 மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
23 A man’s pride will bring him low, but a humble spirit will obtain honor.
23 இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.
24 திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
24 A partner to a thief hates his own soul; he receives the oath, but does not testify.
24 திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்; அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்; சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.
25 மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
25 The fear of man is a snare, but whoever trusts in the LORD is set securely on high.
25 பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிற வருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.
26 ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
26 Many seek the ruler’s favor, but a man receives justice from the LORD.
26 பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?
27 நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அவருப்பானவன்.
27 An unjust man is detestable to the righteous, and one whose way is upright is detestable to the wicked.
27 நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்; நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a Or who taxes heavily or who takes bribes
10 b Or but the upright seek his soul
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.