பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 31 | Proverbs 31
The Sayings for King Lemuel
1 ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
1 These are the words of King Lemuel—the burden that his mother taught him:
1 மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்: இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்:
2 என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
2 What shall I say,a O my son? What, O son of my womb? What, O son of my vows?
2 பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.
3 ஸ்திரீகளுக்கு உன் பலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
3 Do not spend your strength on women or your vigor on those who ruin kings.
3 உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செலவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.
4 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
4 It is not for kings, O Lemuel, it is not for kings to drink wine, or for rulers to crave strong drink,
4 இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று; வெறியூட்டும் மதுவை ஆட்சி யாளர் அருந்தலாகாது.
5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
5 lest they drink and forget what is decreed, depriving all the oppressed of justice.
5 அருந்தினால், சட்டத்தை மறந்து விடு வார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.
6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
6 Give strong drink to one who is perishing, and wine to the bitter in soul.
6 ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.
7 அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
7 Let him drink and forget his poverty, and remember his misery no more.
7 அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையா திருக்கட்டும்.
8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
8 Open your mouth for those with no voice, for the cause of all the dispossessed.
8 பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக் காகவும் போராடு.
9 உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
9 Open your mouth, judge righteously, and defend the cause of the poor and needy.
9 அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.
The Virtues of a Noble Woman
10 குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
10 A wifeb of noble character, who can find? She is far more precious than rubies.
10 திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.
11 அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
11 The heart of her husband trusts in her, and he lacks nothing of value.
11 அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.
12 அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
12 She brings him good and not harm all the days of her life.
12 அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள்.
13 ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
13 She selects wool and flax and works with eager hands.
13 கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத் தையும் விருப்புடன் தானே செய்வாள்.
14 அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
14 She is like the merchant ships, bringing her food from afar.
14 அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிட லாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையி லிருந்து வாங்கி வருவாள்.
15 இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
15 She rises while it is still night to provide food for her household and portions for her maidservants.
15 வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.
16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
16 She appraises a field and buys it; from her earnings she plants a vineyard.
16 ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதி யத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.
17 தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
17 She girds herselfc with strength and shows that her arms are strong.
17 சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.
18 தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
18 She sees that her gain is good, and her lamp is not extinguished at night.
18 தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.
19 தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
19 She stretches out her hands to the distaff and grasps the spindle with her fingers.
19 இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.
20 சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
20 She opens her arms to the poor and reaches out her hands to the needy.
20 எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
21 தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
21 When it snows, she has no fear for her household, for they are all clothed in scarlet.d
21 குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.
22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
22 She makes coverings for her bed; her clothing is fine linen and purple.
22 தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.
23 அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
23 Her husband is known at the city gate, where he sits among the elders of the land.
23 அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.
24 மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
24 She makes linen garments and sells them; she delivers sashes to the merchants.
24 அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்; வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.
25 அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.
25 Strength and honor are her clothing, and she can laugh at the days to come.
25 அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்; வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.
26 தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
26 She opens her mouth with wisdom, and faithful instruction is on her tongue.
26 அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவுரை கூறுவாள்.
27 அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
27 She watches over the affairs of her household and does not eat the bread of idleness.
27 தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக் காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பி யிருக்கமாட்டாள்.
28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:
28 Her children rise up and call her blessed; her husband praises her as well:
28 அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.
29 அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
29 “Many daughters have done noble things, but you surpass them all!”
29 "திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே" என்று அவன் சொல்வான்.
30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
30 Charm is deceptive and beauty is fleeting, but a woman who fears the LORD is to be praised.
30 எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.
31 அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.
31 Give her the fruit of her hands, and let her works praise her at the gates.
31 அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or What or What are you doing
10 b Verses 10–31 are an acrostic poem, each verse beginning with the successive letters of the Hebrew alphabet.
17 c Hebrew She girds her loins
21 d Or doubly clothed
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.