பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 4 | Proverbs 4
A Father’s Instruction
1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
1 Listen, my sons, to a father’s instruction; pay attention and gain understanding.
1 பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.
2 For I give you sound teaching; do not abandon my directive.
2 நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்; நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்;
3 நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
3 When I was a son to my father, tender and the only child of my mother,
3 நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
4 he taught me and said, “Let your heart lay hold of my words; keep my commands and you will live.
4 அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: "நான் சொல்வதை உன் நினைவில் வை; என் கட்டளைகளை மறவாதே; நீ வாழ்வடைவாய்.
5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
5 Get wisdom, get understanding; do not forget my words or turn from them.
5 ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு; நான் சொல்வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே.
6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
6 Do not forsake wisdom, and she will preserve you; love her, and she will guard you.
6 ஞானத்தைப் புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்; அதை அடைவதில் நாட்டங்கொள்; அது உன்னைக் காவல் செய்யும்.
7 ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
7 Wisdom is supreme; so acquire wisdom. And whatever you may acquire,a gain understanding.
7 ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்; உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
8 Prize her, and she will exalt you; if you embrace her, she will honor you.
8 அதை உயர்வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்; அதை நீ தழுவிக்கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும்.
9 அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
9 She will set a garland of grace on your head; she will present you with a crown of beauty.”
9 அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்; மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்."
10 என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
10 Listen, my son, and receive my words, and the years of your life will be many.
10 பிள்ளாய்! கவனி; நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
11 ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
11 I will guide you in the way of wisdom; I will lead you on straight paths.
11 ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்; நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
12 நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
12 When you walk, your steps will not be impeded; when you run, you will not stumble.
12 நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது ; நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
13 புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
13 Hold on to instruction; do not let go. Guard it, for it is your life.
13 பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்; அதை விட்டுவிடாதே; அதைக் கவனமாய்க் காத்துக்கொள்; அதுவே உனக்கு உயிர்.
14 துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
14 Do not set foot on the path of the wicked or walk in the way of evildoers.
14 பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே; தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
15 அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.
15 Avoid it; do not travel on it. Turn from it and pass on by.
15 அதன் அருகில் செல்லாதே; அதில் கால்வைக்காதே; அதை விட்டு விலகி உன் வழியே செல்.
16 பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
16 For they cannot sleep unless they do evil; they are deprived of slumber until they make someone fall.
16 தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது; யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது.
17 அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
17 For they eat the bread of wickedness and drink the wine of violence.
17 தீவினையே அவர்கள் உண்ணும் உணவு; கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
18 The path of the righteous is like the first gleam of dawn, shining brighter and brighter until midday.
18 நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது; அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
19 துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
19 But the way of the wicked is like the darkest gloom; they do not know what makes them stumble.
19 பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது; தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
20 என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.
20 My son, pay attention to my words; incline your ear to my sayings.
20 பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி.
21 அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
21 Do not lose sight of them; keep them within your heart.
21 உன் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்; உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
22 For they are life to those who find them, and health to the whole body.
22 அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்; அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
23 எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
23 Guard your heart with all diligence, for from it flow springs of life.
23 விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.
24 வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
24 Put away deception from your mouth; keep your lips from perverse speech.
24 நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது; வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.
25 உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
25 Let your eyes look forward; fix your gaze straight ahead.
25 உன் கண்கள் நேரே பார்க்கட்டும்; எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
26 உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
26 Make a level path for your feet,b and all your ways will be sure.
26 நேர்மையான பாதையில் நட; அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.*
* எபி 12:13.
27 வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.
27 Do not swerve to the right or to the left; turn your feet away from evil.
27 வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே; தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
7 a Or And whatever else you acquire
26 b Or Ponder the path for your feet ; LXX Make straight paths for your feet ; cited in Hebrews 12:13
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.