பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோனா மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
< முந்தையது சங்கீதம் 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
Alef / א / ஆலெஃப்
சங்கீதம் 119 | Psalms 119
Your Word Is a Lamp to My Feet
1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
1 Blessed are those whose way is blameless, who walk in the Law of the LORD.
1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.*
* 119 - எபிரேய அகரவரிசைப் பாடல்
2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
2 Blessed are those who keep His testimonies and seek Him with all their heart.
2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.
3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
3 They do no iniquity; they walk in His ways.
3 அநீதி செய்யாமல் அவரது வழியில் நடப்போர் பேறுபெற்றோர்.
4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
4 You have ordained Your precepts, that we should keep them diligently.
4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
5 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
5 Oh, that my ways were committed to keeping Your statutes!
5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!
6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
6 Then I would not be ashamed when I consider all Your commandments.
6 உம் கட்டளைகளை எல்லாம் கருத்தில் கொண்டிருந்தால், இகழ்ச்சியுறேன்;
7 உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
7 I will praise You with an upright heart when I learn Your righteous judgments.
7 உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.
8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.
8 I will keep Your statutes; do not utterly forsake me.
8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும்.
Beth / בּ / பேத்
9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.
9 How can a young man keep his way pure? By guarding it according to Your word.
9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10 என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
10 With all my heart I have sought You; do not let me stray from Your commandments.
10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளைவிட்டு என்னை விலகவிடாதேயும்.
11 நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
11 I have hidden Your word in my heart that I might not sin against You.
11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12 கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
12 Blessed are You, O LORD; teach me Your statutes.
12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
13 உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
13 With my lips I proclaim all the judgments of Your mouth.
13 உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14 திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
14 I rejoice in the way of Your testimonies as much as in all riches.
14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
15 உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
15 I will meditate on Your precepts and regard Your ways.
15 உம் நியமங்களைக் குறித்து நான் சிந்திப்பேன்; உம் நெறிகளில் என் சிந்தையைச் செலுத்துவேன்;
16 உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
16 I will delight in Your statutes; I will not forget Your word.
16 உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.
Gimel / ג / கீமெல்
17 உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்வேன்.
17 Deal bountifully with Your servant, that I may live and keep Your word.
17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.
18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.
18 Open my eyes that I may see wondrous things from Your law.
18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.
19 பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
19 I am a stranger on the earth; do not hide Your commandments from me.
19 இவ்வுலகில் நான் அன்னியனாய் உள்ளேன்; உம் கட்டளைகளை என்னிடமிருந்து மறைக்காதேயும்.
20 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.
20 My soul is consumed with longing for Your judgments at all times.
20 எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.
21 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
21 You rebuke the arrogant—the cursed who stray from Your commandments.
21 செருக்குற்றோரைக் கண்டிக்கின்றிர்; உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர் சபிக்கப்பட்டவரே.
22 நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.
22 Remove my scorn and contempt, for I have kept Your testimonies.
22 பழிச்சொல்லையும், இழிவையும் என்னிடமிருந்து அகற்றியருளும்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்துள்ளேன்.
23 பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
23 Though rulers sit and slander me, Your servant meditates on Your statutes.
23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24 உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
24 Your testimonies are indeed my delight; they are my counselors.
24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர்.
Dalet / ד / டாலெத்
25 என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
25 My soul cleaves to the dust; revive me according to Your word.
25 நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்; உம் வாக்கின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.
26 என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
26 I recounted my ways, and You answered me; teach me Your statutes.
26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.
27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
27 Make clear to me the way of Your precepts; then I will meditate on Your wonders.
27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன்.
28 சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
28 My soul melts with sorrow; strengthen me according to Your word.
28 துயரத்தால் என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது; உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும்.
29 பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
29 Remove me from the path of deceit and graciously grant me Your law.
29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
30 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
30 I have chosen the way of truth; I have set Your ordinances before me.
30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.
31 உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
31 I cling to Your testimonies, O LORD; let me not be put to shame.
31 உம் ஒழுங்குமுறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்; ஆண்டவரே! என்னை வெட்கமடையவிடாதேயும்.
32 நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
32 I run in the path of Your commandments, for You will enlarge my heart.
He / ה / ஹே
33 கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
33 Teach me, O LORD, the way of Your statutes, and I will keep them to the end.b
33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.
34 எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
34 Give me understanding that I may obey Your law, and follow it with all my heart.
34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.
35 உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
35 Direct me in the path of Your commandments, for there I find delight.
35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
36 என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
36 Turn my heart to Your testimonies and not to covetous gain.
36 உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாடவிடாதேயும்.
37 மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
37 Turn my eyes away from worthless things; revive me with Your word.c
37 வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.
38 உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
38 Establish Your word to Your servant, to produce reverence for You.
38 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு அளித்த வாக்குறுதியை உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.
39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
39 Turn away the disgrace I dread, for Your judgments are good.
39 என்னை அச்சுறுத்தும் பழிச்சொல் எதற்கும் என்னை உள்ளாக்காதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.
40 இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
40 How I long for Your precepts! Revive me in Your righteousness.
40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.
Wav / ו / வாவ்
41 கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
41 May Your loving devotion come to me, O LORD, Your salvation, according to Your promise.
41 ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக!
42 அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
42 Then I can answer him who taunts, for I trust in Your word.
42 அப்போது, என்னைப் பழிப்போர்க்கு நான் ஏற்ற பதில் கூறுவேன்; ஏனெனில், உமது வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு.
43 சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
43 Never take Your word of truth from my mouth, for I hope in Your judgments.
43 என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.
44 நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
44 I will always obey Your law, forever and ever.
44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன்.
45 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால் விசாலத்திலே நடப்பேன்.
45 And I will walk in freedom, for I have sought Your precepts.
45 உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன்.
46 நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
46 I will speak of Your testimonies before kings, and I will not be ashamed.
46 உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்; வெட்கமுறமாட்டேன்.
47 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
47 I delight in Your commandments because I love them.
47 உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.
48 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன். உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
48 I lift up my hands to Your commandments, which I love, and I meditate on Your statutes.
48 நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன்.
Zayin / ז / ஸயின்
49 நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
49 Remember Your word to Your servant, upon which You have given me hope.
49 உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவுகூரும்; அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.
50 அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
50 This is my comfort in affliction, that Your promise has given me life.
50 உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது; ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கின்றது.
51 அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
51 The arrogant utterly deride me, but I do not turn from Your law.
51 செருக்குற்றோர் என்னை அளவின்றி ஏளனம் செய்கின்றனர்; ஆனால், உம் திருச்சட்டத்தினின்று நான் விலகவில்லை.
52 கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
52 I remember Your judgments of old, O LORD, and in them I find comfort.
52 ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த நீதித் தீர்ப்புகளை நான் நினைவு கூர்கின்றேன்; அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.
53 உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
53 Rage has taken hold of me because of the wicked who reject Your law.
53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.
54 நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
54 Your statutes are songs to me in the house of my pilgrimage.
54 என் வாழ்க்கைப் பயணத்தில் உம் விதிமுறைகள் எனக்குப் புகழ்ப் பாக்களாய் உள்ளன.
55 கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
55 In the night, O LORD, I remember Your name, that I may keep Your law.
55 ஆண்டவரே! இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கின்றேன்; உமது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.
56 நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.
56 This is my practice, for I obey Your precepts.
56 நான் இந்நிலையை அடைந்துள்ளது உமது நியமங்களைக் கடைப்பிடிப்பதால்தான்.
Chet / ח / ஹெத்
57 கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
57 The LORD is my portion; I have promised to keep Your words.
57 ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.
58 முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
58 I have sought Your face with all my heart; be gracious to me according to Your promise.
58 என் முழுமனத்தோடு உம் திருமுகத்தை நாடினேன்; உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு அருள்கூரும்.
59 என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
59 I considered my ways and turned my steps to Your testimonies.
59 நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்; உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன்.
60 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
60 I hurried without hesitating to keep Your commandments.
60 உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்; காலம் தாழ்த்தவில்லை.
61 துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
61 Though the ropes of the wicked bind me, I do not forget Your law.
61 தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
62 At midnight I rise to give You thanks for Your righteous judgments.
62 நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து, உம்மைப் புகழ்ந்துபாட நள்ளிரவில் எழுகின்றேன்.
63 உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
63 I am a friend to all who fear You, and to those who keep Your precepts.
63 உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும் உம் நியமங்களைக் கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.
64 கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
64 The earth is filled with Your loving devotion, O LORD; teach me Your statutes.
64 ஆண்டவரே! உமது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது; உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்!
Tet / ט / டேத்
65 கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
65 You are good to Your servant, O LORD, according to Your word.
65 ஆண்டவரே! உமது வாக்குறுதிக்கேற்ப, உம் ஊழியனுக்கு நன்மையை செய்துள்ளீர்!
66 உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.
66 Teach me good judgment and knowledge, for I believe in Your commandments.
66 நன் மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
67 நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
67 Before I was afflicted, I went astray; but now I keep Your word.
67 நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.
68 தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
68 You are good, and You do what is good; teach me Your statutes.
68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
69 அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
69 Though the arrogant have smeared me with lies, I keep Your precepts with all my heart.
69 செருக்குற்றோர் என்னைப்பற்றிப் பொய்களைப் புனைகின்றார்கள்; நானோ முழுமனத்துடன் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.
70 அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
70 Their hearts are hardd and callous, but I delight in Your law.
70 அவர்கள் இதயம் கொழுப்பேறிப் போயிற்று. நானோ உம் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
71 It was good for me to be afflicted, that I might learn Your statutes.
71 எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.
72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
72 The law from Your mouth is more precious to me than thousands of pieces of gold and silver.
72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.
Yod / י / யோட்
73 உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
73 Your hands have made me and fashioned me; give me understanding to learn Your commandments.
73 உம் கைகளே என்னை உருவாக்கின; என்னை வடிவமைத்தன; உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும்.
74 நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
74 May those who fear You see me and rejoice, for I have hoped in Your word.
74 உமக்கு அஞ்சுவோர், உமது வாக்கை நான் நம்பினதற்காக என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.
75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
75 I know, O LORD, that Your judgments are righteous, and that in faithfulness You have afflicted me.
75 ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.
76 நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
76 May Your loving devotion comfort me, I pray, according to Your promise to Your servant.
76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!
77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
77 May Your compassion come to me, that I may live, for Your law is my delight.
77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.
78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
78 May the arrogant be put to shame for subverting me with a lie; I will meditate on Your precepts.
78 செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக! அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்கினார்கள்; நானோ உம் நியமங்கள் பற்றிச் சிந்தனை செய்வேன்.
79 உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
79 May those who fear You turn to me, those who know Your testimonies.
79 உமக்கு அஞ்சிநடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவராக!
80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
80 May my heart be blameless in Your statutes, that I may not be put to shame.
80 உம் நியமங்களைப் பொறுத்த மட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக! அதனால், நான் வெட்கமுறேன்.
Kaf / כּ / கஃப்
81 உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
81 My soul faints for Your salvation; I wait for Your word.
81 நீர் அளிக்கும் மீட்புக்காக என் நெஞ்சம் ஏங்குகின்றது; உம் வாக்கை நான் நம்புகின்றேன்.
82 எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
82 My eyes fail, looking for Your promise; I ask, “When will You comfort me?”
82 உம் வாக்குறுதியை எதிர்நோக்கி என் கண்கள் பூத்துப்போயின; 'எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?' என்று வினவினேன்.
83 புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
83 Though I am like a wineskin dried up by smoke, I do not forget Your statutes.
83 புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்; உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.
84 உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்.
84 How many days must Your servant wait?e When will You execute judgment on my persecutors?
84 உம் ஊழியன் எத்தனை நாள் காத்திருக்கவேண்டும்? என்னைக் கொடுமைப்படுத்துவோரை என்று தண்டிப்பீர்?
85 உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
85 The arrogant have dug pits for me in violation of Your law.
85 உமது திருச்சட்டப்படி நடக்காமல், செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்;
86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.
86 All Your commandments are faithful; I am persecuted without cause—help me!
86 உம் கட்டளைகள் எல்லாம் நம்பத்தக்கவை; § அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்குகின்றனர்; எனக்குத் துணை செய்யும்.
87 அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
87 They almost wiped me from the earth, but I have not forsaken Your precepts.
87 அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை ஏறக்குறைய அழித்துவிட்டனர்; நானோ உம் நியமங்களைக் கைவிடவில்லை.
88 உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
88 Revive me according to Your loving devotion, that I may obey the testimony of Your mouth.
88 உமது பேரன்புக்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும், நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.
Lamed / ל / லாமெட்
89 கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
89 Your word, O LORD, is everlasting; it is firmly fixed in the heavens.
89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது.
90 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.
90 Your faithfulness continues through all generations; You established the earth, and it endures.
90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது.
91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.
91 Your ordinances stand to this day, for all things are servants to You.
91 உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன. ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன.
92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
92 If Your law had not been my delight, then I would have perished in my affliction.
92 உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்.
93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
93 I will never forget Your precepts, for by them You have revived me.
93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்.
94 நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
94 I am Yours; save me, for I have sought Your precepts.
94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன்.
95 துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
95 The wicked wait to destroy me, but I will ponder Your testimonies.
95 தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
96 சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.
96 I have seen a limit to all perfection, but Your commandment is without limit.
96 நிறைவான அனைத்தின் எல்லையையும் நான் பார்த்துவிட்டேன்; உமது கட்டளையின் நிறைவோ எல்லை அற்றது.
Mem / מ / மேம்
97 உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.
97 Oh, how I love Your law! All day long it is my meditation.
97 ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.
98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
98 Your commandments make me wiser than my enemies, for they are always with me.
98 என் எதிரிகளைவிட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.
99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
99 I have more insight than all my teachers, for Your testimonies are my meditation.
99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்;
100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
100 I discern more than the elders, for I obey Your precepts.
100 முதியோர்களைவிட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.
101 உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
101 I have kept my feet from every evil path, that I may keep Your word.
101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீயவழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.
102 நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
102 I have not departed from Your ordinances, for You Yourself have taught me.
102 உம் நீதிநெறிகளைவிட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர்.
103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
103 How sweet are Your words to my taste—sweeter than honey in my mouth!
103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
104 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
104 I gain understanding from Your precepts; therefore I hate every false way.
104 உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.
Nun / נ / நூன்
105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
105 Your word is a lamp to my feet and a light to my path.
105 என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!
106 உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
106 I have sworn and confirmed that I will keep Your righteous judgments.
106 நீதியான உம் நெறிமுறைகளை நான் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டு உறுதிமொழி தந்துள்ளேன்.
107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
107 I am severely afflicted, O LORD; revive me through Your word.
107 ஆண்டவரே! மிக மிகத் துன்புறுத்தப்படுகின்றேன்; உம் வாக்குறுதியின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.
108 கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
108 Accept the freewill offerings of my mouth, O LORD, and teach me Your judgments.
108 நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்; உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.
109 என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
109 I constantly take my life in my hands, yet I do not forget Your law.
109 நான் என்னுயிரைக் கையில்வைத்துள்ளேன்; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
110 துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.
110 The wicked have set a snare for me, but I have not strayed from Your precepts.
110 தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்; ஆனால், உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை.
111 உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
111 Your testimonies are my heritage forever, for they are the joy of my heart.
111 உம் ஒழுங்குமறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
112 முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
112 I have inclined my heart to perform Your statutes, even to the very end.
112 உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம், என்றென்றும், இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும்.
Samek / ס / சாமெக்
113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
113 The double-minded I despise, but Your law I love.
113 இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்; உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
114 என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
114 You are my hiding place and my shield; I put my hope in Your word.
114 நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்; உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.
115 பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
115 Depart from me, you evildoers, that I may obey the commandments of my God.
115 தீயன செய்வோரே! என்னை விட்டு விலகுங்கள்; என் கடவுளின் கட்டளைகளை நான் கடைப்பிடிப்பேன்;
116 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
116 Sustain me as You promised, that I may live; let me not be ashamed of my hope.
116 நான் பிழைக்குமாறு, உமது வாக்குறுதிக்கேற்ப என்னைத் தாங்கியருளும்; எனது நம்பிக்கை வீண்போகவிடாதேயும்.
117 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
117 Uphold me, and I will be saved, that I may always regard Your statutes.
117 என்னைத் தாங்கிக்கொள்ளும்; நான் மீட்புப் பெறுவேன்; எந்நாளும் உம் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டிருப்பேன்.
118 உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.
118 You reject all who stray from Your statutes, for their deceitfulness is in vain.
118 உம் விதிமுறைகளைவிட்டு விலகுவோர் அனைவரையும் நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்; அவர்களின் சூழ்ச்சிகள் வீணாய்ப் போகும்.
119 பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
119 All the wicked on earth You discard like dross; therefore I love Your testimonies.
119 பூவுலகின் பொல்லார் அனைவரையம் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்; ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள் மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
120 உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
120 My flesh trembles in awe of You; I stand in fear of Your judgments.
120 உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது; உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு நான் அஞ்சி நடுங்குகின்றேன்.
Ayin / ע / அயின்
121 நியாயமும் நீதியும் செய்கிற என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
121 I have done what is just and right; do not leave me to my oppressors.
121 நீதியும் நேர்மையும் ஆனவற்றையே செய்துள்ளேன்; என்னை ஒடுக்குவோர் கையில் என்னை விட்டுவிடாதேயும்.
122 உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
122 Ensure Your servant’s well-being; do not let the arrogant oppress me.
122 உம் ஊழியனின் நலத்தை உறுதிப்படுத்தும்; செருக்குற்றோர் என்னை ஒடுக்கவிடாதேயும்.
123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
123 My eyes fail, looking for Your salvation, and for Your righteous promise.
123 நீர் தரும் விடுதலையையும் உமது நீதியான வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து, என் கண்கள் பூத்துப்போயின.
124 உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
124 Deal with Your servant according to Your loving devotion, and teach me Your statutes.
124 உம் பேரன்பிற்கேற்ப உம் ஊழியனுக்குச் செய்தருளும்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.
125 நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
125 I am Your servant; give me understanding, that I may know Your testimonies.
125 உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்துகொள்வேன்.
126 நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
126 It is time for the LORD to act, for they have broken Your law.
126 ஆண்டவரே! நீர் செயலாற்றும் நேரம் வந்துவிட்டது; உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.
127 ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
127 Therefore I love Your commandments more than gold, even the purest gold.
127 ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.
128 எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
128 Therefore I admire all Your precepts and hate every false way.
128 உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக்கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன்.
Pe / פּ / பே
129 உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
129 Wonderful are Your testimonies; therefore I obey them.
129 உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
130 The unfolding of Your words gives light; it informs the simple.
130 உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.
131 உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
131 I open my mouth and pant, longing for Your commandments.
131 வாயை 'ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.
132 உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
132 Turn to me and show me mercy, as You do to those who love Your name.
132 உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்!
133 உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
133 Order my steps in Your word; let no sin rule over me.
133 உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்!
134 மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.
134 Redeem me from the oppression of man, that I may keep Your precepts.
134 மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்! உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன்.
135 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
135 Make Your face shine upon Your servant, and teach me Your statutes.
135 உம் ஊழியன்மீது உமது முகஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
136 உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
136 My eyes shed streams of tears because Your law is not obeyed.
136 உமது திருச்சட்டத்தைப் பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்களினின்று நீர் அருவியாய் வழிந்தது.
Tsade / צ / ட்ஸாடே
137 கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
137 Righteous are You, O LORD, and upright are Your judgments.
137 ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்; உம் நீதிநெறிகள் நேர்மையானவை.
138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.
138 The testimonies You have laid down are righteous and altogether faithful.
138 நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை; அவை முற்றிலும் நம்பத்தக்கவை.
139 என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
139 My zeal has consumed me because my foes forget Your words.
139 என் பகைவர் உம் வார்த்தைகளை மறந்துவிட்டதால், அவற்றின்மீது நான் கொண்டுள்ள தணியாத ஆர்வம் என்னை எரித்துவிடுகின்றது.
140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
140 Your promise is completely pure; therefore Your servant loves it.
140 உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது, உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான்.
141 நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
141 I am lowly and despised, but I do not forget Your precepts.
141 சிறியன் அடியேன்! இழிவுக்கு உள்ளானவன்; ஆனால், உம் நியமங்களை மறக்காதவன்.
142 உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
142 Your righteousness is everlasting and Your law is true.
142 உமது நீதி என்றுமுள நீதி; உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.
143 இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
143 Trouble and distress have found me, but Your commandments are my delight.
143 துன்பமும் கவலையும் என்னைப் பற்றிக்கொண்டன; எனினும் உம் கட்டளைகள் என்னை மகிழ்விக்கின்றன.
144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
144 Your testimonies are righteous forever. Give me understanding, that I may live.
144 உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை; நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டும்.
Qof / ק / கோஃப்
145 முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
145 I call with all my heart; answer me, O LORD! I will obey Your statutes.
145 முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்; உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.
146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
146 I call to You; save me, that I may keep Your testimonies.
146 உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என்னைக் காத்தருளும்; உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்தேன்.
147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
147 I rise before dawn and cry for help; in Your word I have put my hope.
147 வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன்.
148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
148 My eyes anticipate the watches of night, that I may meditate on Your word.
148 உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.
149 உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
149 Hear my voice, O LORD, according to Your loving devotion; give me life according to Your justice.
149 ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என் குரலைக் கேட்டருளும்; உமது நீதியின்பபடி என்னுயிரைக் காத்தருளும்.
150 தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.
150 Those who follow after wickedness draw near; they are far from Your law.
150 சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்; உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.
151 கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.
151 You are near, O LORD, and all Your commandments are true.
151 ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்; உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.
152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
152 Long ago I learned from Your testimonies that You have established them forever.
152 அவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.
Resh / ר / ரேஷ்
153 என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.
153 Look upon my affliction and rescue me, for I have not forgotten Your law.
153 என் துன்ப நிலையைப் பார்த்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.
154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
154 Defend my cause and redeem me; revive me according to Your word.
154 எனக்காக வழக்காடி என்னை மீட்டருளும்; உமது வாக்குக்கேற்றபடி என் உயிரைக் காத்தருளும்.
155 இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
155 Salvation is far from the wicked because they do not seek Your statutes.
155 தீயோர்க்கு மீட்பு வெகு தொலைவில் உள்ளது; ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.
156 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
156 Great are Your mercies, O LORD; revive me according to Your ordinances.
156 ஆண்டவரே! உம் இரக்கம் மிகப் பெரியது; உம் நீதித்தீர்ப்புகளின்படி எனக்கு வாழ்வளியும்.
157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
157 Though my persecutors and foes are many, I have not turned from Your testimonies.
157 என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்; ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.
158 உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
158 I look on the faithless with loathing because they do not keep Your word.
158 துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்; ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.
159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
159 Consider how I love Your precepts, O LORD; give me life according to Your loving devotion.
159 ஆண்டவரே! நான் உம் கட்டளைகள்மீது எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன் என்பதைப் பாரும்; உம் பேரன்பிற்கேற்ப எனக்கு வாழ்வளியும்.
160 உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
160 The entirety of Your word is truth, and all Your righteous judgments endure forever.
160 உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்; நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன.
Shin /Sheen / שׁ/שׂ ஷின்/ஷீன்
161 பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
161 Rulers persecute me without cause, but my heart fears only Your word.
161 தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்; ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.
162 மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.
162 I rejoice in Your promise like one who finds great spoil.
162 திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வதுபோல உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.
163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
163 I hate and abhor falsehood, but Your law I love.
163 பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்; உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
164 உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
164 Seven times a day I praise You for Your righteous judgments.
164 நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து ஒரு நாளைக்கு ஏழுமுறை உம்மைப் புகழ்கின்றேன்.
165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
165 Abundant peace belongs to those who love Your law; nothing can make them stumble.
165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.
166 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
166 I wait for Your salvation, O LORD, and I carry out Your commandments.
166 ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்; உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.
167 என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
167 I obey Your testimonies and love them greatly.
167 உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்து வருகின்றேன்; நான் அவற்றின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
168 உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
168 I obey Your precepts and Your testimonies, for all my ways are before You.
168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப்பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை.
Tav / ת / டாவ்
169 கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
169 May my cry come before You, O LORD; give me understanding according to Your word.
169 ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக! உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு நுண்ணறிவு புகட்டும்.
170 என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
170 May my plea come before You; rescue me according to Your promise.
170 என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! உம் வாக்குறுதியின்படி என்னை விடுவியும்.
171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
171 My lips pour forth praise, for You teach me Your statutes.
171 உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும்.
172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.
172 My tongue sings of Your word, for all Your commandments are righteous.
172 உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை.
173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
173 May Your hand be ready to help me, for I have chosen Your precepts.
173 உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக! ஏனெனில், உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.
174 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
174 I long for Your salvation, O LORD, and Your law is my delight.
174 ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்; உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
175 என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
175 Let me live to praise You; may Your judgments sustain me.
175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!
176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.
176 I have strayed like a lost sheep; seek Your servant, for I have not forgotten Your commandments.
176 காணாமல்போன ஆட்டைப் போல் நான் அலைந்து திரிகின்றேன்; உம் ஊழியனைத் தேடிப்பாரும்; ஏனெனில், உம் கட்டளைகளை நான் மறக்கவில்லை.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a This psalm is an acrostic poem of twenty-two stanzas, following the letters of the Hebrew alphabet; within a stanza, each verse begins with the same Hebrew letter.
33 b Or keep them as my reward
37 c Two MT manuscripts and DSS; most MT manuscripts in Your way
70 d Or fat
84 e Or How many are the days of Your servant?
91 f Or They stand this day according to Your ordinances
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.