பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
(ஆசாபின் சங்கீதம்)
சங்கீதம் 73 | Psalms 73
BOOK III
Psalms 73–89
Surely God Is Good to Israel
A Psalm of Asaph.
1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.
1 A Psalm of Asaph. Surely God is good to Israel, to those who are pure in heart.
1 உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!
2 ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.
2 But as for me, my feet had almost stumbled; my steps had nearly slipped.
2 என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன்.
3 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
3 For I envied the arrogant when I saw the prosperity of the wicked.
3 ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்; பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன்.
4 மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.
4 They have no struggle in their death; their bodies are well-fed.
4 அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை; அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது.
5 நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.
5 They are free of the burdens others carry; they are not afflicted like other men.
5 மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.
6 ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
6 Therefore pride is their necklace; a garment of violence covers them.
6 எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது; வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.
7 அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.
7 From their prosperity proceeds iniquity;a the imaginations of their hearts run wild.
7 அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன; அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன.
8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
8 They mock and speak with malice; with arrogance they threaten oppression.
8 பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்; இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.
9 தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
9 They set their mouths against the heavens, and their tongues strut across the earth.
9 விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது; மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.
10 ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.
10 So their peopleb return to this place and drink up waters in abundance.
10 ஆதலால், கடவுளின் மக்களும் அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்; இவ்வாறு, கடல் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.
11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
11 The wicked say, “How can God know? Does the Most High have knowledge?”
11 'இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?' என்கின்றார்கள்.
12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.
12 Behold, these are the wicked—always carefree as they increase their wealth.
12 ஆம்; பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்; என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.
13 நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
13 Surely in vain I have kept my heart pure; in innocence I have washed my hands.
13 அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா?
14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
14 For I am afflicted all day long and punished every morning.
14 நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்; காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.
15 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
15 If I had said, “I will speak this way,” then I would have betrayed Your children.
15 "நானும் அவர்களைப்போல் பேசலாமே" என்று நான் நினைத்திருந்தால், உம் மக்களின் தலைமுறைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.
16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
16 When I tried to understand all this, it was troublesome in my sight
16 ஆகவே, இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன்; ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.
17 அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.
17 until I entered God’s sanctuary; then I discerned their end.
17 நான் இறைவனின் தூயகத்திற்குச் சென்றபின்புதான் அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன்.
18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
18 Surely You set them on slick ground; You cast them down into ruin.
18 உண்மையில் அவர்களை நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்; அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர்.
19 அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
19 How suddenly they are laid waste, completely swept away by terrors!
19 அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்!
20 நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
20 Like one waking from a dream, so You, O Lord, awaken and despise their form.
20 விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்; என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.
21 இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
21 When my heart was grieved and I was pierced within,
21 என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின.
22 நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.
22 I was senseless and ignorant; I was a brute beast before You.
22 அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்; உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.
23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
23 Yet I am always with You; You hold my right hand.
23 ஆனாலும், நான் எப்போதும் உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்; என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.
24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
24 You guide me with Your counsel, and later receive me in glory.
24 உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்; முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்.
25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
25 Whom have I in heaven but You? And on earth I desire no one besides You.
25 விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறு விருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை.
26 என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
26 My flesh and my heart may fail, but God is the strengthc of my heart and my portion forever.
26 எனது உடலும் உள்ளமும் நைந்து போயின; கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.
27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.
27 Those far from You will surely perish; You destroy all who are unfaithful to You.
27 உண்மையிலேயே, உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்; உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும்.
28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
28 But as for me, it is good to draw near to God. I have made the Lord GOD my refuge, that I may proclaim all Your works.
28 நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்; என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
7 a Literally Their eye bulges with fatness ; Syriac From their callous heart proceeds iniquity
10 b Or His people
26 c Hebrew rock
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.