பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Psalms  சங்கீதம்  תְהִלִּים

< முந்தையது   சங்கீதம்  73   74   75   76   77   78   79   80   81   82   83   84   85   86   87   88   89  அடுத்தது >

(அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு)

சங்கீதம் 75 | Psalms 75

God’s Righteous Judgment (Romans 2:1–16)

For the choirmaster: To the tune of “Do Not Destroy.” A Psalm of Asaph. A song.

1לַמְנַצֵּ֥חַ אַל־תַּשְׁחֵ֑ת מִזְמ֖וֹר לְאָסָ֣ף שִֽׁיר׃ ה֘וֹדִ֤ינּוּ לְּךָ֨ ׀ אֱ‍ֽלֹהִ֗ים ה֭וֹדִינוּ וְקָר֣וֹב שְׁמֶ֑ךָ סִ֝פְּר֗וּ נִפְלְאוֹתֶֽיךָ׃

1 உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
1 For the choirmaster: To the tune of “Do Not Destroy.” A Psalm of Asaph. A song. We give thanks to You, O God; we give thanks, for Your Name is near. The people declare Your wondrous works.
1 உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; உமது பெயரைப் போற்றுகின்றோம்; உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.

2כִּ֭י אֶקַּ֣ח מוֹעֵ֑ד אֲ֝נִ֗י מֵישָׁרִ֥ים אֶשְׁפֹּֽט׃

2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.
2 “When I choose a time, I will judge fairly.
2 நான் தகுந்த வேளையைத் தேர்ந்துகோண்டு, நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.

3נְֽמֹגִ֗ים אֶ֥רֶץ וְכָל־יֹשְׁבֶ֑יהָ אָנֹכִ֨י תִכַּ֖נְתִּי עַמּוּדֶ֣יהָ סֶּֽלָה׃

3 பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)
3 When the earth and all its dwellers quake, it is I who bear up its pillars. Selah
3 உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும் நிலைகுலைந்து போகலாம்; ஆனால், நான் அதன் தூண்களை உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)

4אָמַ֣רְתִּי לַֽ֭הוֹלְלִים אַל־תָּהֹ֑לּוּ וְ֝לָרְשָׁעִ֗ים אַל־תָּרִ֥ימוּ קָֽרֶן׃

4 வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.
4 I say to the proud, ‘Do not boast,’ and to the wicked, ‘Do not lift up your horn.
4 வீண் பெருமை கொள்வோரிடம், 'வீண் பெருமை கொள்ள வேண்டாம்' § எனவும் பொல்லாரிடம், 'உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;

5אַל־תָּרִ֣ימוּ לַמָּר֣וֹם קַרְנְכֶ֑ם תְּדַבְּר֖וּ בְצַוָּ֣אר עָתָֽק׃

5 உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள், இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
5 Do not lift up your horn against heaven or speak with an outstretched neck.’”
5 உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்; தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்;' எனவும் சொல்வேன்.

6כִּ֤י לֹ֣א מִ֭מּוֹצָא וּמִֽמַּעֲרָ֑ב וְ֝לֹ֗א מִמִּדְבַּ֥ר הָרִֽים׃

6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.
6 For exaltation comes neither from east nor west, nor out of the desert,
6 கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ, பாலைவெளியிலிருந்தோ, § மலைகளிலிருந்தோ, உங்களுக்கு எதுவும் வராது.

7כִּֽי־אֱלֹהִ֥ים שֹׁפֵ֑ט זֶ֥ה יַ֝שְׁפִּ֗יל וְזֶ֣ה יָרִֽים׃

7 தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
7 but it is God who judges; He brings down one and exalts another.
7 ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்; அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவரை உயர்த்துகின்றார்.

8כִּ֤י כ֪וֹס בְּֽיַד־יְהוָ֡ה וְיַ֤יִן חָמַ֨ר ׀ מָ֥לֵא מֶסֶךְ֮ וַיַּגֵּ֢ר מִ֫זֶּ֥ה אַךְ־שְׁ֭מָרֶיהָ יִמְצ֣וּ יִשְׁתּ֑וּ כֹּ֝֗ל רִשְׁעֵי־אָֽרֶץ׃

8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
8 For a cup is in the hand of the LORD, full of foaming wine mixed with spices. He pours from His cup, and all the wicked of the earth drink it down to the dregs.
8 ஏனெனில், மதிமயக்கும் மருந்து கலந்த திராட்சை மது பொங்கிவழியும் ஒரு பாத்திரம் ஆண்டவர் கையில் இருக்கின்றது; அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்; உலகிலுள்ள பொல்லார் அனைவரும் அதை முற்றிலும் உறிஞ்சிக் குடித்துவிடுவர்.

9וַ֭אֲנִי אַגִּ֣יד לְעֹלָ֑ם אֲ֝זַמְּרָ֗ה לֵאלֹהֵ֥י יַעֲקֹֽב׃

9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
9 But I will proclaim Hima forever; I will sing praise to the God of Jacob.
9 நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்; யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்;

10וְכָל־קַרְנֵ֣י רְשָׁעִ֣ים אֲגַדֵּ֑עַ תְּ֝רוֹמַ֗מְנָה קַֽרְנ֥וֹת צַדִּֽ֥יק׃

10 துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
10 “All the horns of the wicked I will cut off, but the horns of the righteous will be exalted.”
10 பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்; நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வுபெறும்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Psalms Chapter   <previous   73   74   75   76   77   78   79   80   81   82   83   84   85   86   87   88   89    next>

Footnotes:
9 a Or proclaim it

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.