பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
(நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு)
சங்கீதம் 76 | Psalms 76
God’s Name Is Great in Israel
For the choirmaster. With stringed instruments. A Psalm of Asaph. A song.
1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
1 For the choirmaster. With stringed instruments. A Psalm of Asaph. A song. God is known in Judah; His name is great in Israel.
1 யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்; இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது.
2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
2 His tent is in Salem,a His dwelling place in Zion.
2 எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது; சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது.
3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)
3 There He shattered the flaming arrows, the shield and sword and weapons of war. Selah
3 அங்கே அவர் மின்னும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலன்களையும் தகர்த்தெறிந்தார். (சேலா)
4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.
4 You are resplendent with light, more majestic than mountains filled with game.
4 ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்; உமது மாட்சி என்றுமுள மலைகளினும் உயர்ந்தது.
5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
5 The valiant lie plundered; they sleep their last sleep. No men of might could lift a hand.
5 நெஞ்சுறுதி கொண்ட வீரர் கொள்ளையிடப்பட்டனர்; அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்; அவர்களின் கைகள் போர்க்கலன்களைத் தாங்கும் வலுவிழந்தன.
6 யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
6 At Your rebuke, O God of Jacob, both horse and rider lie stunned.
6 யாக்கோபின் கடவுளே, உமது கடிந்துரையால் குதிரைகளும் வீரர்களும் மடிந்து விழுந்தனர்.
7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
7 You alone are to be feared. When You are angry, who can stand before You?
7 ஆண்டவரே, நீர் அஞ்சுதற்கு உரியவர்; நீர் சினமுற்ற வேளையில் உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?
8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும் தேவரீர் எழுந்தருளினபோது,
8 From heaven You pronounced judgment, and the earth feared and was still
8 ❮8-9❯கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது, மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக் காக்க விழைந்தபோது, வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்; பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)
9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)
9 when God rose up to judge, to save all the lowly of the earth. Selah
10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
10 Even the wrath of man shall praise You; with the survivors of wrath You will clothe Yourself.b
10 மாறாக, சினமுற்ற மாந்தர், உம்மைப் புகழ்தேத்துவர்; உமது கோபக் கனலுக்குத் தப்பியோர் உமக்கு விழாக்கொண்டாடுவர்;
11 பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.
11 Make and fulfill your vows to the LORD your God; let all the neighboring lands bring tribute to Him who is to be feared.
11 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்து அதை நிறைவேற்றுங்கள்; அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும் அஞ்சுதற்குரிய அவருக்கே காணிக்கைகளைக் § கொண்டு வருவராக!
12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
12 He breaks the spirits of princes; He is feared by the kings of the earth.
12 செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்; பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a That is, Jerusalem
10 b Or Surely Your wrath against men brings You praise, and the survivors of Your wrath will be restrained.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.