பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
(ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு)
சங்கீதம் 83 | Psalms 83
O God, Be Not Silent
A song. A Psalm of Asaph.
1 தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.
1 A song. A Psalm of Asaph. O God, be not silent; be not speechless;a be not still, O God.
1 கடவுளே! மௌனமாய் இராதேயும்; பேசாமல் இராதேயும்; இறைவனே! அமைதியாய் இராதேயும்.
2 இதோ உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
2 See how Your enemies rage, how Your foes have reared their heads.
2 ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்; உம்மை வெறுப்போர் தலைதூக்குகின்றார்கள்.
3 உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
3 With cunning they scheme against Your people and conspire against those You cherish,
3 உம் மக்களுக்கு எதிராக வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்; உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
4 அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
4 saying, “Come, let us erase them as a nation; may the name of Israel be remembered no more.”
4 அவர்கள் கூறுகின்றார்கள்; 'ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்; இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.'
5 இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,
5 For with one mind they plot together, they form an alliance against You—
5 அவர்கள் ஒருமனப்பட்டுச் சதி செய்கின்றார்கள்; உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
6 கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,
6 the tents of Edom and the Ishmaelites, of Moab and the Hagrites,
6 ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர், மோவாபியர், அக்ரியர்,
7 ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
7 of Gebal, Ammon, and Amalek, of Philistia with the people of Tyre.
7 கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் மற்றும் தீர்வாழ் மக்களே அவர்கள்.
8 அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)
8 Even Assyria has joined them, lending strength to the sons of Lot. Selah
8 அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு, லோத்தின் மைந்தருக்கு வலக்கையாய் இருந்தனர். (சேலா)
9 மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
9 Do to them as You did to Midian, as to Sisera and Jabin at the River Kishon,
9 மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல, அவர்களுக்கும் செய்தருளும்.1
1 நீதி 4:6-22; 7:1-23.
10 நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
10 who perished at Endor and became like dung on the ground.
10 அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்; அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.
11 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
11 Make their nobles like Oreb and Zeeb, and all their princes like Zebah and Zalmunna,
11 ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல் அவர்களின் உயர்குடி மக்களுக்கும் செய்தருளும்! § செபாருக்கும் சல்முன்னாவுக்கும் செய்ததுபோல் அவர்களின் தலைவர்களுக்கும் செய்தருளும்.2
12 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
12 who said, “Let us possess for ourselves the pastures of God.”
12 ஏனெனில், 'கடவுளின் மேய்ச்சல் நிலத்தை நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்' என்று அவர்கள் கூறினார்கள்.
13 என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
13 Make them like tumbleweed, O my God, like chaff before the wind.
13 என் கடவுளே! சூறாவளியில் புழுதியென, காற்றில் பதரென அவர்களை ஆக்கியருளும்.
14 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும் அக்கினி ஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும்,
14 As fire consumes a forest, as a flame sets the mountains ablaze,
14 நெருப்பு காட்டை எரிப்பது போலவும், தீக்கனல் மலைகளைச் சுட்டெரிப்பது போலவும் அவர்களுக்குச் செய்தருளும்.
15 நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றிலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
15 so pursue them with Your tempest, and terrify them with Your storm.
15 உமது புயலால் அவர்களைத் துரத்திவிடும்! உமது சூறாவளியால் அவர்களைத் திகிலடையச் செய்யும்.
16 கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
16 Cover their faces with shame, that they may seek Your name, O LORD.
16 ஆண்டவரே, மானக்கேட்டினால் அவர்கள் முகத்தை மூடும்; அப்பொழுதுதான் அவர்கள் உமது பெயரை நாடுவார்கள்.
17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
17 May they be ever ashamed and terrified; may they perish in disgrace.
17 அவர்கள் என்றென்றும் வெட்கிக் கலங்குவார்களாக! நாணமுற்று அழிந்து போவார்களாக!
18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
18 May they know that You alone, whose name is the LORD, are Most High over all the earth.
18 'ஆண்டவர்' என்னும் பெயர் தாங்கும் உம்மை, உலகனைத்திலும் உன்னதரான உம்மை, அவர்கள் அறிந்து கொள்வார்களாக!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or deaf
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.