பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
சங்கீதம் 94 | Psalms 94
The LORD Will Not Forget His People
1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
1 O LORD, God of vengeance, O God of vengeance, shine forth.
1 அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா! ஆண்டவரே! அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா, ஒளிர்ந்திடும்!*
* 1 கொரி 3:20.
2 பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
2 Rise up, O Judge of the earth; render a reward to the proud.
2 உலகின் நீதிபதியே, எழுந்தருளும்; செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும்.
3 கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்.
3 How long will the wicked, O LORD, how long will the wicked exult?
3 எத்துணைக் காலம், ஆண்டவரே! எத்துணைக் காலம் பொல்லார் அக்களிப்பர்?
4 எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி கடினமாய்ப் பேசி, பெருமைப் பாராட்டுவார்கள்?
4 They pour out arrogant words; all workers of iniquity boast.
4 அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்; தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்.
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
5 They crush Your people, O LORD; they oppress Your heritage.
5 ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
6 விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலை செய்து:
6 They kill the widow and the foreigner; they murder the fatherless.
6 கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர்.
7 கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
7 They say, “The LORD does not see; the God of Jacob pays no heed.”
7 'ஆண்டவர் இதைக் கண்டு கொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை' என்கின்றனர்.
8 ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
8 Take notice, O senseless among the people! O fools, when will you be wise?
8 மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்?
9 காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
9 He who affixed the ear, can He not hear? He who formed the eye, can He not see?
9 செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?
10 ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
10 He who admonishes the nations, does He not discipline? He who teaches man, does He lack knowledge?
10 மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ?
11 மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
11 The LORD knows the thoughts of man, that they are futile.a
11 மானிடரின் எண்ணங்கள் வீணானவை; இதனை ஆண்டவர் அறிவார்.
12 கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
12 Blessed is the man You discipline, O LORD, and teach from Your law,
12 ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்;
13 சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
13 to grant him relief from days of trouble, until a pit is dug for the wicked.
13 அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பொல்லார்க்குக் குழி வெட்டப்படும்.
14 கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
14 For the LORD will not forsake His people; He will never abandon His heritage.
14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.
15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
15 Surely judgment will again be righteous, and all the upright in heart will follow it.
15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.
16 துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
16 Who will rise up for me against the wicked? Who will stand for me against the workers of iniquity?
16 என் சார்பில் பொல்லார்க்கு எதிராக எழுபவர் எவர்? என் சார்பில் தீமை செய்வோர்க்கு எதிராக நிற்பவர் எவர்?
17 கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.
17 Unless the LORD had been my helper, I would soon have dwelt in the abode of silence.
17 ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால், என் உயிர் விரைவில் மௌன உலகிற்குச் சென்றிருக்கும்!
18 என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
18 If I say, “My foot is slipping,” Your loving devotion, O LORD, supports me.
18 'என் அடி சறுக்குகின்றது' என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.
19 என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
19 When anxiety overwhelms me, Your consolation delights my soul.
19 என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.
20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
20 Can a corrupt throne be Your ally—one devising mischief by decree?
20 சட்டத்திற்குப் புறம்பாகத் தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர் உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ?
21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
21 They band together against the righteous and condemn the innocent to death.b
21 நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் இணைகின்றனர்; மாசற்றோர்க்குக் கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.
22 கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.
22 But the LORD has been my stronghold, and my God is my rock of refuge.
22 ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்; என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.
23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.
23 He will bring upon them their own iniquity and destroy them for their wickedness. The LORD our God will destroy them.
23 அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்; அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்; நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
11 a Cited in 1 Corinthians 3:20
21 b Or condemn innocent blood
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.