பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Song of Solomon உன்னதப்பாட்டு שִׁיר הַשִׁירִים
உன்னதப்பாட்டு 5 | Song of Solomon 5
The Bride and Her Beloved
The Bridegroom
1 என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.
1 I have come to my garden, my sister, my bride; I have gathered my myrrh with my spice. I have eaten my honeycomb with my honey; I have drunk my wine with my milk. Eat, O friends, and drink; drink freely, O beloved.
1 என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்; என் தங்காய், மணமகளே, என் வெள்ளைப்போளத்தையும் நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்; என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்; என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்; தோழர்களே, உண்ணுங்கள்; அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.
The Friends
The Bride
2 நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
2 I sleep, but my heart is awake. A sound! My beloved is knocking: “Open to me, my sister, my darling, my dove, my flawless one. My head is drenched with dew, my hair with the dampness of the night.”
2 நான் உறங்கினேன்; என் நெஞ்சமோ விழித்திருந்தது; இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்; "கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது; என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது.
3 என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
3 I have taken off my robe—must I put it back on? I have washed my feet—must I soil them again?
3 "என் ஆடையைக் களைந்து விட்டேன்; மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்; மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?"
4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.
4 My beloved put his hand to the latch; my heart pounded for him.
4 என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்; என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.
5 என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
5 I rose up to open for my beloved. My hands dripped with myrrh, my fingers with flowing myrrh on the handles of the bolt.
5 எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க; என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது; என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று; தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.
6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.
6 I opened for my beloved, but he had turned and gone. My heart sank at his departure. I sought him, but did not find him. I called, but he did not answer.
6 கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு; அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்; என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது; அவரைத் தேடினேன்; அவரைக் கண்டேன் அல்லேன்; அவரை அழைத்தேன்; பதிலே இல்லை!
7 நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்..
7 I encountered the watchmen on their rounds of the city. They beat me and bruised me; they took away my cloak, those guardians of the walls.
7 ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; அவர்கள் என்னை அடித்தனர்; காயப்படுதினர்; என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்; கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!
8 எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
8 O daughters of Jerusalem, I adjure you, if you find my beloved, tell him I am sick with love.
8 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்; என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? "காதல் நோயுற்றேன் நான்" எனச் சொல்லுங்கள்.
The Friends
9 ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதில் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
9 How is your beloved better than others, O most beautiful among women? How is your beloved better than another, that you charge us so?
9 "பெண்களுக்குள் பேரழகியே, மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே; மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?"
The Bride
10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
10 My beloved is dazzling and ruddy, outstanding among ten thousand.
10 "என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்; பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்!
11 அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
11 His head is purest gold; his hair is wavy and black as a raven.
11 அவரது தலை பசும்பொன்; தலை முடி சுருள் சுருளாய் உள்ளது; காகம்போல் கருமை மிக்கது.
12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
12 His eyes are like doves beside the streams of water, bathed in milk and mounted like jewels.
12 அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை; பாலில் குளித்து, நீரோடைகளின் அருகில் கரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை.
13 அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
13 His cheeks are like beds of spice, towers of perfume. His lips are like lilies, dripping with flowing myrrh.
13 அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன; நறுமணம் ஆங்கே கமழ்கின்றது; அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்; அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.
14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
14 His arms are rods of gold set with beryl. His body is an ivory panel bedecked with sapphires.
14 அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன; அவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு; அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.
15 அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.
15 His legs are pillars of marble set on bases of pure gold. His appearance is like Lebanon, as majestic as the cedars.
15 அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்; தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன; அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது; கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.
16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.
16 His moutha is most sweet; he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem.
16 அவரது வாய் இணையற்ற இனிமை; அவர் முழுமையும் பேருவகையே; எருசலேம் மங்கைய இவரே என் நண்பர்."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
16 a Hebrew palate
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.