பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Song of Solomon உன்னதப்பாட்டு שִׁיר הַשִׁירִים
உன்னதப்பாட்டு 8 | Song of Solomon 8
Longing for Her Beloved
1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
1 O that you were to me like a brother who nursed at my mother’s breasts! If I found you outdoors, I would kiss you, and no one would despise me.
1 நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.
2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
2 I would lead you and bring you to the house of my mother who taught me. I would give you spiced wine to drink, the nectar of my pomegranates.
2 உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்; எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்; மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்; என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.
3 அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.
3 His left hand is under my head, and his right arm embraces me.
3 இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்; வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.
4 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.
4 O daughters of Jerusalem, I adjure you: Do not arouse or awaken love until the time is right.
4 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்; காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
The Friends
5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின் கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
5 Who is this coming up from the wilderness, leaning on her beloved? I roused you under the apple tree; there your mother conceived you; there she travailed and brought you forth.
5 "யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்; தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?"கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்; அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள். அங்கேதான் உம்மைப் பெற்றவள் பேறுகால வேதனையுற்றாள்.
The Bride
6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
6 Set me as a seal over your heart, as a seal upon your arm. For love is as strong as death, its jealousya as unrelenting as Sheol. Its sparks are fiery flames, the fiercest blaze of all.
6 உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக; இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.
7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
7 Mighty waters cannot quench love; rivers cannot sweep it away. If a man were to give all the wealth of his house for love, his offer would be utterly scorned.
7 பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது; அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்; ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.
The Friends
8 நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
8 We have a little sister, and her breasts are not yet grown. What shall we do for our sister on the day she is spoken for?
8 நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச வரும்நாளில் நம் தங்கைக்காக என் செய்வோம்?
9 அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
9 If she is a wall, we will build a tower of silver upon her. If she is a door, we will enclose her with panels of cedar.
9 அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்; அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.
The Bride
10 நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்.
10 I am a wall, and my breasts are like towers. So I have become in his eyes like one who brings peace.
10 நான் மதில்தான்; என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன; அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
11 Solomon had a vineyard in Baal-hamon. He leased it to the tenants. For its fruit, each was to bring a thousand shekels of silver.b
11 பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்; அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.
12 என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
12 But my own vineyard is mine to give; the thousand shekels are for you, O Solomon, and two hundred are for those who tend its fruit.
12 எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது; சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்; இருநூறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.
The Bridegroom
13 தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
13 You who dwell in the gardens, my companions are listening for your voice. Let me hear it!
13 "தோட்டங்களில் வாழ்பவளே! தோழர் கூர்ந்து கேட்கின்றனர்; உன் குரலை யான் கேட்கலாகாதோ!"
The Bride
14 என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
14 Come away, my beloved, and be like a gazelle or a young stag on the mountains of spices.
14 "என் காதலரே! விரைந்து ஓடிடுக; கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!"
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
6 a Or passion
11 b Hebrew a thousand of silver ; that is, approximately 25.1 pounds or 11.4 kilograms of silver
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.