பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Zechariah  சகரியா  זְכַרְיָה

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

சகரியா 10 | Zechariah 10

Judah and Israel Will Be Restored

1שַׁאֲל֨וּ מֵיְהוָ֤ה מָטָר֙ בְּעֵ֣ת מַלְק֔וֹשׁ יְהוָ֖ה עֹשֶׂ֣ה חֲזִיזִ֑ים וּמְטַר־גֶּ֙שֶׁם֙ יִתֵּ֣ן לָהֶ֔ם לְאִ֖ישׁ עֵ֥שֶׂב בַּשָּׂדֶֽה׃

1 பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.
1 Ask the LORD for rain in springtime; the LORD makes the storm clouds, and He will give everyone showers of rain and crops in the field.
1 இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்; மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்; வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே;

2כִּ֧י הַתְּרָפִ֣ים דִּבְּרוּ־אָ֗וֶן וְהַקּֽוֹסְמִים֙ חָ֣זוּ שֶׁ֔קֶר וַֽחֲלֹמוֹת֙ הַשָּׁ֣וא יְדַבֵּ֔רוּ הֶ֖בֶל יְנַֽחֵמ֑וּן עַל־כֵּן֙ נָסְע֣וּ כְמוֹ־צֹ֔אן יַעֲנ֖וּ כִּֽי־אֵ֥ין רֹעֶֽה׃

2 சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத் தரித்தார்கள்; சொரூபக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.
2 For idols speak deceit and diviners see illusions; they tell false dreams and offer empty comfort. Therefore the people wander like sheep, oppressed for lack of a shepherd.
2 குலதெய்வங்கள் வீணானதையே கூறுகின்றன; குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்; அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்; வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்; ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்; ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.

3עַל־הָֽרֹעִים֙ חָרָ֣ה אַפִּ֔י וְעַל־הָעַתּוּדִ֖ים אֶפְק֑וֹד כִּֽי־פָקַד֩ יְהוָ֨ה צְבָא֤וֹת אֶת־עֶדְרוֹ֙ אֶת־בֵּ֣ית יְהוּדָ֔ה וְשָׂ֣ם אוֹתָ֔ם כְּס֥וּס הוֹד֖וֹ בַּמִּלְחָמָֽה׃

3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம்மூண்டது, கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.
3 “My anger burns against the shepherds, and I will punish the leaders.a For the LORD of Hosts attends to His flock, the house of Judah; He will make them like His royal steed in battle.
3 ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது; தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்; ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்; அவர்களை, வலிமைமிகு போர்க் குதிரைகளைப்போல் ஆக்குவார்.

4מִמֶּ֤נּוּ פִנָּה֙ מִמֶּ֣נּוּ יָתֵ֔ד מִמֶּ֖נּוּ קֶ֣שֶׁת מִלְחָמָ֑ה מִמֶּ֛נּוּ יֵצֵ֥א כָל־נוֹגֵ֖שׂ יַחְדָּֽו׃

4 அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள்.
4 The cornerstone will come from Judah, the tent peg from him, as well as the battle bow and every ruler together.
4 அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்; கூடார முளையும், போர்வில்லும், ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.

5וְהָי֨וּ כְגִבֹּרִ֜ים בּוֹסִ֨ים בְּטִ֤יט חוּצוֹת֙ בַּמִּלְחָמָ֔ה וְנִ֨לְחֲמ֔וּ כִּ֥י יְהוָ֖ה עִמָּ֑ם וְהֹבִ֖ישׁוּ רֹכְבֵ֥י סוּסִֽים׃

5 அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.
5 They will be like mighty men in battle, trampling the enemy in the mire of the streets. They will fight because the LORD is with them, and they will put the horsemen to shame.
5 அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.

6וְגִבַּרְתִּ֣י ׀ אֶת־בֵּ֣ית יְהוּדָ֗ה וְאֶת־בֵּ֤ית יוֹסֵף֙ אוֹשִׁ֔יעַ וְהֽוֹשְׁבוֹתִים֙ כִּ֣י רִֽחַמְתִּ֔ים וְהָי֖וּ כַּאֲשֶׁ֣ר לֹֽא־זְנַחְתִּ֑ים כִּ֗י אֲנִ֛י יְהוָ֥ה אֱלֹהֵיהֶ֖ם וְאֶעֱנֵֽם׃

6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்பபடுத்தி யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.
6 I will strengthen the house of Judah and save the house of Joseph. I will restore them because I have compassion on them, and they will be as though I had not rejected them. For I am the LORD their God, and I will answer them.
6 "யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்; யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்; அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்; அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்; ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன்.

7וְהָי֤וּ כְגִבּוֹר֙ אֶפְרַ֔יִם וְשָׂמַ֥ח לִבָּ֖ם כְּמוֹ־יָ֑יִן וּבְנֵיהֶם֙ יִרְא֣וּ וְשָׂמֵ֔חוּ יָגֵ֥ל לִבָּ֖ם בַּיהוָֽה׃

7 எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.
7 Ephraim will be like a mighty man, and their hearts will be glad as with wine. Their children will see it and be joyful; their hearts will rejoice in the LORD.
7 எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்; திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்; அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்; ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.

8אֶשְׁרְקָ֥ה לָהֶ֛ם וַאֲקַבְּצֵ֖ם כִּ֣י פְדִיתִ֑ים וְרָב֖וּ כְּמ֥וֹ רָבֽוּ׃

8 நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன், அவர்கள் பெருகியிருந்ததுபோல பெருகிப்போவார்கள்.
8 I will whistle for them to gather, for I have redeemed them; and they will be as numerous as they once were.
8 சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்; ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்; முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.

9וְאֶזְרָעֵם֙ בָּֽעַמִּ֔ים וּבַמֶּרְחַקִּ֖ים יִזְכְּר֑וּנִי וְחָי֥וּ אֶת־בְּנֵיהֶ֖ם וָשָֽׁבוּ׃

9 நான் அவர்களை ஜனங்களுக்குள்ளே இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்.
9 Though I sow them among the nations, they will remember Me in distant lands; they and their children will live and return.
9 மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்; தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.

10וַהֲשִֽׁיבוֹתִים֙ מֵאֶ֣רֶץ מִצְרַ֔יִם וּמֵֽאַשּׁ֖וּר אֲקַבְּצֵ֑ם וְאֶל־אֶ֨רֶץ גִּלְעָ֤ד וּלְבָנוֹן֙ אֲבִיאֵ֔ם וְלֹ֥א יִמָּצֵ֖א לָהֶֽם׃

10 நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு அவர்களைக் கீலேயாத் தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும்.
10 I will bring them back from Egypt and gather them from Assyria. I will bring them to Gilead and Lebanon until no more room is found for them.
10 நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்; அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்; இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.

11וְעָבַ֨ר בַּיָּ֜ם צָרָ֗ה וְהִכָּ֤ה בַיָּם֙ גַּלִּ֔ים וְהֹבִ֕ישׁוּ כֹּ֖ל מְצוּל֣וֹת יְאֹ֑ר וְהוּרַד֙ גְּא֣וֹן אַשּׁ֔וּר וְשֵׁ֥בֶט מִצְרַ֖יִם יָסֽוּר׃

11 இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோம்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.
11 They will pass through the sea of distress and strike the waves of the sea; all the depths of the Nile will dry up. The pride of Assyria will be brought down, and the scepter of Egypt will depart.
11 எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்; கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்; பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்; எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.

12וְגִבַּרְתִּים֙ בַּֽיהוָ֔ה וּבִשְׁמ֖וֹ יִתְהַלָּ֑כוּ נְאֻ֖ם יְהוָֽה׃

12 நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 I will strengthen them in the LORD, and in His name they will walk,” declares the LORD.
12 ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்; ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள்," என்கிறார் ஆண்டவர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Zechariah Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
3 a Or these male goats

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.