பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Zechariah  சகரியா  זְכַרְיָה

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

சகரியா 5 | Zechariah 5

The Vision of the Flying Scroll

1וָאָשׁ֕וּב וָאֶשָּׂ֥א עֵינַ֖י וָֽאֶרְאֶ֑ה וְהִנֵּ֖ה מְגִלָּ֥ה עָפָֽה׃

1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்.
1 Again I lifted up my eyes and saw before me a flying scroll.
1 மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ,

2וַיֹּ֣אמֶר אֵלַ֔י מָ֥ה אַתָּ֖ה רֹאֶ֑ה וָאֹמַ֗ר אֲנִ֤י רֹאֶה֙ מְגִלָּ֣ה עָפָ֔ה אָרְכָּהּ֙ עֶשְׂרִ֣ים בָּֽאַמָּ֔ה וְרָחְבָּ֖הּ עֶ֥שֶׂר בָּאַמָּֽה׃

2 தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.
2 “What do you see?” asked the angel. “I see a flying scroll,” I replied, “twenty cubits long and ten cubits wide.a
2 பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் கண்டேன். "நீ காண்பது என்ன?" என்று அத்தூதர் என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழம், அகலம் பத்து முழம்" என்று பதிலளித்தேன்.

3וַיֹּ֣אמֶר אֵלַ֔י זֹ֚את הָֽאָלָ֔ה הַיּוֹצֵ֖את עַל־פְּנֵ֣י כָל־הָאָ֑רֶץ כִּ֣י כָל־הַגֹּנֵ֗ב מִזֶּה֙ כָּמ֣וֹהָ נִקָּ֔ה וְכָל־הַ֨נִּשְׁבָּ֔ע מִזֶּ֖ה כָּמ֥וֹהָ נִקָּֽה׃

3 அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
3 Then he told me, “This is the curse that is going out over the face of all the land, for according to one side of the scroll, every thief will be removed; and according to the other side, every perjurer will be removed.
3 அப்போது அவர் என்னிடம், "அனைத்துலகின்மீதும் விழுகின்ற சாபமே இது; ஒருபுறம் எழுதியுள்ளபடி, திருடன் எவனும் இங்கிருந்து ஒழிக்கப்படுவான்; மறுபுறம் எழுதியுள்ளபடி, பொய்யாணை இடுகிறவன் எவனும் தண்டனைக்குத் தப்பவே மாட்டான்.

4הוֹצֵאתִ֗יהָ נְאֻם֙ יְהוָ֣ה צְבָא֔וֹת וּבָ֙אָה֙ אֶל־בֵּ֣ית הַגַּנָּ֔ב וְאֶל־בֵּ֛ית הַנִּשְׁבָּ֥ע בִּשְׁמִ֖י לַשָּׁ֑קֶר וְלָ֙נֶה֙ בְּת֣וֹךְ בֵּית֔וֹ וְכִלַּ֖תּוּ וְאֶת־עֵצָ֥יו וְאֶת־אֲבָנָֽיו׃

4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
4 I will send it out, declares the LORD of Hosts, and it will enter the house of the thief and the house of him who swears falsely by My name. It will remain inside his house and destroy it, down to its timbers and stones.”
4 நான் அந்தச் சாபத்தை அனுப்புவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர். "அது திருடரின் வீட்டிற்குள்ளும் என் பெயரால் பொய்யாணை இடுவோரின் இல்லத்திற்குள்ளும் நுழைந்து, அவரவர் வீட்டில் தங்கி, மரங்கள் கற்கள் உட்பட அவ்வீட்டையே அழித்து விடும்."

The Vision of the Woman in a Basket

5וַיֵּצֵ֕א הַמַּלְאָ֖ךְ הַדֹּבֵ֣ר בִּ֑י וַיֹּ֣אמֶר אֵלַ֔י שָׂ֣א נָ֤א עֵינֶ֙יךָ֙ וּרְאֵ֔ה מָ֖ה הַיּוֹצֵ֥את הַזֹּֽאת׃

5 பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.
5 Then the angel who was speaking with me came forward and told me, “Now lift up your eyes and see what is approaching.”
5 பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் வெளியே வந்து என்னிடம், "உன் கண்களை உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார்" என்றார்.

6וָאֹמַ֖ר מַה־הִ֑יא וַיֹּ֗אמֶר זֹ֤את הָֽאֵיפָה֙ הַיּוֹצֵ֔את וַיֹּ֕אמֶר זֹ֥את עֵינָ֖ם בְּכָל־הָאָֽרֶץ׃

6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
6 “What is it?” I asked. And he replied, “A measuring basketb is going forth.” Then he continued, “This is their iniquityc in all the land.”
6 "அது என்ன?" என்று நான் திருப்பிக் கேட்க, "வெளிவரும் ஒரு மரக்கால்!" என்றார். தொடர்ந்து அவர், "இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும் அவர்களின் தீச்செயல்" என மொழிந்தார்.

7וְהִנֵּ֛ה כִּכַּ֥ר עֹפֶ֖רֶת נִשֵּׂ֑את וְזֹאת֙ אִשָּׁ֣ה אַחַ֔ת יוֹשֶׁ֖בֶת בְּת֥וֹךְ הָאֵיפָֽה׃

7 இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.
7 And behold, the cover of lead was raised, and there was a woman sitting inside the basket.
7 அதன் ஈய மூடி தூக்கி உயர்த்தப்பட்டது இதோ, மரக்காலின் உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

8וַיֹּ֙אמֶר֙ זֹ֣את הָרִשְׁעָ֔ה וַיַּשְׁלֵ֥ךְ אֹתָ֖הּ אֶל־תּ֣וֹךְ הָֽאֵיפָ֑ה וַיַּשְׁלֵ֛ךְ אֶת־אֶ֥בֶן הָעֹפֶ֖רֶת אֶל־פִּֽיהָ׃

8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
8 “This is Wickedness,” he said. And he shoved her down into the basket, pushing down the lead cover over its opening.
8 அப்போது அத்தூதர், "இவளே அக்கொடுமை" எனக் கூறி, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்துப் பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார்.

9וָאֶשָּׂ֨א עֵינַ֜י וָאֵ֗רֶא וְהִנֵּה֩ שְׁתַּ֨יִם נָשִׁ֤ים יֽוֹצְאוֹת֙ וְר֣וּחַ בְּכַנְפֵיהֶ֔ם וְלָהֵ֥נָּה כְנָפַ֖יִם כְּכַנְפֵ֣י הַחֲסִידָ֑ה וַתִּשֶּׂ֙אנָה֙ אֶת־הָ֣אֵיפָ֔ה בֵּ֥ין הָאָ֖רֶץ וּבֵ֥ין הַשָּׁמָֽיִם׃

9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.
9 Then I lifted up my eyes and saw two women approaching, with the wind in their wings. Their wings were like those of a stork, and they lifted up the basket between heaven and earth.
9 மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது இதோ, வெளிவருகின்ற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகள் போல் இறக்கைகள் இருந்தன. அவர்களுடைய இறக்கைகளில் காற்று நிரம்பியிருந்தது; அவர்கள் மரக்காலை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் தூக்கிக் கொண்டு போனார்கள். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதரிடம்,

10וָאֹמַ֕ר אֶל־הַמַּלְאָ֖ךְ הַדֹּבֵ֣ר בִּ֑י אָ֛נָה הֵ֥מָּה מֽוֹלִכ֖וֹת אֶת־הָאֵיפָֽה׃

10 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
10 “Where are they taking the basket?” I asked the angel who was speaking with me.
10 "இவர்கள் மரக்காலை எங்கே கொண்டு போகிறார்கள்?" என்று நான் கேட்டேன்.

11וַיֹּ֣אמֶר אֵלַ֔י לִבְנֽוֹת־לָ֥הֿ בַ֖יִת בְּאֶ֣רֶץ שִׁנְעָ֑ר וְהוּכַ֛ן וְהֻנִּ֥יחָה שָּׁ֖ם עַל־מְכֻנָתָֽהּ׃

11 அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
11 “To build a house for it in the land of Shinar,d” he told me. “And when it is ready, the basket will be set there on its pedestal.”
11 அதற்கு அவர், "சீனார் நாட்டிலே அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள். அங்கே கோவில் எழுப்பி மரக்காலை அதற்குரிய மேடையில் நிலைநிறுத்துவார்கள்" என்றார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Zechariah Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
2 a The flying scroll was approximately 30 feet long and 15 feet wide (9.1 meters long and 4.6 meters wide).
6 b Or An ephah
6 c One Hebrew manuscript, LXX, and Syriac; most Hebrew manuscripts their appearance  or (literally) their eye
11 d That is, Babylonia

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.