பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Zechariah சகரியா זְכַרְיָה
சகரியா 8 | Zechariah 8
The Restoration of Jerusalem (Micah 4:6–13)
1 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:
1 Again the word of the LORD of Hosts came to me, saying:
1 படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
2 நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2 This is what the LORD of Hosts says: “I am jealous for Zion with great zeal; I am jealous for her with great fervor.”
2 "சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்; அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.
3 நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 This is what the LORD says: “I will return to Zion and dwell in Jerusalem. Then Jerusalem will be called the City of Truth, and the mountain of the LORD of Hosts will be called the Holy Mountain.”
3 "ஆண்டவர் கூறுவது இதுவே: சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் 'உண்மையுள்ள நகர்' என்றும், படைகளின் ஆண்டவரது மலை 'திருமலை' என்றும் பெயர்பெற்று விளங்கும்.
4 திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.
4 This is what the LORD of Hosts says: “Old men and old women will again sit along the streets of Jerusalem, each with a staff in hand because of great age.
4 படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்;
5 நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
5 And the streets of the city will be filled with boys and girls playing there.”
5 நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
6 சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
6 This is what the LORD of Hosts says: “If this is impossible in the eyes of the remnant of this people in these days, should it also be impossiblea in My eyes?” declares the LORD of Hosts.
6 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?" என்கிறார் படைகளின் ஆண்டவர்.
7 இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,
7 This is what the LORD of Hosts says: “I will save My people from the land of the east and from the land of the west.
7 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்;
8 அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
8 I will bring them back to dwell in Jerusalem, where they will be My people, and I will be their faithful and righteous God.”
8 அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்."
9 சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற் கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
9 This is what the LORD of Hosts says: “Let your hands be strong, you who now hear these words spoken by the prophets who were present when the foundations were laid to rebuild the temple, the house of the LORD of Hosts.
9 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "படைகளின் ஆண்டவரது கோவிலைக் கட்டியெழுப்பும்படி அதற்கு அடித்தளம் இட்ட நாளிலிருந்து பேசிய இறைவாக்கினரின் வாய்மொழிகளுக்குச் செவிசாய்ப்போரே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
10 இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.
10 For before those days neither man nor beast received wages, nor was there safety from the enemy for anyone who came or went, for I had turned every man against his neighbor.
10 ஏனெனில், இந்நாள்கள் வரை மனிதருக்கோ கால்நடைகளுக்கோ கூலிகிடைக்கவில்லை; போவார் வருவாருக்கோ பகைவரிடமிருந்து பாதுகாப்பு இல்லை. நான் எல்லா மனிதரையும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எழும்படி செய்துவிட்டேன்.
11 இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
11 But now I will not treat the remnant of this people as I did in the past,” declares the LORD of Hosts.
11 இப்பொழுதோ, இம்மக்களில் எஞ்சியிருப்போருக்கு முன்னாளில் நான் இருந்தது போல இருக்கமாட்டேன்," என்கிறார் படைகளின் ஆண்டவர்.*
* எபே 4:25.
12 விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.
12 “For the seed will be prosperous, the vine will yield its fruit, the ground will yield its produce, and the skies will give their dew. To the remnant of this people I will give all these things as an inheritance.
12 ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள். திராட்சைச் செடி தன் கனியைக் கொடுக்கும்; வயல் நிலம் தன் விளைவைத் தரும்; வானம் பனியைப் பொழியும்; நானோ இம்மக்களில் எஞ்சியிருப்போர் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன்.
13 சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள் சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.
13 As you have been a curse among the nations, O house of Judah and house of Israel, so I will save you, and you will be a blessing. Do not be afraid; let your hands be strong.”
13 யூதா குடும்பத்தாரே! இஸ்ரயேல் குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்; இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்; நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்; அஞ்சாதீர்கள்; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்."
14 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களை தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,
14 For this is what the LORD of Hosts says: “Just as I resolved to bring disaster upon you when your fathers provoked Me to anger, and I did not relent,” says the LORD of Hosts,
14 ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன்," என்கிறார் படைகளின் ஆண்டவர்.
15 இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.
15 “so now I have resolved to do good again to Jerusalem and Judah. Do not be afraid.
15 அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்; ஆகையால் அஞ்சாதீர்கள்.
16 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.
16 These are the things you must do: Speak truth to one another, render true and sound judgments in your gates,
16 நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே: ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்; உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்;
17 ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 do not plot evil in your hearts against your neighbor, and do not love to swear falsely, for I hate all these things,” declares the LORD.
17 ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்; பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்; ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன்," என்கிறார் ஆண்டவர்.
18 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18 Then the word of the LORD of Hosts came to me, saying,
18 படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:
19 நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபாவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
19 “This is what the LORD of Hosts says: The fasts of the fourth, the fifth, the seventh, and the tenth months will become times of joy and gladness, cheerful feasts for the house of Judah. Therefore you are to love both truth and peace.”
19 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் நோன்பும், ஐந்தாம் மாதத்தின் நோன்பும், ஏழாம் மாதத்தின் நோன்பும், பத்தாம் மாதத்தின் நோன்பும் யூதா குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்த மாபெரும் திருவிழா நாள்களாக மாறிவிடும். ஆதலால் வாய்மையையும் நல்லுறவையும் நாடுங்கள்.
20 இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
20 This is what the LORD of Hosts says: “Peoples will yet come—the residents of many cities—
20 படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; மக்களினங்களும் பல நகர்களில் குடியிருப்போரும்கூட வருவார்கள்.
21 பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.
21 and the residents of one city will go to another, saying: ‘Let us go at once to plead before the LORD and to seek the LORD of Hosts. I myself am going.’
21 ஒருநகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, "நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்" என்று சொல்வார்கள்.
22 அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.
22 And many peoples and strong nations will come to seek the LORD of Hosts in Jerusalem and to plead before the LORD.”
22 மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
23 This is what the LORD of Hosts says: “In those days ten men from the nations of every tongue will tightly grasp the robe of a Jew, saying, ‘Let us go with you, for we have heard that God is with you.’”
23 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, 'கடவுள் உங்களோடு இருக்கின்றார்' என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
6 a Or marvelous ; twice in this verse
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.