இயேசு இந்தியா வந்தாரா?

சில மரபுகள் இயேசு 12 முதல் 33 வயதிற்குள் படிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இந்தச் செய்தியைக் குறித்து சற்று சிந்திப்போம். அவர் இந்தியா வந்தார் அல்லது வரவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

இயேசு தனது வயது 12 முதல் 33 வரை எங்கே இருந்தார்?

12 முதல் 30 வயது வரை அவர் நாசரேத்தில் இருந்தார். மேலும் 30 முதல் 33 வயது வரை அவர் ஜெருசலேம் மற்றும் அதைச் சுற்றி இருந்தார். அவர் இந்தியாவிற்கு வரவில்லை என்பதற்கு திருமறை வசனங்களே சான்று.

இயேசுவின் வாழ்க்கையின் இந்த காலத்தை ஏன் திருமறை குறிப்பிடவில்லை?

ஏனென்றால் திருமறை கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு அல்ல. திருமறையின் நோக்கமும் திட்டமும் வேறு. திருமறை ஆசிரியர்கள் இரட்சிப்பின் கதையை பதிவு செய்ய விரும்பினர். கிறிஸ்தவ கண்ணோட்டத்தில், தெய்வீக நம்பிக்கையால், கிறிஸ்துவின் மறைக்கப்பட்ட வாழ்க்கை (வயது 12 முதல் 30 வரை) அதற்கு அவசியமில்லை என்று கருதினர்.

தோரா

இயேசுவை யூதர்கள் ரபி என்று அழைத்தனர். யோவான் 3:1-2

யூத பாரம்பரியதின்படி ‘ரபி’ என்று அழைக்கப்படுவதற்கு, ஒருவர் தோராவில் மிகவும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். திருமறையின் முதல் ஐந்து புத்தகங்கள் தோரா என்று எபிரேய மொழியில் அழைக்கப்படும்.

மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தோராவைக் கற்றுக்கொள்கிறார்கள். இது பரந்த மற்றும் சிக்கலான பணி. இயேசு தோராவில் மிகவும் தேர்ச்சி பெற்று இருந்தார், ஆழமான விளக்கங்களை தந்ததினால் அந்த நேரத்தில் யாரும் அவருடன் வாதிட முடியவில்லை. இயேசு எப்போதும் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டுவார். இதனை Tanakh / תַּנַ״ךְ / தனாக் என்றும் Hebrew Scriptures என்றும் அழைப்பர்.

உலக வரைபடத்தைப் பார்த்தால், இந்தியா இஸ்ரேலில் இருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் நேரடி கடல் பாதை ஏதும் இல்லை. தோராவை தவிர வேறு ஏதாவது கற்றுக்கொள்ள இயேசுவுக்கு தேவைப்பட்டால், அவர் கிரேக்கத்திற்கு பெரிய தத்துவவாதிகள் மற்றும் கணிதவியலாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள சென்றிருக்கலாம். கிரீஸ் நாடு மிகவும் நெருக்கமாக இருந்தது மற்றும் கடல் பயணம் மூலம் சென்று அடைய முடியும்.

இந்தியாவை அடைய பல நாடுகளைக் கடந்து செல்லும் ஆபத்துகளைப் பற்றி சிந்தியுங்கள். மேலும், அந்த நேரத்தில் இந்தியா ஒரு நாடாக இல்லை. அந்த நாட்களில் பல அரச சாம்ராஜ்யங்களாக இந்தியா இருந்தது. முகப்பு படத்தைப் பார்க்கவும் – இப்படம் கி.பி. முதல் ஆண்டு நிலைமையைக் காட்டுகிறது.

இப்படியிருக்க இயேசு அறிவைப் பெற பயணம் செய்ய வேண்டும் என்பது அனுமானமே ஆகும்.

இவை அனைத்தும் யூத ஆய்வுகளுக்கான மையமாக இருந்த ஜெருசலேமைப் புறக்கணிப்பதாகக் கருதப்படுகிறது, எழுதப்படுகிறது தொடர்ந்து பேசப்படுகிறது.

இந்தியா வந்தார்இந்த கருதுகோளில் பிற சிக்கல்கள்

இந்த கருதுகோளில் வேறு பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் சில:

உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. முற்றிலும் இல்லை!! அவர் இந்தியா சென்றார் என்று கூறும் மக்கள், சில மடாலயங்களில் சுருள்கள் ஆழமாக மறைந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அது ஆதாரம் அல்ல. இது வெறும் கட்டுக்கதைகள். இது போன்ற எதையும் யார் வேண்டுமானாலும் கோரலாம். இவை எந்த நம்பகமான ஆதாரங்களிலும் குறிப்பிடப்படவில்லை, மேலும் அவற்றை சரிபார்க்கவும் முடியாது.

பக்தியுள்ள யூதராக இருந்த இயேசு பலதெய்வ மதத்தில் படித்திருக்க மாட்டார். அவர் படித்து இருந்தால், குறைந்தபட்சம் அது அவருடைய போதனையில் பிரதிபலித்திருக்க வேண்டும், அப்படி இல்லை.

மற்ற பக்தியுள்ள யூதர்களைப் போலவே, இயேசுவும் ஒவ்வொரு ஆண்டும் ஜெருசலேமுக்கு யாத்திரை மேற்கொண்டார் என்பதை அவருடைய பொது வாழ்க்கையிலிருந்து நாம் அறிவோம். இயேசுவின் குழந்தைப் பருவத்தில் கடைசியாக பதிவு செய்யப்பட்ட நிகழ்வு ஜெருசலேம் யாத்திரை. இதிலிருந்து அவர் மறைவான வாழ்க்கையிலும் அவர் யாத்திரை மேற்கொண்டார் என்று நாம் நியாயமாக கருதலாம். அந்த நேரத்திற்கு இந்தியாவிலிருந்து திரும்புவதற்கான ஒரு பயணம் கூட மிகவும் ஆபத்தானது மற்றும் போக்குவரத்து வழிமுறையாக இருந்தாலும் கடினமாக இருக்கும். மேலும், பயணம் மிகவும் விலை உயர்ந்தது, மற்றும் இயேசுவின் குடும்பம் ஏழையாக இருந்தது.

இயேசு தனது சமூகத்தில் தச்சராக அறியப்பட்டார், ஏனெனில் யூத பாரம்பரியத்தில் சிறுவர்கள் தந்தையின் தொழிலைக் கற்றுக்கொள்வது இயல்பான ஒன்று. அவரது உவமைகளில் அதன் பாதிப்பு இருக்கிறது. மணலுக்கு மாறாக ஒரு பாறையில் ஒரு வீட்டைக் கட்டுவதாக அவர் கூறினார் (மத்தேயு 7:24-27). இயேசு தனது இளமைப் பருவத்தை தனது சொந்த சமூகத்தில் கழித்தார் என்பதற்கு இது ஒரு சிறந்த அறிகுறியாகும்.

திருமறையில் ஏராளமான பத்திகள் உள்ளன, மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள் மற்றும் அவரை நம்ப மறுத்தனர் என்றும், ஏனென்றால் அவர் ஒரு தச்சன் மற்றும் அவரை ஏற்றுக்கொள்வதற்கு அவரை நன்கு அறிந்திருந்தார்கள். இயேசு தனது சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் என்பதை இது குறிக்கிறது, அவர் தனது வாழ்நாளில் இந்தியாவில் இருந்திருந்தால் இது சாத்தியமில்லை. (வாசிக்க மத்தேயு 2:23; 13:54-56, லூக்கா 2: 51-52; 4:22)

இயேசு ஏன் தனது சீடர்களிடம் இந்தியா பற்றி பேசவில்லை? ஆரம்பகால பதிவுகள் எதுவும் அத்தகைய பயணத்தை குறிப்பிடவில்லை. யூதத் தலைவர்கள் இயேசுவை விரும்பவில்லை. எனவே அவர்கள் அவரை கண்டனம் செய்தபோது, ​​அவர் ஒரு அயல்நாட்டில் மதம் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொண்டார் என்று அவர்கள் நிச்சயமாக கூறியிருப்பார்கள்.

அவர் யார் என்று அந்த தலைவர்களுக்கும் தெரியும், அவர் யார் என்று மக்களுக்கும் தெரியும்.

இயேசுவே தோரா

இயேசு தோராவில் தேறினவராக ஆக கற்றலில் தனது 12-30 ஆண்டுகள் கழித்தார் என்று அர்த்தம். தோரா யூதர்களின் கைகளில் மட்டுமே கிடைத்தது, அது இந்தியாவில் இல்லை. மேலும் இயேசு ஏதேனும் கற்றுக் கொள்ள நேர்ந்திருக்கும் என்று நாம் சொல்ல முடியாது, ஏனென்றால் அவர் கடவுளின் வார்த்தையாக இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் உருவாக்கியவர், அவருடைய ஞானம் நமக்கு எட்டாத தூரம். அவர் தனது சொந்த படைப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் கடவுளைப் பற்றி நமக்குக் கற்பிக்க வந்தார், அவர் நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்ல வந்தார். இயேசுவே வார்த்தையாகிய தோரா. இந்த வார்த்தைகளின் முழுப்பொருள் உணர மூல மொழியான எபிரேயத்தில் திருமறையை வாசித்தால் மட்டுமே அறிய முடியும்.

நிலைவாழ்வைப் பெறுவது பற்றி ஒரு மனிதன் கேட்டபோது இயேசு தோராவில் இருந்து பதிலளித்ததற்கான உதாரணம் இங்கே.

லூக்கா 18:18-22 —இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான தலைவர் (மத் 19:16-30; மாற் 10:17-31)

18அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம், “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 19அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே! 20 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? விபசாரம் செய்யாதே. கொலை செய்யாதே. களவு செய்யாதே. பொய்ச்சான்று சொல்லாதே. உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். 21 அவர், “இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்றார். 22 இதைக் கேட்ட இயேசு அவரிடம், “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.

இயேசு ‘சம்சாரா’ (முடிவில்லாத மறுபிறப்பு) மற்றும் ‘மோட்ச’த்தை (முடிவில்லாத மறுபிறப்பிலிருந்து விடுதலை) அடைவது எப்படி என்பதை மனிதனுக்கு விளக்கவில்லை, அதற்காகவும் அவர் வரவில்லை. பதிலாக, இயேசு அந்த மனிதனுக்கு எல்லாவற்றையும் விற்று அவரைப் பின்தொடரச் சொன்னார், ஏனென்றால் அவருக்குள் நிலைவாழ்வு இருக்கிறது (யோவான் 3:16).