Simchat Torah שִׂמְחַת תורָה சிம்ஹத் தோரா
இந்த ஆண்டு இன்று அக்டோபர் 7 மாலை தொடங்கி அக்டோபர் 8 மாலை முடிய கொண்டாடப்படுகிறது.
இது தொடர்ச்சியாக வரும் நிகழ்வு. முதலில் Sukkot – סֻכּוֹת – சுக்கோத் பற்றிப் பார்ப்போம்.
சுக்கோத் என்றால் எபிரேய மொழியில் கூடாரம். ஆங்கிலத்தில் நாம் Tabernacle என்று வாசிக்கிறோம்.
யூத நாட்காட்டியின் ஏழாவது மாதமான Tishrei / תִּשְׁרֵי / டிஷ்ரேய் மாதம் 15ம் தேதி இப்பண்டிகை தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டெம்பர் 29 மாலை தொடங்கி அக்டோபர் 6 மாலை முடிய கொண்டாடப்படுகிறது.
நாட்கள்:
Sukkot – סֻכּוֹת – சுக்கோத், இப்பண்டிகையானது Torah / תּוֹרָה / தோராவின்படி ஏழு நாட்கள் மட்டுமே. இஸ்ரயேலில் இப்பண்டிகையானது எட்டு நாட்களும், உலகம் முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த யூதர்களால் ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது.
எட்டாம் நாள் – ஷெமினி அட்ஸ்சேரேட் / שְׁמִינִי עֲצֶרֶת / Shemini Atzeret அந்த ஆண்டு தோரா / תּוֹרָה / Torah வாசிப்பை நிறைவு செய்து கொண்டாடப்படுகிறது.
ஒன்பதாம் நாள் – சிம்ஹத் தோரா / שִׂמְחַת תּוֹרָה / Simchat Torah என்று புதிய ஆண்டில் தோரா வாசிப்பை தொடங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
இஸ்ரயேலில் சுக்கோத் பண்டிகையின் தொடர்ச்சியாக எட்டாம் நாளன்று ஷெமினி அட்ஸ்சேரேட் மற்றும் சிம்ஹத் தோரா கொண்டாடப்படுகிறது.
தோரா வாசிப்பு குறித்த மேலதிக தகவல்களுக்கு Weekly Torah என்னும் வலைப்பதிவைப் பார்க்கவும்.
நாம் லேவியராகமம் 23:33ல் சுக்கோத் குறித்து, கர்த்தர், மோஷேயிடம் / מֹשֶׁה / Moses பேசுவதை நாம் வாசிக்கிறோம்.
கர்த்தர் நிறுவிய ஏழு பண்டிகைகளில் இதுவே இறுதியானது.
ஷாலோஷ் ரெகாலீம் / Shalosh Regalim / שלוש רגלים –
இதன் பொருள் பின் வருமாறு ஷாலோஷ் என்றால் மூன்று ரெகாலீம் என்றால் கால்நடை அதாவது அன்றைய நாட்களில் இஸ்ரயேல் மக்கள் வேதாகமத்தின்படி ירושלים / Yerushalayim / எருஷலாயீமுக்கு மேற்கொள்ளும் மூன்று புனித பயணங்களில் ஒன்று இப்பண்டிகை சமயமாகும். மீதம் இரு சமயங்கள் பெசாஹ் பண்டிகை மற்றும் ஷவுஓட் பண்டிகை ஆகும்.
இப்பண்டிகை சமயம் யூத மக்கள் தாம் கண்ட விளைச்சலில் இருந்து பழங்கள் மற்றும் இலைகள் கொண்டு தற்காலிக கூடாரம் அமைத்து ஏழு நாட்களும் அதில் உண்டு உறங்கி மகிழ்வர்.
இதன் முதற் பொருள் என்னவென்றால், இஸ்ரயேல் மக்கள் எகிப்து அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று, நாற்பது வருட வனாந்தர பயணத்தில் எளிதில் முறிகிற இருப்பிடம் அமைத்து வாழ்ந்த நாட்களை நினைவு கொள்வது.
மற்றொரு பொருள், இக்கூடாரமானது திருமணப் பந்தலைக் குறிக்கிறது. அன்றைய நாட்களில் திருமண நிகழ்வுகள் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் என்பதை நாம் கவனித்தால் சுக்கோத் ஒரு திருமணமே.
நாம் நம்முடைய புருஷரான கர்த்தரோடு இணைந்து, மகிழ்ந்து, வாசம் செய்யவிருக்கும் காலத்தை நினைவூட்டும் பண்டிகை இது.
Simchat Torah שִׂמְחַת תורָה சிம்ஹத் தோரா 2023 – இந்த ஆண்டு எமுனா அவோடா மிகுந்த மகிழ்ச்சியோடும் கர்த்தரின் ஆசிர்வாதத்தோடும் இனி வரும் தலைமுறை பயன் பெறும் வகையில் நம் தாய்மொழியில் முதன்முதலாக எபிரேயம்-தமிழ் மொழியில் இணைவேதாகமம் (Parallel Bible) வெளியிடுகிறது. தற்சமயம் பழைய உடன்படிக்கை (ஏற்பாடு) மட்டும் வழங்கப்படும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எபிரேய வசனங்களை சொடுக்கினால் அது யூத ரபியின் குரலில் ஒலிக்கும். சங்கீதங்கள் மற்றும் நீதிமொழிகள் இந்த வசதி இடம் பெறுகிறது. மற்ற புத்தகங்களில் அதிகார தலைப்பை சொடுக்கினால் முழு அதிகாரமும் ஒலிக்கும். தனித்த வசன ஒலிப்பு படிப்படியாக நீட்டிக்கப்படும்.
இந்த முயற்சிக்கு அனைவரும் முழு ஆதரவு தர, இறை வேண்டல் செய்ய தாழ்மையோடு வேண்டுகிறோம்.
ஷலோம்.
பரிசுத்த 'இணை'ய ஒலி வேதாகமம்
TANAKH - Torah - Neviim - Ketuvim
கேட்கவும் கீழ்ப்படியவும் மேலே உள்ள இணைப்புகளை சொடுக்கவும்!
Click above links to hear and obey!