பூரீம்

பூரீம் 2023 மார்ச் 6 திங்கட்கிழமை மாலையில் தொடங்கி மார்ச் 7 செவ்வாய்க்கிழமை மாலையில் முடிவடைகிறது.

பூரீமின் கதை எஸ்தரின் புத்தகத்தில் (எஸ்தர் மெகில்லாவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மெகில்லா என்றால் Scroll / מְגִלָּה / சுருள் என்று பொருள்.

பூரீம் பண்டிகை Mordecai / מָרְדֳּכַי  / மொர்டகய் கட்டளையிட்ட ஒரு வழக்கம் என்று எஸ்தர் 9:20-22 வசனங்கள் மூலம் அறிய முடிகிறது. லேவியராகமம் 23ல் வரும் கர்த்தரின் விருந்துகளில் ஒன்றாக பூரீம் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவு கொள்ளவும்.

கிமு 450ல் யூத மக்கள் பெர்சியாவில் சிறைபிடிக்கப்பட்டபோது இந்த நிகழ்வுகள் நடந்தன.

பூரீம் கதை

திருமறையில் உள்ள Estherאֶסְתֵּר / எஸ்தேர் புத்தகத்தின்படி, ஷூஷன் நகரத்தின் யூத மக்கள் Haman / הָמָן / ஹாமானால் அச்சுறுத்தப்பட்டனர். அவர் Ahasuerus / אֲחַשְׁוֵרוֹשׁ / அஹஷ்வேரோஷ் ராஜாவின் ஒரு பிரதம மந்திரி ஆவார். ராஜாவை அனைத்து யூதர்களையும் கொல்லும்படி சமாதானப்படுத்துகிறார் (ஏனென்றால் யூதரான மொர்டகய் ஹாமானுக்கு தலைவணங்க மறுத்தார்). ஹாமான் தனது திட்டத்தை நிறைவேற்றும் தேதியைத் தீர்மானிக்கச் சீட்டுகளை(Lots) போடுகிறார். அதனால் பூரீமுக்கு, Feast of Lots என்ற பெயர் உண்டு. ஆடார் 13 ஆம் தேதி. இறுதியில், யூதர்கள் ராணி எஸ்தேர், மொர்டகயின் உடன்பிறந்தாரின் மகள் (மற்றும் வளர்ப்பு மகள்) மூலம் காப்பாற்றப்படுகிறார்கள், அவர் அஹஷ்வேரோஷை மணந்தார் (அவர் தனது முதல், கலகக்கார மனைவியான  Vashti / וַשְׁתִּי / வஷ்டீயை வெளியேற்றிய பிறகு). அஹஷ்வேரோஷ் தன் மனைவி எஸ்தேர் யூதர் என்று அறிந்ததும், ஹாமானின் ஆணையை மாற்ற முடிவு செய்கிறான், யூதர்கள் கொல்லப்படுவதற்குப் பதிலாக, ஹாமானும் அவனுடைய மகன்களும் மற்ற எதிரிகளும் கொல்லப்படுகிறார்கள்.

ஷப்பாத்

பூரீம் பண்டிகைக்கு முன்பு வரும் ஷப்பாத்தில், உபாகமம் 25:17–19 இருந்து ஒரு சிறப்பு வாசிப்பு வழக்கமான வேதப் பகுதியுடன் கூடுதலாக ஆய்வு செய்யப்படுகிறது. இது ஸாகோர் (நினைவாக) வாசிப்பு என்றும் அழைக்கப்படுகிறது, ஏனென்றால் அமலேக்கின் துன்மார்க்கத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற கடவுளின் கட்டளையை இது விவரிக்கிறது.

நிர்மூலமாக்கத் திட்டமிட்டவர், யூத எதிர்ப்பு மனம் படைத்த ஹாமான், அமலேக்கின் வழித்தோன்றல் என்று நம்பப்படுகிறது. அவர் என்ன செய்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அமலேக்கை நினைவில் கொள்வதற்கான இந்த வேதப் பகுதிகள் பூரீமுக்கு முன் ஷப்பாத்தில் படிக்கப்படுகின்றன – இது பெர்சியாவில் யூத மக்கள் நிர்மூலமாக்குவதிலிருந்து காப்பாற்றி உதவிய எஸ்தேரின் வெற்றியைக் கொண்டாடுகிறது.

எனவே, இந்த ஷப்பாத், ஷப்பாத் ஸாகோர் (நினைவுறும் ஷப்பாத்) என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் எபிரேய மாதமான ஆடாரைச் சுற்றியுள்ள நான்கு சிறப்பு வாசிப்புகளில் இரண்டாவதாகும்.

திருமறைக் குறியீட்டியல்

மொர்டகய் தனது மக்களுக்காக அழுதார், தன்னைத் தாழ்த்தி, தனது உயிரைப் பணயம் வைத்தார். இதன் விளைவாக, அவர் தனது எதிரிகளை வென்றார், அரச ஆடைகளை அணிந்து, ராஜாவுக்கு அடுத்தபடியாக இருந்தார்.

மேசியா இயேஷுஅ ஜெருசலேமை நினைத்து அழுதார், அவமானகரமான மரணத்திற்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார், இப்போது கடவுளின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.

முதல் மாதமான Nisan / נִיסָן / நீசான் சமயம் எஸ்தர் மூன்று நாட்கள் உபவாசம் இருந்து, மூன்றாம் நாள் (17ம் தேதி) ராஜாவுக்கு முன்பாகப் போக எழுந்தாள்.

அது போல் நீசான் பதினேழாம் தேதி யூதர்கள் கர்த்தரின் முதற் பலன்களாக எகிப்திலிருந்து விடுதலைப் பயணத்தைத் தொடங்கினர்.

இவை இரட்சிப்பு மற்றும் முன்னறிவிக்கப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுதல் எனும் காலத்தின் நிழலாகப் பார்க்கப்படுகிறது.

எஸ்தர் புத்தகத்தில் கடவுள் பெயரிடப்படவில்லை என்றாலும் – இஸ்ரயேலின் கடவுள் தம்முடைய உடன்படிக்கை மக்களைக் கண்காணிக்கும் வாக்குறுதிக்கு எவ்வாறு உண்மையுள்ளவர் என்பதை நிரூபிக்கிறார்.

சில ரபிகள் பூரிமுக்கு ஒரு மேசியானிய  அம்சத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருவருடைய பிரச்சனைகளிலிருந்து விடுதலை மற்றும் ஓய்வு நாள் என்பதால், பூரிம் இயற்கையாகவே மேசியா இயேஷுஅவின் நாட்களில் அதிக ஓய்வு நாளுடன் தொடர்புடைய நாளாக ஆயிற்று.