பெந்தெகோஸ்தலிசம் என்றால் என்ன?
பெந்தெகோஸ்தலிசம் / Pentecostalism என்பது திருச்சபையில் உள்ள அனைத்து வரங்களுடனும் பரிசுத்த ஆவியின் இருப்பு மற்றும் செயல்பாட்டில் உள்ள நம்பிக்கையை மையமாகக் கொண்ட ஒரு இயக்கம் ஆகும். பெந்தெகோஸ்தேக்களுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய குழுக்கள் கரிஸ்மாடிக்ஸ் / Charismatics மற்றும் மூன்றாம் அலை / Third Wave அல்லது நியோ கரிஸ்மாடிக்ஸ் / Neo Charismatics.
பெந்தெகோஸ்தே சபைகள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அந்நியபாஷைகளில் பேசும் வரத்தை ஆதாரமாக வலியுறுத்துகையில், புதிய மூன்றாம் அலை இயக்கங்கள் “அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள்” மற்றும் தீர்க்கதரிசனம், வியாதிகளை குணப்படுத்துதல் போன்ற பரிசுகளை முதன்மையாக சுயாதீன தேவாலயங்கள் / Independent Churches மற்றும் அமைப்புகள் மூலம் வலியுறுத்துகிறது.
நம் தமிழ் கிறித்துவ உலகில் ஆய்வு நோக்கில் சிறப்பான நூல்களை எளிய வடிவில், சிறிய தொகையில் மறைந்து போனவற்றை அல்லது அனைவருக்கும்தான் எளிதில் கிடைக்காத செய்திகளை, தகவல்களை கொண்டு சேர்க்கும் பணியில் பேரார்வம் கொண்டு செயல்பட்டு வரும் போதகர் செ. டேவிஸ் அவர்களின் மற்றுமொரு புத்தாண்டு பரிசாக, தேவையான படைப்பாக மலர்ந்துள்ளது பெந்தெகொஸ்தே கையேடு என்னும் நூல். இந்நூலின் ஆசிரியர் Rev. T. Sam M.A. B.D. M.Th. போதகர்கள் மட்டுமல்லாது அனைத்து சபை விசுவாசிகளும் இந்நூலை வாங்கிப் படித்து இறையியல் தெளிவு பெற வேண்டுகிறோம்.
– எமுனா அவோடா
பெந்தெகொஸ்தே போதகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
பெந்தெகொஸ்தே கையேடு – PENTECOSTAL HANDBOOK என்ற உபதேச வரலாற்று நூலை வாங்கிபடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உபதேசம் சீர்கெட்டு போன இந்த நாள்களில் இப்படிப்பட்ட நூல் மீண்டும் வேதாகம உபதேசத்தை
எடுத்து நிறுத்தும் பணியில் முக்கியமான பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை!
இந்நூலாசிரியர் Rev. T. Sam M.A. B.D. M.Th. அவர்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக சபை மேய்ப்பராகவும், வேதாகம கல்லூரியில் முதல்வராகவும் இருந்து வருகிறார்.
செராம்பூர் பல்கலைக்கழகத்தில் இறையியல் கல்வியை முடித்தவர்.
பெந்தெகொஸ்தே கையேடு – PENTECOSTAL HANDBOOK புத்தகம் – தமிழ் கடின அட்டைப் பதிப்பு ஆகும்
பெந்தெகொஸ்தே கையேடு புத்தகத்தின் உள்ளடக்கம்
முகவுரை
Bibliography
Price / விலை – ரூ600/-
Publisher / பதிப்பாளர் – தமிழ் வேதாகம ஆய்வு நிறுவனம்
Tamil Research Publishers – Pastor C. Davis அவர்களின் பெரு முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெந்தெகொஸ்தே கையேடு பக்கங்கள் சில





