பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Isaiah ஏசாயா יְשַׁעְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
ஏசாயா 48 | Isaiah 48
Israel’s Stubbornness
1 இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.
1 “Listen to this, O house of Jacob, you who are called by the name of Israel, who have descended from the line of Judah, who swear by the name of the LORD, who invoke the God of Israel—but not in truth or righteousness—
1 யாக்கோபின் வீட்டாரே! இதற்குச் செவிகொடுங்கள்; நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறீர்கள்; யூதாவெனும் ஊற்றினின்று தோன்றியுள்ளீர்கள்; ஆண்டவரின் பெயரால் ஆணையிடுகின்றீர்கள்; இஸ்ரயேலின் கடவுளைப் புகழ்கின்றீர்கள். ஆயினும், உண்மையுடனும் நேர்மையுடனும் இவற்றைச் செய்வதில்லை.
2 அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள்.
2 who indeed call yourselves after the holy city and lean on the God of Israel; the LORD of Hosts is His name.
2 'திரு நகரினர்' என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்கின்றீர்கள்; இஸ்ரயேலின் கடவுளையே சார்ந்து நிற்கின்றீர்கள்; 'படைகளின் ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்!
3 பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.
3 I foretold the former things long ago; they came out of My mouth and I proclaimed them. Suddenly I acted, and they came to pass.
3 பண்டைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவித்தேன்; என் வாய் மொழிந்தவற்றை அவர்கள் கேட்கச் செய்தேன்; திடீரெனச் செயல்பட்டேன்; யாவும் நிகழ்ந்தன.
4 நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்.
4 For I knew that you are stubborn; your neck is iron and your forehead is bronze.
4 நீ பிடிவாத குணமுடையவன்; உன் கழுத்து இரும்புத் தசைநார்; உன் நெற்றி வெண்கலம்; இதை நான் அறிவேன்.
5 ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.
5 Therefore I declared it to you long ago; I announced it before it came to pass, so that you could not claim, ‘My idol has done this; my carved image and molten god has ordained it.’
5 எனவே அவற்றை முன்கூட்டியே உனக்கு அறிவித்தேன்; அவை நிகழ்வதற்குமுன் உனக்குத் தெரியப்படுத்தினேன்; 'என் சிலை அவற்றைச் செய்தது; நான் வார்த்த வடிவமும் செதுக்கிய உருவமும் அவற்றைக் கட்டளையிட்டன' என்று நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.
6 அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.
6 You have heard these things; look at them all. Will you not acknowledge them? From now on I will tell you of new things, hidden things unknown to you.
6 முன்பு நீ கேட்டாய்; இப்போது அவை அனைத்தையும் காண்கின்றாய்; அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ? இதுமுதல் புதியனவற்றையும் நீ அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்.
7 அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை.
7 They are created now, and not long ago; you have not heard of them before today. So you cannot claim, ‘I already knew them!’
7 பண்டைக்காலத்தில் அல்ல, அவை இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டன; இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை; அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை; 'அவைபற்றி எனக்குத் தெரியும்' என நீ கூறவும் முடியாது.
8 நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்றும் பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.
8 You have never heard; you have never understood; for a long time your ears have not been open. For I knew how deceitful you are; you have been called a rebel from birth.
8 உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை; முன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை; ஏனெனில், நீ 'ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்தே கலகக்காரன்' என்று பெயர்பெற்றவன்; இதை நான் உறுதியாய் அறிவேன்.
9 என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.
9 For the sake of My name I will delay My wrath; for the sake of My praise I will restrain it, so that you will not be cut off.
9 என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்; என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல், உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.
10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
10 See, I have refined you, but not as silver; I have tested you in the furnace of affliction.
10 நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
11 என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
11 For My own sake, My very own sake, I will act; for how can I let Myself be defamed? I will not yield My glory to another.
11 என்பொருட்டே, என்னை முன்னிட்டே அதைச் செய்கின்றேன்; என் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்? என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.
Deliverance Promised to Israel
12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே.
12 Listen to Me, O Jacob, and Israel, whom I have called: I am He; I am the first, and I am the last.
12 நான் அழைத்திருக்கும் யாக்கோபே, இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு; நானே அவர்; தொடக்கமும் நானே; முடிவும் நானே.1
13 என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
13 Surely My own hand founded the earth, and My right hand spread out the heavens; when I summon them, they stand up together.
13 என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது; என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது. நான் அழைக்கும்போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.
14 நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?
14 Come together, all of you, and listen: Which of the idols has foretold these things? The LORD’s chosen ally will carry out His desire against Babylon, and His arm will be against the Chaldeans.a
14 நீங்கள் அனைவரும் கூடிவந்து கேளுங்கள்; அவர்களுள் இவற்றை அறிவித்தவர் யார்? ஆண்டவரின் அன்புக்குரியவன், பாபிலோனில் அவர் விரும்பியதைச் செய்வான்; அவன் புயம் கல்தேயருக்கு எதிராக எழும்.
15 நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.
15 I, even I, have spoken; yes, I have called him. I have brought him, and he will succeed in his mission.
15 நான், நானேதான் அதைக் கூறினேன்; நான் அவனை அழைத்தேன்; நானே அவனைக்கொண்டு வந்தேன், அவன் தன்வழியில் வெற்றி காண்பான்.
16 நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
16 Come near to Me and listen to this: From the beginning I have not spoken in secret; from the time it happened, I was there.” And now the Lord GOD has sent me, accompanied by His Spirit.
16 என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்; தொடக்கமுதல் நான் மறைவாகப் பேசியதில்லை; அது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன். இப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர் என்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.
17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
17 Thus says the LORD your Redeemer, the Holy One of Israel: “I am the LORD your God, who teaches you for your benefit, who directs you in the way you should go.
17 இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!
18 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
18 If only you had paid attention to My commandments, your peace would have been like a river, and your righteousness like waves of the sea.
18 என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.
19 அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.
19 Your descendants would have been as countless as the sand, and your offspring as numerous as its grains;b their name would never be cut off or eliminated from My presence.”
19 உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.
20 பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள் பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.
20 Leave Babylon! Flee from the Chaldeans! Declare it with a shout of joy, proclaim it, let it go out to the ends of the earth, saying, “The LORD has redeemed His servant Jacob!”
20 பாபிலோனிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்; கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்; ஆரவாரக் குரலெழுப்பி இதை முழங்கி அறிவியுங்கள்; உலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள்; 'தம் ஊழியன் யாக்கோபை ஆண்டவர் மீட்டுவிட்டார்' என்று சொல்லுங்கள்.2
2 திவெ 18:4.
21 அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.
21 They did not thirst when He led them through the deserts; He made water flow for them from the rock; He split the rock, and water gushed out.
21 அவர் அவர்களைப் பாலைநிலங்களில் நடத்திச் சென்றபோது அவர்கள் தாகமடையவில்லை; பாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்; பாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது.
22 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
22 “There is no peace,” says the LORD, “for the wicked.”
22 'தீயோர்க்கு அமைதி இல்லை' என்கிறார் ஆண்டவர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
14 a That is, the Babylonians; also in verse 20
19 b Literally like the sand, and your offspring like its grains
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.