பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Samuel 2 சாமுவேல் שְׁמוּאֵל ב
2 சாமுவேல் 19 | 2 Samuel 19
Joab Reproves David
1 இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
1 Then it was reported to Joab, “The king is weeping and mourning over Absalom.”
1 அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2 ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்தஜெயம் ஜனத்திற்கெல்லம் துக்கமாய் மாறிற்று.
2 And that day’s victory was turned into mourning for all the people, because on that day they were told, “The king is grieving over his son.”
2 'அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்' என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று.
3 யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிவறர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
3 So they returned to the city quietly that day, as people steal away in humiliation after fleeing a battle.
3 போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப்போன்று அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.
4 ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
4 But the king covered his face and cried out at the top of his voice, “O my son Absalom! O Absalom, my son, my son!”
4 அரசர் தம் முகத்தை மூடிக்கொண்டு, "என் மகன் அப்சலோமே! அப்சலோமே!, என் மகனே! என் மகனே!" என்று குரலெழுப்பி அழுதுகொண்டிருந்தார்.
5 அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுதினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
5 Then Joab went into the house and said to the king, “Today you have disgraced all your servants who have saved your life and the lives of your sons and daughters, of your wives, and of your concubines.
5 அப்போது யோவாபு அரசர் இருந்த வீட்டிற்குள் வந்து அவரை நோக்கி, "உம் உயிரையும், உம் புதல்வர் புதல்வியின் உயிரையும், உம் மனைவியர், வைப்பாட்டியரின் உயிரையும் காத்த உம் பணியாளர் அனைவரையும் இன்று தாழ்வடையச் செய்துவிட்டீர்.
6 அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
6 You love those who hate you and hate those who love you! For you have made it clear today that the commanders and soldiers mean nothing to you. I know today that if Absalom were alive and all of us were dead, it would have pleased you!
6 உம்மை வெறுப்பவருக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீர் வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு ஒரு பொருட்டில்லை என்பதை இன்று எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன்.
7 இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப்பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்றான்.
7 Now therefore get up! Go out and speak comfort to your servants, for I swear by the LORD that if you do not go out, not a man will remain with you tonight. This will be worse for you than all the adversity that has befallen you from your youth until now!”
7 இப்போது எழுந்திரும். வெளியே சென்று உம் பணியாளர் மகிழ்ச்சியுறுமாறு பேசும். ஏனெனில், ஆண்டவர்மேல் ஆணை! நீர் வெளியே வராவிட்டால் ஒரு மனிதனும் இன்றிரவு உம்மோடு தங்கமாட்டான். உம் இளமை முதல் இன்றுவரை உமக்கு ஏற்பட்ட அனைத்துத் தீமைகளைவிடவும் இந்தத் தீமை கடுமையாக இருக்கும்" என்று கூறினார்.
David Restored as King
8 அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
8 So the king got up and sat in the gate, and all the people were told: “Behold, the king is sitting in the gate.” So they all came before the king. Meanwhile, the Israelites had fled, each man to his home.
8 அரசர் எழுந்து வாயிலில் அமர, "இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார்" என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அனைவரும் அவர்முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியோடினர்.
9 இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார்; இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.
9 And all the people throughout the tribes of Israel were arguing, “The king rescued us from the hand of our enemies and delivered us from the hand of the Philistines, but now he has fled the land because of Absalom.
9 அப்போது இஸ்ரயேலின் குலங்களின் மக்கள் அனைவரிடையே இவ்வாறு வாக்கு வாதம் ஏற்பட்டது: "நம் எதிரிகளின் கையினின்று அரசர் நம்மை விடுவித்தார். பெலிஸ்தியரின் கையினின்று நம்மை விடுவித்தவரும் அவரே. அப்சலோமின் பொருட்டு அவர் இப்போது நாட்டினின்று வெளியேறியுள்ளார்.
10 நமக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணிவைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவைத்திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக்கொண்டார்கள்
10 But Absalom, the man we anointed over us, has died in battle. So why do you say nothing about restoring the king?”
10 நம்மை ஆளுமாறு நாம் திருப்பொழிவு செய்த அப்சலோமோ போரில் இறந்து விட்டான். இனி நீங்கள் அரசரைத் திருப்பியழைத்து வராமல் வாளாயிருப்பதேன்?"
11 இப்படி இஸ்ரவேலர் எல்லாரும்பேசிகொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவருக்குக் கேள்வியானபடியினால், தாவீதுராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?
11 Then King David sent this message to Zadok and Abiathar, the priests: “Say to the elders of Judah, ‘Why should you be the last to restore the king to his palace, since the talk of all Israel has reached the king at his quarters?
11 அரசர் தாவீது குரு சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஆளனுப்பிக் கூறியது: "யூதாவின் பெரியோர்களிடம் இவ்வாறு கேளுங்கள்: அரசரைத் தம்அரண்மனைக்குத் திருப்பியழைப்பதில் நீங்கள் ஏன் பின்வாங்க வேண்டும்? ஏனெனில், இஸ்ரயேலர் அனைவரின் பேச்சும் அரசரின் வீட்டை எட்டிவிட்டது.
12 நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.
12 You are my brothers, my own flesh and blood. So why should you be the last to restore the king?’
12 நீங்கள் என் சகோதரர்கள்; நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்; அரசரைத் திருப்பி அழைப்பதில் நீங்கள் ஏன் பின்தங்க வேண்டும்?
13 நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.
13 And say to Amasa, ‘Aren’t you my flesh and blood? May God punish me, and ever so severely, if from this time you are not the commander of my army in place of Joab!’”
13 அமாசாவிடம் இவ்வாறு கூறுங்கள்: 'நீ என் எலும்பும் சதையும் அல்லவா? யோவாபுக்குப் பதிலாக என்முன்பாக எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால், கடவுள் என்னைத் தக்கவாறும், அதற்கு மேலும் தண்டிக்கட்டும்.'
14 இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
14 So he swayed the hearts of all the men of Judah as though they were one man, and they sent word to the king: “Return, you and all your servants.”
14 யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, "நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள்" என்று கூறினர்.
15 ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார்: ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால்மட்டும் வந்தார்கள்.
15 So the king returned, and when he arrived at the Jordan, the men of Judah came to Gilgal to meet him and escort him across the Jordan.
15 அரசர் திரும்பி யோர்தான்வரை வந்தார். யூதாவினர் கில்கால்வரை சென்று அரசரைச் சந்தித்து அவர் யோர்தானைக் கடக்கச் செய்தனர்.
Shimei Pardoned
16 பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.
16 Then Shimei son of Gera, a Benjamite from Bahurim, hurried down with the men of Judah to meet King David,
16 பகூரிமைச் சார்ந்த பென்யமினியனான கேராவின் மகன் சிமயி யூதாவினரோடு அரசர் தாவீதைச் சந்திக்க விரைந்தான்.
17 அவனோடே பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், ஆண்டவனுடைய பதினைந்து குமாரரும், அவனுடைய இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய்க் கடந்துபோனார்கள்.
17 along with a thousand men of Benjamin, as well as Ziba the steward of the house of Saul and his fifteen sons and twenty servants. They rushed down to the Jordan before the king
17 அவனோடு பென்யமினியர் ஆயிரம்பேர் இருந்தனர். சவுல் வீட்டுப் பணியாள் சீபா தன் பதினைந்து புதல்வரோடும் இருபது பணியாளரோடும் அங்கே இருந்தான். அவர்கள் அரசர் வருமுன் யோர்தானுக்கு விரைந்தனர்.
18 அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
18 and crossed at the ford to carry over the king’s household and to do what was good in his sight. When Shimei son of Gera crossed the Jordan, he fell down before the king
18 அரச குடும்பத்தினரைக் கொண்டு வரவும், அரசரின் ஏவல்களைச் செய்யவும் அவர்கள் துறைவழி ஆற்றைக் கடந்தனர். அரசர் யோர்தானைக் கடக்கவிருக்கையில் கேராவின் மகன் சிமயி அவர்முன் விழுந்தான்.1
19 ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.
19 and said, “My lord, do not hold me guilty, and do not remember your servant’s wrongdoing on the day my lord the king left Jerusalem. May the king not take it to heart.
19 "தலைவரே! என் குற்றத்தைப் பொருட்படுத்தாதீர்! என் தலைவராம் அரசர் எருசலேமை விட்டுச் சென்றபோது உம் பணியாளன் செய்த தீமையை நினைவுகூராதேயும்! அரசர் அதை மனத்தில் கொள்ளாமல் இருப்பாராக!
20 உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்.
20 For your servant knows that I have sinned, so here I am today as the first of all the house of Joseph to come down to meet my lord the king.”
20 தான் பாவம் செய்துள்ளதைத் தங்கள் பணியாளன் அறிவான். இதோ இன்று யோசேப்பின் வீட்டார் அனைவரிலும் முதல் ஆளாக, என் தலைவராம் அரசரைச் சந்திக்க நான் வந்திருக்கிறேன்" என்று அவன் அரசரிடம் கூறினான்.
21 அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
21 But Abishai son of Zeruiah said, “Shouldn’t Shimei be put to death for this, because he cursed the LORD’s anointed?”
21 அப்போது செரூயாவின் மகன் அபிசாய், "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா?" என்று கேட்டான்.
22 அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
22 And David replied, “Sons of Zeruiah, what have I to do with you, that you should be my adversaries today? Should any man be put to death in Israel today? Am I not indeed aware that today I am king over Israel?”
22 அதற்கு தாவீது "செரூயாவின் புதல்வர்களே! இது பற்றி உங்களுக்கு என்ன? இன்று நீங்கள் எனக்கு எதிரிகள் போல் நடந்துகொள்வது ஏன்? இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்பட வேண்டுமோ? இன்று நான் இஸ்ரயேலின் அரசர் என்பது எனக்குத் தெரியாதா?" என்று கூறினார்.
23 ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
23 So the king said to Shimei, “You shall not die.” And the king swore an oath to him.
23 பிறகு அரசர் சிமயியை நோக்கி, "நீ சாக மாட்டாய்" என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.
Mephibosheth Excused
24 சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.
24 Then Mephibosheth, Saul’s grandson, went down to meet the king. He had not cared for his feet or trimmed his mustache or washed his clothes from the day the king had left until the day he returned safely.
24 சவுலின் பேரன் மெபிபோசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டுச் சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களைக் கழுவவில்லை; தாடியைத் திருத்தவில்லை; தன் ஆடைகளையும் வெளுக்கவுமில்லை.2
2 2 சாமு 9:1-13; 16:1-4.
25 அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டுவருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடுகூட வராமல்போனது என்ன என்று கேட்டான்.
25 And he came from Jerusalem to meet the king, who asked him, “Mephibosheth, why did you not go with me?”
25 அவன் எருசலோமில் அரசரைச் சந்திக்க வந்தபோது, அரசர் அவனை நோக்கி, "மெபிபோசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை?' என்று வினவினார்.
26 அதற்கு அவன் ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம்போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
26 “My lord the king,” he replied, “because I am lame, I said, ‘I will have my donkey saddleda so that I may ride on it and go with the king.’ But my servant Ziba deceived me,
26 அதற்கு அவன், "என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றிவிட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், 'நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன்' என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.
27 அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.
27 and he has slandered your servant to my lord the king. Yet my lord the king is like the angelb of God, so do what is good in your eyes.
27 அவனோ உம் அடியானைப்பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால், என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்படுவதையே செய்யும்.
28 ராஜாவாகிய என் ஆண்டவனுக்குமுன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமதுபந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.
28 For all the house of my grandfather deserves death from my lord the king, yet you have set your servant among those who eat at your table. What further right, then, do I have to keep appealing to the king?”
28 என் தலைவராம் அரசரின் பார்வையில் என் தந்தையின் குடும்பத்தார் அனைவரும் சாவைத்தவிர வேறு எதற்கும் உரியவர் அல்லர்! இருப்பினும், உம் அடியானை உம்மோடு உணவருந்துபவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டீர்! இனி அரசரிடம் மன்றாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று சொன்னான்.
29 அப்பொழுது ராஜா அவனைப்பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
29 The king replied, “Why say any more? I hereby declare that you and Ziba are to divide the land.”
29 அதற்கு அரசர், "உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேனே" என்று அவனிடம் சொன்னார்.
30 அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
30 And Mephibosheth said to the king, “Instead, since my lord the king has safely come to his own house, let Ziba take it all!”
30 மெபிபோசேத்து மறுமொழியாக, "இல்லை, அவனே அனைத்தையும் எடுத்துக்கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்குப் போதும்!" என்று அரசரிடம் கூறினான்.
David’s Kindness to Barzillai
31 கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தான்.
31 Now Barzillai the Gileadite had come down from Rogelim to cross the Jordan with the king and send him on his way from there.
31 கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரைஅங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்தானைக் கடந்து வந்தார்.3
32 பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரியமனுஷனாயிருந்தான்.
32 Barzillai was quite old, eighty years of age, and since he was a very wealthy man, he had provided for the king while he stayed in Mahanaim.
32 பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்; எண்பது வயதினர்; பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்தபோது அவரின் தேவைகளைக் கவனித்துக் கொண்டவர்.
33 ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.
33 The king said to Barzillai, “Cross over with me, and I will provide for you at my side in Jerusalem.”
33 அரசர் பர்சில்லாயிடம் "இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிரும். நான் உம் தேவைகளைக் கவனித்துக் கொள்வேன்" என்றான்.
34 பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
34 But Barzillai replied, “How many years of my life remain, that I should go up to Jerusalem with the king?
34 அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது: "அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?
35 இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
35 I am now eighty years old. Can I discern what is good and what is not? Can your servant taste what he eats or drinks? Can I still hear the voice of singing men and women? Why should your servant be an added burden to my lord the king?
35 இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது. நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? பாடகர் பாடகியரின் குரலைக் கேட்டு மகிழ என்னால் இயலுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?
36 அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
36 Your servant could go with the king only a short distance past the Jordan; why should the king repay me with such a reward?
36 உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?
37 நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
37 Please let your servant return, that I may die in my own city near the tomb of my father and mother. But here is your servant Chimham. Let him cross over with my lord the king, and do for him what is good in your sight.”
37 உம் பணியாளனைப் போகவிடும். நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்."
38 அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
38 The king replied, “Chimham will cross over with me, and I will do for him what seems good in your sight, and I will do for you whatever you desire of me.”
38 அப்பொழுது அரசர், "கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விரும்பினாலும் நான் உமக்குச் செய்வேன்" என்று கூறினார்.
39 ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
39 So all the people crossed the Jordan, and then the king crossed over. The king kissed Barzillai and blessed him, and Barzillai returned home.
39 பிறகு, மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோர்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்குத் திரும்பினார்.
40 ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதிஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,
40 Then the king went on to Gilgal, and Chimham crossed over with him. All the troops of Judah and half the troops of Israel escorted the king.
40 அரசர் கில்காலுக்குக் கடந்து சென்றார். கிம்காமும் அவரோடு கடந்து சென்றான். யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலில் பாதிப்பேரும் அரசரைக் கொண்டுவந்து விட்டனர்.
Contention over the King
41 இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.
41 Soon all the men of Israel came to the king and asked, “Why did our brothers, the men of Judah, take you away secretly and bring the king and his household across the Jordan, together with all of David’s men?”
41 உடனே இஸ்ரயேலர் அனைவரும் அரசரிடம் வந்து, "எங்கள் சகோதர்களான யூதாவினர் அரசரையும் அவர் வீட்டாரையும் அவர் ஆள்கள் அனைவரையும் திருட்டுத்தனமாய்க் கொண்டுவந்து யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்?" என்று கேட்டார்கள்.
42 அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே எதையாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.
42 And all the men of Judah replied to the men of Israel, “We did this because the king is our relative. Why does this anger you? Have we ever eaten at the king’s expense or received anything for ourselves?”
42 யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலருக்கு மறுமொழியாக, "அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப் பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா" என்றார்கள்.
43 இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச்சொன்னவர்கள் நாங்களல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.
43 “We have ten shares in the king,” answered the men of Israel, “so we have more claim to David than you. Why then do you despise us? Were we not the first to speak of restoring our king?” But the men of Judah pressed even harder than the men of Israel.
43 இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, "எங்களுக்கு அரசரிடம் பத்துப் பங்குகள் உண்டு. மேலும், தாவீதிடம் உங்களைவிட எங்களுக்கு அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகின்றீர்கள்? எங்கள் அரசரைத் திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா!" என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினரின் பேச்சு கடுமையாக இருந்தது.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
26 a LXX, Syriac, and Vulgate Saddle a donkey for me ; Hebrew I will saddle a donkey for myself
27 b Or Angel
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.