பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Samuel 2 சாமுவேல் שְׁמוּאֵל ב
2 சாமுவேல் 22 | 2 Samuel 22
David’s Song of Deliverance (Psalm 18:1–50)
1 கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
1 And David sang this song to the LORD on the day the LORD had delivered him from the hand of all his enemies and from the hand of Saul.
1 ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:
2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
2 He said: “The LORD is my rock, my fortress, and my deliverer.
2 "ஆண்டவர் என் காற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்;
3 தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.
3 My God is my rock, in whom I take refuge, my shield, and the horn of my salvation. My stronghold, my refuge, and my Savior, You save me from violence.
3 என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே.
4 ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.
4 I will call upon the LORD, who is worthy to be praised; so shall I be saved from my enemies.
4 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.
5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.
5 For the waves of death engulfed me; the torrents of chaos overwhelmed me.
5 ஏனெனில், சாவின் அலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
6 The cords of Sheol entangled me; the snares of death confronted me.
6 பாதாளக் கயிறுகள் எனனைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.
7 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
7 In my distress I called upon the LORD; I cried out to my God. And from His temple He heard my voice, and my cry for help reached His ears.
7 என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என்குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.
8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
8 Then the earth shook and quaked; the foundations of the heavensa trembled; they were shaken because He burned with anger.
8 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.
9 அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.
9 Smoke rose from His nostrils, and consuming fire came from His mouth; glowing coals blazed forth.
9 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்புக் கனல் வெளிப்பட்டது.
10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.
10 He parted the heavens and came down with dark clouds beneath His feet.
10 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது.
11 கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.
11 He mounted a cherub and flew; He soaredb on the wings of the wind.
11 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
12 ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
12 He made darkness a canopy around Him, a gathering of water and thick clouds.
12 காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்; நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார்.
13 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
13 From the brightness of His presence coals of firec blazed forth.
13 அவர் தம் திருமுன்னின் பேரொளியி னின்று நெருப்புக் கனல் தெறித்தது.
14 கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணினார்.
14 The LORD thundered from heaven; the voice of the Most High resounded.
14 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.
15 அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
15 He shot His arrows and scattered the foes; He hurled lightning and routed them.
15 தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களால் அவர்களைக் கலங்கடித்தார்.
16 கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
16 The channels of the sea appeared, and the foundations of the world were exposed at the rebuke of the LORD, at the blast of the breath of His nostrils.
16 ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.
17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
17 He reached down from on high and took hold of me; He drew me out of deep waters.
17 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப் பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார்.1
18 என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
18 He rescued me from my powerful enemy, from foes too mighty for me.
18 என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவித்தார். என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்.
19 என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
19 They confronted me in my day of calamity, but the LORD was my support.
19 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்டவரோ எனக்கு ஊன்று கோலாய் இருந்தார்.
20 என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
20 He brought me out into the open; He rescued me because He delighted in me.
20 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார்.
21 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
21 The LORD has rewarded me according to my righteousness; He has repaid me according to the cleanness of my hands.
21 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்.
22 கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
22 For I have kept the ways of the LORD and have not wickedly departed from my God.
22 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்குசெய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.
23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
23 For all His ordinances are before me; I have not disregarded His statutes.
23 அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.
24 அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.
24 And I have been blameless before Him and kept myself from iniquity.
24 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன்.
25 ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
25 So the LORD has repaid me according to my righteousness, according to my cleanness in His sight.d
25 ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றமற்றவனாய் இருந்தேன்.
26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
26 To the faithful You show Yourself faithful, to the blameless You show Yourself blameless;
26 மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்!
27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27 to the pure You show Yourself pure, but to the crooked You show Yourself shrewd.
27 தூயோர்க்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.
28 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.
28 You save an afflicted people, but Your eyes are on the haughty to bring them down.
28 எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.
29 கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
29 For You, O LORD, are my lamp; the LORD lights up my darkness.
29 ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.
30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்.
30 For in You I can charge an army; with my God I can scale a wall.
30 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.
31 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
31 As for God, His way is perfect; the word of the LORD is flawless. He is a shield to all who take refuge in Him.
31 இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.
32 கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
32 For who is God besides the LORD? And who is the Rock except our God?
32 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?
33 தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
33 God is my strong fortress and He makes my way clear.
33 இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.
34 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
34 He makes my feet like those of a deer and stations me upon the heights.
34 அவர் என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.2
2 அப 3:19.
35 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35 He trains my hands for battle; my arms can bend a bow of bronze.
35 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே, வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!
36 உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
36 You have given me Your shield of salvation, and Your gentleness exalts me.e
36 பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்.
37 என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37 You broaden the path beneath me so that my ankles do not give way.
37 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை.
38 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
38 I pursued my enemies and destroyed them; I did not turn back until they were consumed.
38 என் எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரை நான் திரும்பவில்லை.
39 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.
39 I devoured and crushed them so they could not rise; they have fallen under my feet.
39 நான் அவர்களைக் கொன்று அழித்தேன்; அவர்கள் எழுந்திருக்கவில்லை; அவர்கள் என் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.
40 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
40 You have armed me with strength for battle; You have subdued my foes beneath me.
40 போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர்.
41 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
41 You have made my enemies retreat before me; I put an end to those who hated me.
41 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.
42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
42 They looked, but there was no one to save them—to the LORD, but He did not answer.
42 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.
43 I ground them as the dust of the earth; I crushed and trampled them like mud in the streets.
43 எனவே, நான் அவர்களை மண்ணின் புழுதியென நசுக்கினேன்; அவர்களைத் தெருச் சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.
44 என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
44 You have delivered me from the strife of my people; You have preserved me as the head of nations; a people I had not known shall serve me.
44 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவனாக்கினீர்; முன்பின் அறியாத மக்களும் எனக்குப் பணிவிடை செய்தனர்.
45 அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
45 Foreigners cower before me; when they hear me, they obey me.
45 வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிந்தனர்.
46 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
46 Foreigners lose heart and come trembling from their strongholds.
46 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர்.3
3 'போர்க்கோலம் பூண்டு' என்பது எபிரேய பாடம்.
47 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.
47 The LORD lives, and blessed be my Rock! And may God, the Rock of my salvation, be exalted—
47 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்; என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக!
48 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
48 the God who avenges me and brings down nations beneath me,
48 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!
49 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.
49 who frees me from my enemies. You exalt me above my foes; You rescue me from violent men.
49 என் பகைவரிடமிருந்து என்னை அழைத்துவந்தவர் அவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!
50 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
50 Therefore I will praise You, O LORD, among the nations; I will sing praises to Your name.g
50 ஆகவே, ஆண்டவரே! பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன்.4
4 உரோ 15:9.
51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
51 Great salvation He brings to His king. He shows loving devotion to His anointed, to David and his descendants forever.”
51 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அவளிப்பவர் அவர்! தாம் திருப்பொழிவுசெய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!"
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
8 a Most Hebrew sources; Vulgate, Syriac, and two Hebrew manuscripts (see also Psalm 18:7) mountains
11 b Many Hebrew manuscripts (see also Psalm 18:10); most Hebrew manuscripts He was seen
13 c Or bolts of lightning
25 d Hebrew; LXX and Vulgate (see also Psalm 18:24) according to the cleanness of my hands
36 e Or and Your help exalts me or and You stoop down to make me great
46 f Some LXX manuscripts and Vulgate (see also Psalm 18:45); MT and arm themselves
50 g Cited in Romans 15:9
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.