பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Amos ஆமோஸ் עָמוֹס
ஆமோஸ் 4 | Amos 4
Punishment Brings No Repentance
1 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
1 Hear this word, you cows of Bashan on Mount Samaria, you women who oppress the poor and crush the needy, who say to your husbands, “Bring us more to drink.”
1 "சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்; ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, "கொண்டுவாருங்கள், குடிப்போம்" என்று சொல்கிறீர்கள்.
2 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின்சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
2 The Lord GOD has sworn by His holiness: “Behold, the days are coming when you will be taken away with hooks, and your posterity with fishhooks.
2 இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: "உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன; அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் எஞ்சியிருப்போரைத் தூண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள்.
3 அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டுபோவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 You will go out through broken walls, each one straight ahead of her, and you will be cast out toward Harmon,a” declares the LORD.
3 நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள கோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்" என்கிறார் ஆண்டவர்.
4 பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள், கில்காலுக்குப்போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும் மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,
4 “Go to Bethel and transgress; rebel even more at Gilgal! Bring your sacrifices every morning, your tithes every three days.b
4 "வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்; கில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்; நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்; மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.
5 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
5 Offer leavened bread as a thank offering, and loudly proclaim your freewill offerings. For that is what you children of Israel love to do,” declares the Lord GOD.
5 புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து நன்றிப் பலியாகப் படையுங்கள்; நேர்ச்சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள். இஸ்ரயேல் மக்களே, இப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம்", என்கிறார் ஆண்டவர்.
6 ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 “I beset all your cities with cleanness of teethc and all your towns with lack of bread, yet you did not return to Me,” declares the LORD.
6 "உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலை இல்லாமல் செய்தேன்; நீங்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினேன்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
7 இதுவுமல்லாமல் அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.
7 “I also withheld the rain from you when the harvest was three months away. I sent rain on one city but withheld it from another. One field received rain; another without rain withered.
7 "நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்; ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று.
8 இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
8 People staggered from city to city for water to drink, but they were not satisfied; yet you did not return to Me,” declares the LORD.
8 ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து வேறொரு நகருக்குப் போயும் அவர்கள் தாகம் தீரவில்லை; இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
9 கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 “I struck you with blight and mildew in your growing gardens and vineyards; the locust devoured your fig and olive trees, yet you did not return to Me,” declares the LORD.
9 'வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன். உங்கள் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்; அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது; ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.
10 எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 “I sent plagues among you like those of Egypt; I killed your young men with the sword, along with your captured horses. I filled your nostrils with the stench of your camp, yet you did not return to Me,” declares the LORD.
10 "எகிப்தின்மீது அனுப்பிய கொள்ளை நோய் போன்ற கொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்; உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினேன்; உங்கள் குதிரைகளும் கொள்ளை போயின; உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிணநாற்றம் உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.
11 சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 “Some of you I overthrew as I overthrew Sodom and Gomorrah, and you were like a firebrandd snatched from a blaze, yet you did not return to Me,” declares the LORD.
11 "சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்; ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.*
* தொநூ 19:24.
12 ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச்செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
12 “Therefore, that is what I will do to you, O Israel, and since I will do this to you, prepare to meet your God, O Israel!
12 "ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!"
13 அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
13 For behold, He who forms the mountains, who creates the wind and reveals His thoughts to man, who turns the dawn to darkness and strides on the heights of the earth—the LORD, the God of Hosts, is His name.”
13 ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே; காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே; தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே; காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் அவரே; நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே; படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a That is, possibly Mount Hermon
4 b Or years
6 c That is, with empty stomachs
11 d That is, a burning stick
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.