பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Amos ஆமோஸ் עָמוֹס
ஆமோஸ் 5 | Amos 5
A Lamentation against Israel
1 இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.
1 Hear this word, O house of Israel, this lamentation I take up against you:
1 இஸ்ரயேல் வீட்டாரே, உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்;
2 இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.
2 “Fallen is Virgin Israel, never to rise again. She lies abandoned on her land, with no one to raise her up.”
2 "இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண் விழுந்துகிடக்கிறாள், இனி எழவேமாட்டாள்; தரையில் தன்னந்தனியளாய்க் கிடக்கின்றாள்; அவளைத் தூக்கிவிடுவார் யாருமில்லை."
3 நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
3 This is what the Lord GOD says: “The city that marches out a thousand strong will only see a hundred return, and the one that marches out a hundred strong will have but ten left in the house of Israel.”
3 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரில் நூறு பேரே எஞ்சியிருப்பர்; நூறு பேரை அனுப்பிய நகரில் பத்துப் பேரே எஞ்சியிருப்பர்; இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே."
A Call to Repentance (Joel 1:13–20; Zephaniah 2:1–3; Luke 13:1–5)
4 கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால் என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
4 For this is what the LORD says to the house of Israel: “Seek Me and live!
4 இஸ்ரயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;
5 பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால்: கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்.
5 Do not seek Bethel or go to Gilgal; do not journey to Beersheba, for Gilgal will surely go into exile, and Bethel will come to nothing.a
5 ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலில் காலெடுத்து வைக்காதீர்கள்; பெயேர்செபாவுக்குக் கடந்து போகவேண்டாம்; ஏனெனில் கில்கால் உண்மையாகவே நாடுகடத்தப்படும்; பெத்தேல் பாழாக்கப்படும்.
6 கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அறிவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி அதைப் பட்சிக்கும்.
6 Seek the LORD and live, or He will sweep like fire through the house of Joseph; it will devour everything, with no one at Bethel to extinguish it.
6 ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்; இல்லையேல் அவர் யோசேப்பின் வீட்டின்மேல் தீ மூளச் செய்வார். அந்நெருப்பு அதை விழுங்கிவிடும், பெத்தேலில் அந்நெருப்பை அணைக்கக்கூடியவர் எவருமிரார்.
7 நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.
7 There are those who turn justice into wormwood and cast righteousness to the ground.
7 அவர்கள் நீதியை எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்; நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.
8 அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
8 He who made the Pleiades and Orion, who turns darkness into dawn and darkens day into night, who summons the waters of the sea and pours them over the face of the earth—the LORD is His name—
8 ஆனால், அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்; காரிருளைக் காலைப்பொழுது ஆகச் செய்பவர்; பகற்பொழுதை இரவு வேளையாய் மாற்றுபவர்; கடல் நீரை அழைத்து நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்; அவரது பெயர் "ஆண்டவர்".1
9 அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.
9 He flashes destruction on the strong, so that fury comes upon the stronghold.
9 வலிமை மிக்க தளங்கள்மேல் அவர் அழிவை அனுப்புவதால் அவை அழிவைக் காண்கின்றன.
10 ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.
10 There are those who hate the one who reproves in the gate and despise him who speaks with integrity.
10 அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு தங்களைக் கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள்; உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.
11 நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமை சுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள, ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
11 Therefore, because you trample on the poor and exact from him a tax of grain, you will never live in the stone houses you have built; you will never drink the wine from the lush vineyards you have planted.
11 நீங்கள் ஏழைகளை நசுக்கி, அவர்களிடம் தானிய வரியாக வாங்கியதைக் கொண்டு நன்கு செதுக்கிய கற்களால் வீடு கட்டினீர்கள்; அந்த வீடுகளில் நீங்கள் வாழப் போவதில்லை; அருமையான திராட்சைத் தோட்டங்களை அமைத்தீர்கள்; அவை தரும் திராட்சை இரசத்தை நீங்கள் குடிக்கப் போவதில்லை.
12 உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
12 For I know that your transgressions are many and your sins are numerous. You oppress the righteous by taking bribes; you deprive the poor of justice in the gate.
12 உங்கள் குற்றங்கள் எவ்வளவு மிகுதியானவை என்றும் உங்கள் பாவங்கள் எத்துணைக் கொடியவை என்றும் நான் அறிவேன்; நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், நகர் வாயிலில் வறியோருக்கு நீதி வழங்க மறுக்கிறீர்கள்.
13 ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
13 Therefore, the prudent keep silent in such times, for the days are evil.
13 அது கெட்ட காலம் என்பதால், அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.
14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.
14 Seek good, not evil, so that you may live. And the LORD, the God of Hosts, will be with you, as you have claimed.
14 நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
15 நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
15 Hate evil and love good; establish justice in the gate. Perhaps the LORD, the God of Hosts, will be gracious to the remnant of Joseph.”
15 தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்; நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார்.
Woe to Rebellious Israel (Acts 7:39–43)
16 ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
16 Therefore this is what the LORD, the God of Hosts, the Lord, says: “There will be wailing in all the public squares and cries of ‘Alas! Alas!’ in all the streets. The farmer will be summoned to mourn, and the mourners to wail.
16 ஆகையால், படைகளின் கடவுளும் தலைவருமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "பொதுவிடங்கள் எங்கும் அழுகுரல் கேட்கும், எல்லா வீதிகளிலும், "ஐயோ! ஐயோ!" என்ற புலம்பல் எழும்பும்; வயலில் வேலை செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர்; ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.
17 எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 There will be wailing in all the vineyards, for I will pass through your midst,” says the LORD.
17 திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும்; ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வென்", என்கிறார் ஆண்டவர்.
18 கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
18 Woe to you who long for the Day of the LORD! What will the Day of the LORD be for you? It will be darkness and not light.
18 ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புவோரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவது ஏன்? அது ஒளிமிக்க நாளன்று; இருள் சூழ்ந்த நாளாகத் தான் இருக்கும்.
19 சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
19 It will be like a man who flees from a lion, only to encounter a bear, or who enters his house and rests his hand against the wall, only to be bitten by a snake.
19 அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்!
20 கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?
20 Will not the Day of the LORD be darkness and not light, even gloom with no brightness in it?
20 ஆண்டவரின் நாள் ஒளியின் நாள் அன்று; அது இருள் கவிந்தது அல்லவா? வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?
21 உங்கள் பண்டிகைகளைப் பகைத்துவெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்புநாட்களில் எனக்குப் பிரியமில்லை.
21 “I hate, I despise your feasts! I cannot stand the stench of your solemn assemblies.
21 "உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை.
22 உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.
22 Even though you offer Me burnt offerings and grain offerings, I will not accept them; for your peace offerings of fattened cattle I will have no regard.
22 எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.2
2 எசா 1:11-14.
23 உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
23 Take away from Me the noise of your songs! I will not listen to the music of your harps.
23 என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.
24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.
24 But let justice roll on like a river, and righteousness like an ever-flowing stream.
24 மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
25 இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
25 Did you bring Me sacrifices and offerings forty years in the wilderness, O house of Israel?
25 "இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?
26 நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
26 You have taken along Sakkuth your king and Kaiwan your star god,b the idols you made for yourselves.
26 நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்; அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்; அந்தச் சிலைகளை நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.
27 ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
27 Therefore I will send you into exile beyond Damascus,”c says the LORD, whose name is the God of Hosts.
27 உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன்", என்கிறார் ஆண்டவர்; அவரது பெயர் "படைகளின் கடவுள்."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
5 a Hebrew to Aven , a reference to Beth-aven, a derogatory term for Bethel; see Hosea 4:15.
26 b LXX You have taken along the tabernacle of Molech and the star of your god Rephan
27 c Cited in Acts 7:42–43
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.