பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Daniel தானியேல் דָּנִיֵּאל
தானியேல் 3 | Daniel 3
Nebuchadnezzar’s Golden Statue
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
1 King Nebuchadnezzar made a golden statuea sixty cubits high and six cubits wide,b and he set it up on the plain of Dura in the province of Babylon.
1 நெபுகத்னேசர் அரசன் அறுபது முழ உயருமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த 'தூரா' என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான்.
2 பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.
2 Then King Nebuchadnezzar sent word to assemble the satraps, prefects, governors, advisers, treasurers, judges, magistrates, and all the other officials of the provinces to attend the dedication of the statue he had set up.
2 பின்பு நெபுகத்னேசர் அரசன் தான் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மற்றெல்லா அலுவலரும் ஒன்றாய்க் கூடி வரவேண்டுமென்று ஆணையிட்டான்.
3 அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.
3 So the satraps, prefects, governors, advisers, treasurers, judges, magistrates, and all the rulers of the provinces assembled for the dedication of the statue that King Nebuchadnezzar had set up, and they stood before it.
3 அவ்வாறே சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மாநிலங்களின் மற்றெல்லா அலுவலரும் நெபுகத்னேசர் அரசன் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு ஒன்றாய்க் கூடி வந்து சேர்ந்தனர்; அவர்கள் நெபுகத்னேசர் நிறுவிய சிலை முன் வந்து நின்றனர்.
4 கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும் பாஷைக்காருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:
4 Then the herald loudly proclaimed, “O people of every nation and language, this is what you are commanded:
4 கட்டியக்காரன் ஒருவன் உரத்த குரலில், "இதனால் மக்கள் அனைவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும், மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது யாதெனில்:
5 எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
5 As soon as you hear the sound of the horn, flute, zither, lyre, harp, pipes, and all kinds of music,c you must fall down and worship the golden statue that King Nebuchadnezzar has set up.
5 எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், நீங்கள் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும்.
6 எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூலையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
6 And whoever does not fall down and worship will immediately be thrown into the blazing fiery furnace.”
6 எவராகிலும் தாழ வீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் தூக்கிப்போடப்படுவார்கள்" என்று கூறி முரசறைந்தான்.
7 ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.
7 Therefore, as soon as all the people heard the sound of the horn, flute, zither, lyre, harp, and all kinds of music, the people of every nation and language would fall down and worship the golden statue that King Nebuchadnezzar had set up.
7 ஆகையால், எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடன், எல்லா மக்களும் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழுதார்கள்.
Shadrach, Meshach, and Abednego Accused
8 அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி,
8 At this time some astrologersd came forward and maliciously accused the Jews,
8 அப்பொழுது கல்தேயர் சிலர் தாமே முன்வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டலாயினர்.
9 ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
9 saying to King Nebuchadnezzar, “O king, may you live forever!
9 அவர்கள் நெபுகத்னேசர் அரசனிடம் சொன்னது: "அரசரே! நீர் நீடூழி வாழ்க!
10 எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,
10 You, O king, have issued a decree that everyone who hears the sound of the horn, flute, zither, lyre, harp, pipes, and all kinds of music must fall down and worship the golden statue,
10 அரசரே! எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழவீழ்ந்து பொற்சிலையைப் பணியவேண்டும் என்று, நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?
11 எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.
11 and that whoever does not fall down and worship will be thrown into the blazing fiery furnace.
11 எவராகிலும் தாழவீழ்ந்து பணியாமல் போனால் அவர்கள் எரிகிற தீச்சூளையில் போடப்படுவார்கள் என்றும் நீர் ஆணை விடுத்தீர் அல்லவா?
12 பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
12 But there are some Jews you have appointed to manage the province of Babylon—Shadrach, Meshach, and Abednego—who have ignored you, O king, and have refused to serve your gods or worship the golden statue you have set up.”
12 அரசரே! பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அந்தப் பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை; உம் தெய்வங்களை வணங்கவில்லை; நீர் நிறுவின பொற் சிலையைப் பணிந்து தொழவும் இல்லை."
13 அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,
13 Then Nebuchadnezzar, furious with rage, summoned Shadrach, Meshach, and Abednego. So these men were brought before the king,
13 உடனே நெபுகத்னேசர் கடுஞ்சினமுற்று, சாத்ராக்கையும், மேசாக்கையும், ஆபேத்நெகோவையும் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே அரசன் முன்னிலைக்கு அவர்களைப் பிடித்துக்கொண்டு வந்தனர்.
14 நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?
14 and Nebuchadnezzar said to them, “Shadrach, Meshach, and Abednego, is it true that you do not serve my gods or worship the golden statue I have set up?
14 நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, "சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா?
15 இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
15 Now, if you are ready, as soon as you hear the sound of the horn, flute, zither, lyre, harp, pipes, and all kinds of music, you must fall down and worship the statue I have made. But if you refuse to worship, you will be thrown at once into the blazing fiery furnace. Then what god will be able to deliver you from my hands?”
15 இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?" என்றான்.
16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
16 Shadrach, Meshach, and Abednego replied to the king, “O Nebuchadnezzar, we have no need to answer you in this matter.
16 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, "இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை.
17 நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;
17 If the God whom we serve exists, then He is ablee to deliver us from the blazing fiery furnace and from your hand, O king.
17 அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்.
18 விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
18 But even if He does not, let it be known to you, O king, that we will not serve your gods or worship the golden statue you have set up.”
18 அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்" என்றார்கள்.
The Fiery Furnace
19 அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,
19 At this, Nebuchadnezzar was filled with rage, and the expression on his face changed toward Shadrach, Meshach, and Abednego. He gave orders to heat the furnace seven times hotter than usual,
19 இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.
20 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
20 and he commanded some mighty men of valor in his army to tie up Shadrach, Meshach, and Abednego and throw them into the blazing fiery furnace.
20 பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.
21 அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள்.
21 So they were tied up, wearing robes, trousers, turbans, and other clothes, and they were thrown into the blazing fiery furnace.
21 அவ்வாறே அந்த வீரர்கள் அவர்களை மேற்போர்வையோடும் உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள்.
22 ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.
22 The king’s command was so urgent and the furnace so hot that the fiery flames killed the men who carried up Shadrach, Meshach, and Abednego.
22 அரசனது கட்டளை மிகக் கண்டிப்பானதாக இருந்ததாலும் தீச்சூளை செந்தணலாய் இருந்ததாலும் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைத் தீச்சூளையில் போடுவதற்குத் தூக்கிச் சென்றவர்களையே அத்தீப்பிழம்பு கூட்டெரித்துக் கொன்றது.
23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
23 And these three men, Shadrach, Meshach, and Abednego, firmly bound, fell into the blazing fiery furnace.
23 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற தீச்சூளையினுள் வீழ்ந்தார்கள்.
24 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
24 Suddenly King Nebuchadnezzar jumped up in amazement and asked his advisers, “Did we not throw three men, firmly bound, into the fire?” “Certainly, O king,” they replied.
24 * அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, "மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!" என்றான். "ஆம் அரசரே" என்று அவர்கள் விடையளித்தனர்.*
* - கிரேக்க ஏடுகளில் "அசரியாவின் மன்றாட்டு", "மூவர் பாடல்" ஆகிய பகுதிகள் இங்கு இடம்பெறுகின்றன. (காண்: இணைத்திருமுறை தானியேல் - இணைப்புகள்.)
25 அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
25 “Look!” he exclaimed. “I see four men, unbound and unharmed, walking around in the fire—and the fourth looks like a son of the gods!f”
25 அதற்கு அவன், "கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" என்றான்.
26 அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
26 Then Nebuchadnezzar approached the door of the blazing fiery furnace and called out, “Shadrach, Meshach, and Abednego, servants of the Most High God, come out!” So Shadrach, Meshach, and Abednego came out of the fire,
26 உடனே நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து நின்று, "உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு, ஆபேத்நெகோ வெளியே வாருங்கள்" என்றான் அவ்வாறே சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர் நெருப்பைவிட்டு வெளியே வந்தனர்.
27 தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
27 and when the satraps, prefects, governors, and royal advisers had gathered around, they saw that the fire had no effect on the bodies of these men. Not a hair of their heads was singed, their robes were unaffected, and there was no smell of fire on them.
27 சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அரசனுக்கு அறிவுரை கூறுவோரும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும் அவர்களது தலைமுடி கருகாமலும் அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும் நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்.
28 அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
28 Nebuchadnezzar declared, “Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent His angelg and delivered His servants who trusted in Him. They violated the king’s command and risked their lives rather than serve or worship any god except their own God.
28 அப்பொழுது நெபுகத்னேசர், "சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்.
29 ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
29 Therefore I decree that the people of any nation or language who say anything offensive against the God of Shadrach, Meshach, and Abednego will be cut into pieces and their houses reduced to rubble. For there is no other god who can deliver in this way.”
29 ஆதலால் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் கூறும் எந்த இனத்தவனும் எந்த நாட்டவனும் எந்த மொழியினனும் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான்; அவனுடைய வீடும் தரைமட்டமாக்கப்படும்; இதுவே என் ஆணை! ஏனெனில், இவ்வண்ணமாய் மீட்கின்ற ஆற்றல் படைத்த கடவுள் வேறெவரும் இல்லை" என்றான்.
30 பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
30 Then the king promoted Shadrach, Meshach, and Abednego in the province of Babylon.
30 பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப் பாபிலோனின் மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or image ; here and throughout Daniel 3
1 b The statue was approximately 90 feet high and 9 feet wide (27.4 meters high and 2.7 meters wide).
5 c The precise identification of some musical instruments in this chapter is uncertain.
8 d Or Chaldeans
17 e Or If this be so, then the God whom we serve is able
25 f Or like the Son of God
28 g Or Angel
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.