பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Daniel  தானியேல்  דָּנִיֵּאל

அதிகாரம்   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

தானியேல் 4 | Daniel 4

Nebuchadnezzar Confesses God’s Kingdom

1נְבוּכַדְנֶצַּ֣ר מַלְכָּ֗א לְֽכָל־עַֽמְמַיָּ֞א אֻמַיָּ֧א וְלִשָּׁנַיָּ֛א דִּֽי־דארין בְּכָל־אַרְעָ֖א שְׁלָמְכ֥וֹן יִשְׂגֵּֽא׃

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.
1 King Nebuchadnezzar, To the people of every nation and language who dwell in all the earth: May your prosperity be multiplied.
1 அரசர் நெபுகத்னேசர் உலகில் எங்கணுமுள்ள எல்லா இனத்தார்க்கும் நாட்டினர்க்கும் மொழியினருக்கும் அறிவிப்பது:

2אָֽתַיָּא֙ וְתִמְהַיָּ֔א דִּ֚י עֲבַ֣ד עִמִּ֔י אֱלָהָ֖א עליא שְׁפַ֥ר קֽ͏ָדָמַ֖י לְהַחֲוָיָֽה׃

2 உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.
2 I am pleased to declare the signs and wonders that the Most High God has performed for me.
2 உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக! மாட்சிமிகு கடவுள் எனக்காகச் செய்தருளிய அடையாளங்களையும் விந்தைகளையும் வெளிப்படுத்துவது நலமென எனக்குத் தோன்றுகிறது.

3אָת֙וֹהִי֙ כְּמָ֣ה רַבְרְבִ֔ין וְתִמְה֖וֹהִי כְּמָ֣ה תַקִּיפִ֑ין מַלְכוּתֵהּ֙ מַלְכ֣וּת עָלַ֔ם וְשָׁלְטָנֵ֖הּ עִם־דָּ֥ר וְדָֽר׃

3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
3 How great are His signs, how mighty His wonders! His kingdom is an eternal kingdom; His dominion endures from generation to generation.
3 அவர் தந்த அடையாளங்கள் எத்துணைப் பெரியன! அவர் ஆற்றிய விந்தைகள் எத்துணை வலியன! அவரது அரசு என்றுமுள அரசு! அவரது ஆட்சியுரிமை வழிவழி நிலைக்கும்.

Nebuchadnezzar’s Dream of a Great Tree

4אֲנָ֣ה נְבוּכַדְנֶצַּ֗ר שְׁלֵ֤ה הֲוֵית֙ בְּבֵיתִ֔י וְרַעְנַ֖ן בְּהֵיכְלִֽי׃

4 நேபுகாத்நேச்சாராகிய நான் என்வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து என் அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன்.
4 I, Nebuchadnezzar, was at ease in my house and flourishing in my palace.
4 நெபுகத்னேசராகிய நான் வீட்டில் மன அமைதியுடனும் அரண்மனையில் வளமுடனும் வாழ்ந்து வந்தேன்.

5חֵ֥לֶם חֲזֵ֖ית וִֽידַחֲלִנַּ֑נִי וְהַרְהֹרִין֙ עַֽל־מִשְׁכְּבִ֔י וְחֶזְוֵ֥י רֵאשִׁ֖י יְבַהֲלֻנַּֽנִי׃

5 நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
5 I had a dream, and it frightened me; while in my bed, the images and visions in my mind alarmed me.
5 நான் ஒரு கனவு கண்டேன்; அது என்னை அச்சுறுத்தியது; நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய கற்பனைகளும் காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.

6וּמִנִּי֙ שִׂ֣ים טְעֵ֔ם לְהַנְעָלָ֣ה קָֽדָמַ֔י לְכֹ֖ל חַכִּימֵ֣י בָבֶ֑ל דִּֽי־פְשַׁ֥ר חֶלְמָ֖א יְהֽוֹדְעֻנַּֽנִי׃

6 ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோனின் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
6 So I issued a decree that all the wise men of Babylon be brought before me to interpret the dream for me.
6 ஆதலால் நான் கண்ட கனவின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறும்படி பாபிலோனிய ஞானிகள் அனைவரையும் என் முன்னிலைக்கு அழைத்துவரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தேன்.

7בֵּאדַ֣יִן עללין חַרְטֻמַיָּא֙ אָֽשְׁפַיָּ֔א כשדיא וְגָזְרַיָּ֑א וְחֶלְמָ֗א אָמַ֤ר אֲנָה֙ קֳדָ֣מֵיה֔וֹן וּפִשְׁרֵ֖הּ לָא־מְהוֹדְעִ֥ין לִֽי׃

7 அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.
7 When the magicians, enchanters, astrologers,a and diviners came in, I told them the dream, and they could not interpret it for me.
7 அவ்வாறே, மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரரும் கல்தேயரும் சோதிடரும் வந்து கூடினர்; நான் கண்ட கனவை அவர்களிடம் கூறினேன்; ஆனால் அவர்களால் அதன் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறமுடியவில்லை.

8וְעַ֣ד אָחֳרֵ֡ין עַל֩ קָֽדָמַ֨י דָּנִיֵּ֜אל דִּֽי־שְׁמֵ֤הּ בֵּלְטְּשַׁאצַּר֙ כְּשֻׁ֣ם אֱלָהִ֔י וְדִ֛י רֽוּחַ־אֱלָהִ֥ין קַדִּישִׁ֖ין בֵּ֑הּ וְחֶלְמָ֖א קָֽדָמ֥וֹהִי אַמְרֵֽת׃

8 கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:
8 But at last, into my presence came Daniel (whose name is Belteshazzar after the name of my god, and in whom is the spirit of the holy gods). And I told him the dream:
8 இறுதியாக‌, என் சொந்தத் தெய்வமாகிய பெல்தசாச்சாரின் பெயர் சூட்டப்பெற்ற தானியேல் வந்தார்; அவர் புனிதமிகு கடவுளின் ஆவியால் நிரப்பப்பெற்றவர்; அவரிடம் நான் கண்ட கனவைக் கூறினேன்:

9בֵּלְטְשַׁאצַּר֮ רַ֣ב חַרְטֻמַיָּא֒ דִּ֣י ׀ אֲנָ֣ה יִדְעֵ֗ת דִּ֠י ר֣וּחַ אֱלָהִ֤ין קַדִּישִׁין֙ בָּ֔ךְ וְכָל־רָ֖ז לָא־אָנֵ֣ס לָ֑ךְ חֶזְוֵ֨י חֶלְמִ֧י דִֽי־חֲזֵ֛ית וּפִשְׁרֵ֖הּ אֱמַֽר׃

9 சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.
9 “O Belteshazzar, chief of the magicians, I know that the spirit of the holy gods is in you and that no mystery baffles you. So explain to me the visions I saw in my dream, and their interpretation.
9 "மந்திரவாதிகளின் தலைவராகிய பெல்தசாச்சார்! புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும், உம்மால் விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன். நான் கனவில் கண்ட காட்சி இதுதான்; அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர்.

10וְחֶזְוֵ֥י רֵאשִׁ֖י עַֽל־מִשְׁכְּבִ֑י חָזֵ֣ה הֲוֵ֔ית וַאֲל֥וּ אִילָ֛ן בְּג֥וֹא אַרְעָ֖א וְרוּמֵ֥הּ שַׂגִּֽיא׃

10 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால் இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.
10 In these visions of my mind as I was lying in bed, I saw this come to pass: There was a tree in the midst of the land, and its height was great.
10 நான் படுக்கையில் கிடந்தபோது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன: 'இதோ! நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்; அது மிக உயர்ந்து நின்றது.

11רְבָ֥ה אִֽילָנָ֖א וּתְקִ֑ף וְרוּמֵהּ֙ יִמְטֵ֣א לִשְׁמַיָּ֔א וַחֲזוֹתֵ֖הּ לְס֥וֹף כָּל־אַרְעָֽא׃

11 அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.
11 The tree grew large and strong; its top reached the sky, and it was visible to the ends of the earth.
11 அது வளர்ந்து வலிமை மிக்கதாய், வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.

12עָפְיֵ֤הּ שַׁפִּיר֙ וְאִנְבֵּ֣הּ שַׂגִּ֔יא וּמָז֨וֹן לְכֹ֖לָּא־בֵ֑הּ תְּחֹת֜וֹהִי תַּטְלֵ֣ל ׀ חֵיוַ֣ת בָּרָ֗א וּבְעַנְפ֙וֹהִי֙ ידרון צִפֲּרֵ֣י שְׁמַיָּ֔א וּמִנֵּ֖הּ יִתְּזִ֥ין כָּל־בִּשְׂרָֽא׃

12 அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.
12 Its leaves were beautiful, its fruit was abundant, and upon it was food for all. Under it the beasts of the field found shelter, in its branches the birds of the air nested, and from it every creature was fed.
12 அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன; மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன; அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது; அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன; அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது.

13חָזֵ֥ה הֲוֵ֛ית בְּחֶזְוֵ֥י רֵאשִׁ֖י עַֽל־מִשְׁכְּבִ֑י וַאֲלוּ֙ עִ֣יר וְקַדִּ֔ישׁ מִן־שְׁמַיָּ֖א נָחִֽת׃

13 நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.
13 As I lay on my bed, I also saw in the visions of my mind a watcher,b a holy one, coming down from heaven.
13 ❮13-14❯நான் படுக்கையில் கிடந்தபோது என் மனக்கண்முன்னே இக்காட்சிகளைக் கண்டேன்; அப்பொழுது, இதோ! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே: இந்த மரத்தை வெட்டுங்கள்; கிளைகளைத் தறித்து விடுங்கள்; இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்; இதன் கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் விலங்குகள் ஓடிப்போகட்டும்; இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.

14קָרֵ֨א בְחַ֜יִל וְכֵ֣ן אָמַ֗ר גֹּ֤דּוּ אִֽילָנָא֙ וְקַצִּ֣צוּ עַנְפ֔וֹהִי אַתַּ֥רוּ עָפְיֵ֖הּ וּבַדַּ֣רוּ אִנְבֵּ֑הּ תְּנֻ֤ד חֵֽיוְתָא֙ מִן־תַּחְתּ֔וֹהִי וְצִפְּרַיָּ֖א מִן־עַנְפֽוֹהִי׃

14 அவன் உரத்த சத்தமிட்டு; இந்தவிருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்.
14 He called out in a loud voice: ‘Cut down the tree and chop off its branches; strip off its leaves and scatter its fruit. Let the beasts flee from under it, and the birds from its branches.

15בְּרַ֨ם עִקַּ֤ר שָׁרְשׁ֙וֹהִי֙ בְּאַרְעָ֣א שְׁבֻ֔קוּ וּבֶֽאֱסוּר֙ דִּֽי־פַרְזֶ֣ל וּנְחָ֔שׁ בְּדִתְאָ֖א דִּ֣י בָרָ֑א וּבְטַ֤ל שְׁמַיָּא֙ יִצְטַבַּ֔ע וְעִם־חֵיוְתָ֥א חֲלָקֵ֖הּ בַּעֲשַׂ֥ב אַרְעָֽא׃

15 ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.
15 But leave the stump with its roots in the ground, and a band of iron and bronze around it, in the tender grass of the field. Let him be drenched with the dew of heaven and graze with the beasts on the grass of the earth.
15 ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும். வானத்தின் பனியால் அந்த மனிதன் நனையட்டும்; தரையில் புல்வெளியில் விலங்குகளோடு அவன் கிடக்கட்டும்.

16לִבְבֵהּ֙ מִן־אנושא יְשַׁנּ֔וֹן וּלְבַ֥ב חֵיוָ֖ה יִתְיְהִ֣ב לֵ֑הּ וְשִׁבְעָ֥ה עִדָּנִ֖ין יַחְלְפ֥וּן עֲלֽוֹהִי׃

16 அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்.
16 Let his mind be changed from that of a man, and let him be given the mind of a beast till seven times pass him by.
16 அவனது மனித உள்ளம் மாற்றப்பட்டு, அவனுக்கு விலங்கின் மனம் கொடுக்கப்படட்டும்.

17בִּגְזֵרַ֤ת עִירִין֙ פִּתְגָמָ֔א וּמֵאמַ֥ר קַדִּישִׁ֖ין שְׁאֵֽלְתָ֑א עַד־דִּבְרַ֡ת דִּ֣י יִנְדְּע֣וּן חַ֠יַּיָּא דִּֽי־שַׁלִּ֨יט עליא בְּמַלְכ֣וּת אנושא וּלְמַן־דִּ֤י יִצְבֵּא֙ יִתְּנִנַּ֔הּ וּשְׁפַ֥ל אֲנָשִׁ֖ים יְקִ֥ים עליה

17 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
17 This decision is the decree of the watchers, the verdict declared by the holy ones, so that the living will know that the Most High rules over the kingdom of mankind and gives it to whom He wishes, setting over it the lowliest of men.’
17 ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லட்டும். காவலர் விதித்த தீர்ப்பு இதுவே: தூயவர் வாய்மொழியின் முடிவும் இதுவே: மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்பதையும், மனிதருள் தாழ்ந்தவர்களையே அதற்குத் தலைவர்களாக்குகின்றார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது.

18דְּנָה֙ חֶלְמָ֣א חֲזֵ֔ית אֲנָ֖ה מַלְכָּ֣א נְבוּכַדְנֶצַּ֑ר ואנתה בֵּלְטְּשַׁאצַּ֜ר פִּשְׁרֵ֣א ׀ אֱמַ֗ר כָּל־קֳבֵל֙ דִּ֣י ׀ כָּל־חַכִּימֵ֣י מַלְכוּתִ֗י לָֽא־יָכְלִ֤ין פִּשְׁרָא֙ לְהוֹדָ֣עֻתַ֔נִי ואנתה כָּהֵ֔ל דִּ֛י רֽוּחַ־אֱלָהִ֥ין קַדִּישִׁ֖ין בָּֽךְ׃

18 நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே: இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
18 This is the dream that I, King Nebuchadnezzar, saw. Now, Belteshazzar, tell me the interpretation, because none of the wise men of my kingdom can interpret it for me. But you are able, because the spirit of the holy gods is in you.”
18 அரசர் நெபுகத்னேசராகிய நான் கண்ட கனவு இதுவே: பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை எனக்குத் தெரிவியும்! என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும் இதன் உட்பொருளை விளக்கிக் கூற இயலவில்லை. நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்; ஏனெனில் புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது."

Daniel Interprets the Second Dream

19אֱדַ֨יִן דָּֽנִיֵּ֜אל דִּֽי־שְׁמֵ֣הּ בֵּלְטְשַׁאצַּ֗ר אֶשְׁתּוֹמַם֙ כְּשָׁעָ֣ה חֲדָ֔ה וְרַעְיֹנֹ֖הִי יְבַהֲלֻנֵּ֑הּ עָנֵ֨ה מַלְכָּ֜א וְאָמַ֗ר בֵּלְטְּשַׁאצַּר֙ חֶלְמָ֤א וּפְשְׁרֵא֙ אַֽל־יְבַהֲלָ֔ךְ עָנֵ֤ה בֵלְטְשַׁאצַּר֙ וְאָמַ֔ר מראי חֶלְמָ֥א לשנאיך וּפִשְׁרֵ֥הּ לעריך

19 அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது
19 For a time, Daniel, who was also known as Belteshazzar, was perplexed, and his thoughts alarmed him. So the king said, “Belteshazzar, do not let the dream or its interpretation alarm you.” “My lord,” replied Belteshazzar, “may the dream apply to those who hate you, and its interpretation to your enemies!
19 இதைக் கேட்டவுடன் பெல்தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்; அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட அரசன், "பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம்" என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, "என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!

20אִֽילָנָא֙ דִּ֣י חֲזַ֔יְתָ דִּ֥י רְבָ֖ה וּתְקִ֑ף וְרוּמֵהּ֙ יִמְטֵ֣א לִשְׁמַיָּ֔א וַחֲזוֹתֵ֖הּ לְכָל־אַרְעָֽא׃

20 நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.
20 The tree you saw that grew large and strong, whose top reached the sky and was visible to all the earth,
20 நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய் வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்திருந்தது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.

21וְעָפְיֵ֤הּ שַׁפִּיר֙ וְאִנְבֵּ֣הּ שַׂגִּ֔יא וּמָז֨וֹן לְכֹ֖לָּא־בֵ֑הּ תְּחֹת֗וֹהִי תְּדוּר֙ חֵיוַ֣ת בָּרָ֔א וּבְעַנְפ֕וֹהִי יִשְׁכְּנָ֖ן צִפֲּרֵ֥י שְׁמַיָּֽא׃

21 அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது.
21 whose foliage was beautiful and whose fruit was abundant, providing food for all, under which the beasts of the field lived, and in whose branches the birds of the air nested—
21 அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன. மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன. அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது. அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன.

22אנתה־ה֣וּא מַלְכָּ֔א דִּ֥י רְבַ֖ית וּתְקֵ֑פְתְּ וּרְבוּתָ֤ךְ רְבָת֙ וּמְטָ֣ת לִשְׁמַיָּ֔א וְשָׁלְטָנָ֖ךְ לְס֥וֹף אַרְעָֽא׃

22 அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தான்; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.
22 you, O king, are that tree! For you have become great and strong; your greatness has grown to reach the sky, and your dominion extends to the ends of the earth.
22 அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல; மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம். உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது. உமது ஆட்சி உலகின் எல்லைகள் வரை பரவியுள்ளது.

23וְדִ֣י חֲזָ֣ה מַלְכָּ֡א עִ֣יר וְקַדִּ֣ישׁ נָחִ֣ת ׀ מִן־שְׁמַיָּ֡א וְאָמַר֩ גֹּ֨דּוּ אִֽילָנָ֜א וְחַבְּל֗וּהִי בְּרַ֨ם עִקַּ֤ר שָׁרְשׁ֙וֹהִי֙ בְּאַרְעָ֣א שְׁבֻ֔קוּ וּבֶאֱסוּר֙ דִּֽי־פַרְזֶ֣ל וּנְחָ֔שׁ בְּדִתְאָ֖א דִּ֣י בָרָ֑א וּבְטַ֧ל שְׁמַיָּ֣א יִצְטַבַּ֗ע וְעִם־חֵיוַ֤ת בָּרָא֙ חֲלָקֵ֔הּ עַ֛ד דִּֽי־שִׁבְעָ֥ה עִדָּנִ֖ין יַחְלְפ֥וּן עֲלֽוֹהִי׃

23 இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
23 And you, O king, saw a watcher, a holy one, coming down from heaven and saying: ‘Cut down the tree and destroy it, but leave the stump with its roots in the ground, and a band of iron and bronze around it, in the tender grass of the field. Let him be drenched with the dew of heaven, and graze with the beasts of the field till seven times pass him by.’
23 மேலும், அரசரே! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் கண்டீர் அல்லவா! அவர், 'இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்; ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்; வானத்தின் பனியால் அவன் நனையட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லும்வரை அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர்.

24דְּנָ֥ה פִשְׁרָ֖א מַלְכָּ֑א וּגְזֵרַ֤ת עליא הִ֔יא דִּ֥י מְטָ֖ת עַל־מראי מַלְכָּֽא׃

24 ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.
24 This is the interpretation, O king, and this is the decree that the Most High has issued against my lord the king:
24 அரசரே! இதுதான் உட்பொருள்: என் தலைவரும் அரசருமான உமக்கு உன்னதரது தீர்ப்பின்படி நடக்கவிருப்பதும் இதுவே:

25וְלָ֣ךְ טָֽרְדִ֣ין מִן־אֲנָשָׁ֡א וְעִם־חֵיוַ֣ת בָּרָא֩ לֶהֱוֵ֨ה מְדֹרָ֜ךְ וְעִשְׂבָּ֥א כְתוֹרִ֣ין ׀ לָ֣ךְ יְטַֽעֲמ֗וּן וּמִטַּ֤ל שְׁמַיָּא֙ לָ֣ךְ מְצַבְּעִ֔ין וְשִׁבְעָ֥ה עִדָּנִ֖ין יַחְלְפ֣וּן עֲלָ֑יךְ עַ֣ד דִּֽי־תִנְדַּ֗ע דִּֽי־שַׁלִּ֤יט עִלָּיָא֙ בְּמַלְכ֣וּת אֲנָשָׁ֔א וּלְמַן־דִּ֥י יִצְבֵּ֖א יִתְּנִנַּֽהּ׃

25 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.
25 You will be driven away from mankind, and your dwelling will be with the beasts of the field. You will feed on grass like an ox and be drenched with the dew of heaven, and seven times shall pass you by, until you acknowledge that the Most High rules over the kingdom of mankind and gives it to whom He wishes.
25 மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்; காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.

26וְדִ֣י אֲמַ֗רוּ לְמִשְׁבַּ֞ק עִקַּ֤ר שָׁרְשׁ֙וֹהִי֙ דִּ֣י אִֽילָנָ֔א מַלְכוּתָ֖ךְ לָ֣ךְ קַיָּמָ֑ה מִן־דִּ֣י תִנְדַּ֔ע דִּ֥י שַׁלִּטִ֖ן שְׁמַיָּֽא׃

26 ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின் ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.
26 As for the command to leave the stump of the tree with its roots, your kingdom will be restored to you as soon as you acknowledge that Heaven rules.
26 வேர்கள் நிறைந்த அடிமரத்தை விட்டுவைக்க வேண்டும் என்று கட்டளை பிறந்தது அல்லவா? அதன்படி, விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் உனக்குக் கிடைக்கும்.

27לָהֵ֣ן מַלְכָּ֗א מִלְכִּי֙ יִשְׁפַּ֣ר עליך וחטיך בְּצִדְקָ֣ה פְרֻ֔ק וַעֲוָיָתָ֖ךְ בְּמִחַ֣ן עֲנָ֑יִן הֵ֛ן תֶּהֱוֵ֥א אַרְכָ֖ה לִשְׁלֵוְתָֽךְ׃

27 ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்,
27 Therefore, may my advice be pleasing to you, O king. Break away from your sins by doing what is right, and from your iniquities by showing mercy to the oppressed. Perhaps there will be an extension of your prosperity.”
27 எனவே, அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆக! நல்லறத்தைப் பேணித் தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க! ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு இது வழியாகலாம்" என்றார்.

The Second Dream Fulfilled

28כֹּ֣לָּא מְּטָ֔א עַל־נְבוּכַדְנֶצַּ֖ר מַלְכָּֽא׃

28 இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.
28 All this happened to King Nebuchadnezzar.
28 அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்தும் நேர்ந்தது.

29לִקְצָ֥ת יַרְחִ֖ין תְּרֵֽי־עֲשַׂ֑ר עַל־הֵיכַ֧ל מַלְכוּתָ֛א דִּ֥י בָבֶ֖ל מְהַלֵּ֥ךְ הֲוָֽה׃

29 பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
29 Twelve months later, as he was walking on the roof of the royal palace of Babylon,
29 ஓராண்டு சென்றபின், ஒருநாள் அரசன் பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான்.

30עָנֵ֤ה מַלְכָּא֙ וְאָמַ֔ר הֲלָ֥א דָא־הִ֖יא בָּבֶ֣ל רַבְּתָ֑א דִּֽי־אֲנָ֤ה בֱנַיְתַהּ֙ לְבֵ֣ית מַלְכ֔וּ בִּתְקָ֥ף חִסְנִ֖י וְלִיקָ֥ר הַדְרִֽי׃

30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
30 the king exclaimed, “Is this not Babylon the Great, which I myself have built by the might of my power as a royal residence and for the glory of my majesty?”
30 அப்பொழுது அவன், "என்வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்!" என்றான்.

31ע֗וֹד מִלְּתָא֙ בְּפֻ֣ם מַלְכָּ֔א קָ֖ל מִן־שְׁמַיָּ֣א נְפַ֑ל לָ֤ךְ אָֽמְרִין֙ נְבוּכַדְנֶצַּ֣ר מַלְכָּ֔א מַלְכוּתָ֖ה עֲדָ֥ת מִנָּֽךְ׃

31 இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
31 While the words were still in the king’s mouth, a voice came from heaven: “It is decreed to you, King Nebuchadnezzar, that the kingdom has departed from you.
31 இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே, வானத்திலிருந்து ஒரு குரலொலிகேட்டது: "நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்! உன்னுடைய அரசு உன்னிடமிருந்து அகன்று விட்டது.

32וּמִן־אֲנָשָׁא֩ לָ֨ךְ טָֽרְדִ֜ין וְֽעִם־חֵיוַ֧ת בָּרָ֣א מְדֹרָ֗ךְ עִשְׂבָּ֤א כְתוֹרִין֙ לָ֣ךְ יְטַעֲמ֔וּן וְשִׁבְעָ֥ה עִדָּנִ֖ין יַחְלְפ֣וּן עליך עַ֣ד דִּֽי־תִנְדַּ֗ע דִּֽי־שַׁלִּ֤יט עִלָּיָא֙ בְּמַלְכ֣וּת אֲנָשָׁ֔א וּלְמַן־דִּ֥י יִצְבֵּ֖א יִתְּנִנַּֽהּ׃

32 மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.
32 You will be driven away from mankind to live with the beasts of the field, and you will feed on grass like an ox. And seven times will pass you by, until you acknowledge that the Most High rules over the kingdom of mankind and gives it to whom He wishes.”
32 மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய். காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோலப் புல்லை மேய்வாய்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீ உணர்ந்து கொள்வதற்குள் ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும்."

33בַּהּ־שַׁעֲתָ֗א מִלְּתָא֮ סָ֣פַת עַל־נְבוּכַדְנֶצַּר֒ וּמִן־אֲנָשָׁ֣א טְרִ֔יד וְעִשְׂבָּ֤א כְתוֹרִין֙ יֵאכֻ֔ל וּמִטַּ֥ל שְׁמַיָּ֖א גִּשְׁמֵ֣הּ יִצְטַבַּ֑ע עַ֣ד דִּ֥י שַׂעְרֵ֛הּ כְּנִשְׁרִ֥ין רְבָ֖ה וְטִפְר֥וֹהִי כְצִפְּרִֽין׃

33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
33 At that moment the sentence against Nebuchadnezzar was fulfilled. He was driven away from mankind. He ate grass like an ox, and his body was drenched with the dew of heaven, until his hair grew like the feathers of an eagle and his nails like the claws of a bird.
33 உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று. மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான். மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்; தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கும்வரை அவனது உடல் வானத்தின் பனியினால் நனைந்தது.

Nebuchadnezzar Restored

34וְלִקְצָ֣ת יֽוֹמַיָּה֩ אֲנָ֨ה נְבוּכַדְנֶצַּ֜ר עַיְנַ֣י ׀ לִשְׁמַיָּ֣א נִטְלֵ֗ת וּמַנְדְּעִי֙ עֲלַ֣י יְת֔וּב ולעליא בָּרְכֵ֔ת וּלְחַ֥י עָלְמָ֖א שַׁבְּחֵ֣ת וְהַדְּרֵ֑ת דִּ֤י שָׁלְטָנֵהּ֙ שָׁלְטָ֣ן עָלַ֔ם וּמַלְכוּתֵ֖הּ עִם־דָּ֥ר וְדָֽר׃

34 அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
34 But at the end of those days I, Nebuchadnezzar, looked up to heaven, and my sanity was restored to me. Then I praised the Most High, and I honored and glorified Him who lives forever: “For His dominion is an everlasting dominion, and His kingdom endures from generation to generation.
34 குறித்த காலம் கடந்தபின், நெபுகத்னேசராகிய நான் என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே, என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது. நானோ உன்னதரை வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினேன்!அவரது ஆட்சியுரிமை என்றுமே அழியாது! அவரது அரசு வழிவழி நிலைக்கும்!

35וְכָל־דארי אַרְעָא֙ כְּלָ֣ה חֲשִׁיבִ֔ין וּֽכְמִצְבְּיֵ֗הּ עָבֵד֙ בְּחֵ֣יל שְׁמַיָּ֔א ודארי אַרְעָ֑א וְלָ֤א אִיתַי֙ דִּֽי־יְמַחֵ֣א בִידֵ֔הּ וְיֵ֥אמַר לֵ֖הּ מָ֥ה עֲבַֽדְתְּ׃

35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
35 All the peoples of the earth are counted as nothing, and He does as He pleases with the army of heaven and the peoples of the earth. There is no one who can restrain His hand or say to Him, ‘What have You done?’”
35 உலகின் உயிர்கள் அனைத்தும் அவர் திருமுன் ஒன்றுமில்லை! வான்படை நடுவிலும் உலகில் வாழ்வோர் இடையிலும் அவர் தாம் விரும்புவதையே செய்கின்றார்! அவரது வலிய கையைத் தடுக்கவோ 'நீர் என்ன செய்கிறீர்?' என்று அவருடைய செயல்களைப்பற்றி வினவவோ எவராலும் இயலாது!

36בֵּהּ־זִמְנָ֞א מַנְדְּעִ֣י ׀ יְת֣וּב עֲלַ֗י וְלִיקַ֨ר מַלְכוּתִ֜י הַדְרִ֤י וְזִוִי֙ יְת֣וּב עֲלַ֔י וְלִ֕י הַדָּֽבְרַ֥י וְרַבְרְבָנַ֖י יְבַע֑וֹן וְעַל־מַלְכוּתִ֣י הָתְקְנַ֔ת וּרְב֥וּ יַתִּירָ֖ה ה֥וּסְפַת לִֽי׃

36 அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.
36 At the same time my sanity was restored, my honor and splendor returned to me for the glory of my kingdom. My advisers and nobles sought me out, and I was restored to my throne, and surpassing greatness was added to me.
36 அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது; என் அரசின் மேன்மைக்காக என் சீரும் சிறப்பும் எனக்கு மீண்டும் கிடைத்தன; என் அமைச்சர்களும் உயர்குடி மக்களும் என்னைத் தேடி வந்தார்கள்; எனது அரசுரிமை மீண்டும் உறுதி பெற்றது. முன்னிலும் அதிக மாண்பு எனக்குக் கிடைத்தது.

37כְּעַ֞ן אֲנָ֣ה נְבוּכַדְנֶצַּ֗ר מְשַׁבַּ֨ח וּמְרוֹמֵ֤ם וּמְהַדַּר֙ לְמֶ֣לֶךְ שְׁמַיָּ֔א דִּ֤י כָל־מַעֲבָד֙וֹהִי֙ קְשֹׁ֔ט וְאֹרְחָתֵ֖הּ דִּ֑ין וְדִי֙ מַהְלְכִ֣ין בְּגֵוָ֔ה יָכִ֖ל לְהַשְׁפָּלָֽה׃

37 ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
37 Now I, Nebuchadnezzar, praise and exalt and glorify the King of heaven, for all His works are true and all His ways are just. And He is able to humble those who walk in pride.
37 நெபுகத்னேசராகிய நான் விண்ணக அரசரைப் போற்றிப் புகழ்ந்து, ஏத்திப் பாடுகின்றேன்; அவருடைய செயல்கள் யாவும் நேரியவை! அவருடைய வழிவகைகள் சீரியவை! ஆணவத்தின் வழிநடப்போரை அவர் தாழ்வுறச் செய்வார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Daniel Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
7 a Or Chaldeans
13 b Or an angelic watcher  or a messenger ; also in verses 17 and 23

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.